என் மலர்
நீங்கள் தேடியது "trichy"
- திருச்சி அரசு பள்ளி மாணவிவை பாராட்டினர்
- சமூக அக்கறையில் சாதனை
திருச்சி:
உலகம் முழுவதும் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் கின்னஸ் சாதனையாளரும், திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியுமான சாய்னா ஜெட்லி பெண்கள் பாதுகாப்பு எண் 181 மற்றும் அவசர அழைப்பு எண் 100, தாய் மொழியை போற்றும் வகையில் முதல் எழுத்தான அ. மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 இவற்றை ஒரு மணி நேரம் கட்டை விரலால் தம் வைத்து 7 மீட்டர் அளவில் உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இவரை 17-வது வார்டு கவுன்சிலர் எஸ்.கே.சாதிக் பாட்சா நேரில் பாராட்டினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் இவரது சமூக அக்கறையை பெரிதும் பாராட்டினார். இவரது இந்த சாதனை ஜெட்லி புக் ஆப் ரெகார்ட்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ் ஆசிய பசிபிக் சாதனை ஆகிய புத்தகங்களில் இடம் பெற உள்ளது.
இவர் ஏற்கனவே 20 முறை உலக சாதனைகள் செய்தவர் பெற்றோர் பிரபல கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி சசிகலா ஆவார்.
- திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது
- இந்த வழக்கில் மொத் தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
திருச்சி:
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். இவரது டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் வையம்பட்டி அருகே இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் துப்பு எதுவும் துலங்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது .
புலன் விசாரணையின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தொழில் அதிபர் துரைராஜ் யமுனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் மொத்தம் 50 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். அவர்களில் டி.எஸ்.பி. மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் வக்கீல்கள் வாதம் நடைபெற்றது.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்களின் வாதம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (25-ந்தேதி) வழங்கப்படும் என நீதிபதி ஜெயக்குமார் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் திருச்சி மத்திய சிறை மற்றும் திருச்சி மகளிர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது, கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளிகளான சாமியார் கண்ணன், யமுனா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக சாமியார் கண்ணனுக்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறை, கூட்டு சதியில் ஈடுபட்டதற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டுகளும், கார் எரிக்கப்பட்டதற்கு தலா 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு வழங்கினார்.
- இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
- கலெக்டர் உத்தரவுப்படி, ரஞ்சித் அர்ஜூனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தை 2-வது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்அர்ஜூன் (வயது 27). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதையடுத்து இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, ரஞ்சித் அர்ஜூனை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
- லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.அசோக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 18-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருப்பதால்
இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர்,
மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் சாரம் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திருச்சி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசியதாவது:

அப்போதெல்லாம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்கள். தற்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள் . அப்போதெல்லாம் மீனவர்கள் மீன்களை பிடித்தார்கள். தற்போது மீனவர்களையே பிடிக்கிறார்கள். அப்போது வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்கள் இப்போது கட்சியையே விலைக்கு வாங்குகிறார்கள். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மேலும் பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களுக்கானது. விவசாய கடன் கட்ட முடியாதவர்கள் மீது குற்ற வழக்கு போடப்படாது. பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி அவர்கள், ரபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.
மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது. பாஜகவின் சேவகர்களாக அதிமுக உள்ளது. இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
ராகுல் காந்தி மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால் ஆரம்பகால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள் , ஏழைகள் பற்றி யோசித்தீர்களா? கார்ப்பரேட்களுக்கு தான் மோடி காவலாளி. பணமதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
திருச்சி பெரியகடை வீதி ஜாபர்ஷா தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை ரெங்கநாதன் (56) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் நிறுவனத்தை பூட்டி சென்றார்.
இன்று காலை நிதி நிறுவனத்தை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெங்கநாதன் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மாயமாகியிருந்தது.
இது குறித்து உடனடியாக அவர் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருட்டு சம்பவம் நடைபெற்ற நிதி நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி, தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இன்று வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமாவளவன், திருநாவுக்கரசர், இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கோவையில் வருகிற 8-ந்தேதி நடைபெறும் மாபெரும் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஏற்கனவே அவர் மதுரை, திருப்பூர், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார்.
