என் மலர்
நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ்"
- ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார்.
- ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
குஜராத்தில் அர்வல்லி மாவட்டத்தில் மோடசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்ட ஒரு நாள் குழந்தை அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது.
மோடசா-தன்சுரா சாலையில் ஆம்புலன்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் பின்புறத்தில் தீப்பிடிப்பதைக் கவனித்த ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஓட்டுநர் மற்றும் குழந்தையின் பெற்றோரின் உறவினர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால் பின்புறத்தில் இருந்த நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
குழந்தையுடன், குழந்தையின் தந்தை ஜிக்னேஷ் மோச்சி (38), டாக்டர் சாந்திலால் ரெண்டியா (30), மற்றும் செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் பணியில் தடயவியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- 2-வது நாளாக நேற்று 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை.
- கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள் வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பினர். தொடர்ந்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று 2-வது நாளாக 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அவர்களை கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.
சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது?
நெரிசலில் சிக்கி ஆம்பு லன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எத்தனை பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்? எத்தனை பேர் பிணமாக சம்பவ இடத்திலிருந்து ஏற்றி சென்றீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் உயிர்காக்கும் வாகனமான ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து 2 உயிர்களை பிரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு பெங்களூரு நகரில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சிவப்பு சிக்னல் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற 40 வயது இஸ்மாயில் மற்றும் அவரது மனைவி சமீன் பானு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உடனடியாக போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
- சிறை வாசலில்த.வெ.க. நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே ஆம்புலன்ஸ்க்கு இடையூறு ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதைதொடர்ந்து, நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் இன்று காலை திருச்சி சிரையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில்த.வெ.க. நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
- விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
- வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.
திருச்சியில் பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
வழிநெடுகிலும் தொண்டர்கள் பார்த்த கையசைத்தபடி வாகனத்தில் விஜய் வந்தார்.
இந்நிலையில், திருச்சி மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சார வாகனத்தின் மீது நின்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
த.வெ.க. விஜய் பரப்புரை வாகனத்தில் ஏறி நின்றி தொண்டர்களுக்கு கையசைத்து வணக்கம் தெரிவித்து உரையை தொடங்கினார்.
விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தின் நடுவில் நுழைந்தது. இபிஎஸ் பரப்புரை கூட்டத்தின்போது ஆம்புலன்ஸ் நுழைந்ததை போல், தவெக தலைவர் விஜயின் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் நுழைந்தது பேசும்பொருளாகியுள்ளது.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.
அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
- அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, இன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. அதனை சுற்றுவளைத்த அதிமுகவினர் ஆம்புலன்ஸை விரட்டியடித்தனர்.
ஆம்புலன்ஸ் வந்தபோது அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர்.
ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், திருச்சி துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
- அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
- மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
- மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
- மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எடப்பாடி எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைப்பார்த்து கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்றபோது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்துவிட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்துவிட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தைச் சேதப்படுத்தினர் என்றார்.
மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் என்று வெளியான அறிக்கை போலியானது.இந்த கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சங்கத் தலைவரின் பெயரையும், எங்கள் சங்க லட்டர் பேடை தவறாகவும், அவதூறாகவும் பயன்படுத்தி கண்டன அறிக்கையினை வெளியிட்டு உள்ளனர்.
இந்த தவறான செயல்களைச் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.
- நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அ.தி.மு.க.வினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என்றார்.
இதனிடையே, மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்துவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி. அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும் இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.
இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்சு வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதையும் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
- அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
- 108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.
சென்னை:
அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி நாங்க எங்க போனாலும் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார். பிரதான சாலையில் எடப்பாடி பழனிசாமி போகிறார். 1330 ஆம்புலன்ஸ் தமிழ்நாடு முழுவதும் செல்கிறது.
உயிர் காப்பதற்காக ஆம்புலன்ஸ் செல்கிறது. ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிரைக் காக்க வேண்டும். உயிர் காக்கும் சேவையாக ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது. இவர் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் வருகிறது என்று கூறுகிறார்.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று பழமொழி கூறுவார்கள். அது போல எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?
மருத்துவத்துறையில் பணியாற்றுபவர்கள் தொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை பார்த்து ஒரு மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.
அநாகரிகமான பேச்சை இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என்று கூறுவது நல்லதல்ல, அவர் இது போன்ற போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற சிறப்பான மருத்துவ சேவை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. அப்படிப்பட்ட தமிழக அரசின் மருத்துவ சேவையை குறை கூறி பேசும் அவரது செயல் தனது தரத்தை குறைத்துக் கொள்ளும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.