4-வது முறையாக அவர் தமிழகம் வருவதால் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் தமிழகத்திற்கு வரவழைத்து பிரசாரம் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி 8-ந்தேதி தமிழகம் வருவதால் அவர் வந்து சென்ற பிறகு ராகுலை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.
அநேகமாக வருகிற 10-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ந் தேதி அவர் வேறு ஒரு மாநிலத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் 9-ந் தேதியே ராகுலை தமிழகத்துக்கு அழைத்து வரவும் ஆலோசனை நடந்து வருகிறது.
எனவே ராகுலின் சுற்றுப்பயண திட்டத்தை பொறுத்து அவர் 9 அல்லது 10-ந்தேதிகளில் தமிழகம் வருவார் என்பது உறுதியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தி.மு.க. கூட்டணியில் புதுவை உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகுதிகளும் அருகில் இருப்பதால் திருச்சியை வசதியான இடமாக கருதி ராகுல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
ராகுல்காந்தி திருச்சியில் பிரசாரம் செய்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கூறி வருகிறார்கள்.
மேலும் பிரச்சார கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியையும் தொடங்கியுள்ளனர். திருச்சி பொன்மலை ஜி.கார்னர், தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 13-ந்தேதி நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் மீண்டும் ராகுல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு வர இருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் புதுவை உள்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எனவே புதுவை மற்றும் தமிழகத்துக்கு வசதியாக ஏதாவது ஒரு நகரத்தில் ராகுல் பிரசாரத்துக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதன்படி திருச்சியை தேர்வு செய்துள்ளனர். விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய தொகுதிகளும் அருகில் இருப்பதால் திருச்சியில் ராகுல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி ராகுல் பிரசாரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளையும் பரிசீலித்து வருவதாகவும் ராகுலின் மற்ற மாநில சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் இரண்டில் ஒரு தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ராகுல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #RahulGandhi
திருச்சி:
திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் சின்ன ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 52), கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் முத்து (50).
முத்துவிற்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராஜகோபால் மற்றும் முத்துவின் வீடு அருகருகே உள்ளது. முத்துவின் மகள் கோகிகலாவை லால்குடி பெருவளநல்லூரைச்சேர்ந்த புரோட்டா மாஸ்டர் சக்திவேல் (32) திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. எனவே சக்திவேல் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் ராஜகோபால் குடும்பத்திற்கும், முத்து குடும்பத்திற்கும் வீட்டு அருகில் உள்ள தென்னை மரத்தில், தேங்காய் பறிப்பது தொடர்பாக அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முத்துவின் மகன்கள் வீட்டருகில் உள்ள மரத்தில் தேங்காய் பறித்துள்ளனர்.
அப்போது தேங்காயில் தங்களுக்கும் பங்கு கொடுக்கும்படி ராஜகோபாலின் மகன்கள், முத்து குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜகோபால் குடும்பத்தினர், முத்துவின் மகன்களை தாக்கியுள்ளனர்.
இது குறித்து இரவில் வீட்டிற்கு வந்த புரோட்டா மாஸ்டர் சக்திவேலிடம் முத்துவின் மகன்கள் புகார் கூறியுள்ளனர். தனது மனைவியின் சகோதார்களை தாக்கியது தொடர்பாக சக்திவேல், சின்ன மாமனார் ராஜகோபாலிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் இருந்த கல்லை எடுத்து சின்ன மாமனார் ராஜகோபாலை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சுப்பையா நேரில் சென்று கொலை செய்யப்பட்ட ராஜகோபால் உடலை கைப்பற்றினார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த பின்னர் ராஜகோபால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, புரோட்டா மாஸ்டர் சக்தி வேலை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
லால்குடி:
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், துறையூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து 564 காளைகள் கலந்து கொண்டன. 254 காளையர்கள் பங்கேற்று, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகள் முட்டியதில் 9 பேர் காயமடைந்தனர்.
போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், மொபட், சில்வர் குடம், தங்க, வெள்ளி காசுகள் என்று சுமார் ரூ.5 லட்சத் துக்கு மேல் பரிசுகள் வழங்குவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் வழங்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர்.
இதனால், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திய விழா குழுவினரால் பரிசுகள் வழங்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #Jallikattu #Election