என் மலர்
நீங்கள் தேடியது "campaign vehicle"
- பிரத்தியேக பிரசார வாகனம் தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
- வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள இருக்கும் பிரசார பயணத்தின்போது அவர் பயன்படுத்தக்கூடிய பிரத்தியேக பிரசார வாகனம் இன்று மதுரைக்கு கொண்டுவரப்பட்டு தொடக்க விழா நடைபெறும் மேடைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 4 திசைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பிரசார பயணத்தின் போது ஓட்டுநர் அருகே அமரக்கூடிய நயினார் நாகேந்திரன் அமரும் இடத்தில் சாலையை நோக்கியவாறு ஒரு கண்காணிப்பு கேமர, பிரசார வாகனத்தின் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் தலா ஒரு கேமரா, வாகனத்திற்குள் படிக்கட்டில் ஏறும் இடத்தில் ஒரு கேமரா என மொத்தம் வாகனத்தை சுற்றிலும் 4 கேமராக்களும் வாகனத்திற்குள் ஒரு கேமரா என மொத்தம் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பிரசார வாகனத்திற்குள் கழிப்பறை வசதி மற்றும் வரக்கூடிய தலைவர்களோடு கலந்துரையாடுவதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரசாரத்தின்போது வாகனத்தின் மேற்கூரை பின்னோக்கிச் செல்லும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரசார வாகனத்தில் நந்தி சிலை பொறிக்கப்பட்ட செங்கோலுடன் பிரதமர் மோடி இருகரம் கூப்பி வணங்குவது போன்றும், அய்யன் திருவள்ளுவர் சிலை, ராமேசுவரம் பாலம், வந்தே பாரத் ரெயில் உள்ளிட்ட பாஜக-வின் செயல் திட்டங்களை விளக்கும் வண்ணம் படங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி ஒன்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகார் பெட்டியில், "விடியல, முடியல" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- தமிழகம் முழுவதும் நாளை முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
- விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார்.
2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) முதல் தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை காலை 10.30 மணிக்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்குகிறது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள திறந்தவெளி பிரசார வாகனத்தில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் அலுவலகம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை செல்கிறார். அங்கு திறந்த வேனில் நின்றபடி அரை மணிநேரம் உரையாற்றுகிறார்.
முன்னதாக பிரசார வாகனம் சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இருந்து பிரச்சார வாகனம் திருச்சிக்குப் புறப்பட்டது.
உங்கள் விஜய் நான் வரேன் என்ற வாசகத்துடன் பனையூரில் இருந்து பிரச்சார வாகனம் புறப்பட்டது.
அதன்படி, திருச்சியில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.
- தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- கூட்டணி, பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வேலை செய்து வருகின்றன.
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, கூட்டணிகள், பிரச்சாரங்கள் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
ஏற்கனவே, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க சார்பில் பிரேமலதா ஆகியோர் தங்களது சுற்றுப்பயணங்களை செய்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பா.ஜ.க. சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்க உள்ளார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக தயார் செய்துள்ளார்
இந்நிலையில், பிரசார வாகனத்தின் எண் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய காரின் எண் என்பதை அறிந்த நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அதில் பா.ஜ.க. கொடியை பொருத்தி வாகனத்தை இயக்கிப் பார்த்தார்.
- முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
புளியங்குடி:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நலதிட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக தென்காசி மாவட்டதிற்கு நாளை வருகிறார்.
துண்டுபிரசுரம்
இந்நிலையில் முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நிகழ்ச்சி டி.என். புதுக்குடி காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் கமீது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பிரசார வாகனம்
மேலும் முதல்-அமைச்சரின் வருகையை தெரிவிக்கும் வகையில் பிரசார வாகனத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்சியில் நகர தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன.
- அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.
கோவை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்வற்றை மும்முரமாக செய்து வருகின்றன. வேட்பாளர் தேர்வு முடிந்ததும், வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரசாரத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். வீதி, வீதியாக சென்று மக்களிடம் ஓட்டு சேகரிப்பார்கள்.
இதற்காக அவர்களுக்கு பிரத்யேக பிரசார வாகனங்களும் தயார் செய்யப்படும். அந்த வாகனங்களில் சென்று தான் அவர்கள் பிரசாரம் செய்வார்கள்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் பெரும்பாலும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் செய்யப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தான் பலருக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரன், போன்றவர்களுக்கும் பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தலைவர்களுக்கான பிரசார வாகனம் தயாரிக்கும் பணிகள் கோவையில் தொடங்கிவிட்டது. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தலைவர்களுக்கான பிரசார வாகனம் பிரத்யேக வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த பிரசார வாகனம் தயாரிக்கும் நிறுவத்தின் உரிமையாளரான முகமது ரியாஸ் கூறியதாவது:-
நாங்கள் 55 வருடங்களுக்கு மேலாக பிரசார வாகனங்கள் தயார் செய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறோம். பல முக்கிய தலைவர்களுக்கும் நாங்கள் பிரசார வாகனத்தை தயாரித்து கொடுத்துள்ளோம். 95 சதவீதம் நாங்கள் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு பிரசார வாகனங்களை தயார் செய்து கொடுக்கிறோம்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்கு பிரசார வாகனம் தயாரித்து கொடுத்துள்ளோம்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கு, அவர்கள் விரும்பும் வகையில், அவர்கள் கேட்க கூடிய அனைத்து வசதிகளுடன் செய்து கொடுக்கிறோம்.
முன்பெல்லாம் அரசியல் தலைவர்கள், வீட்டில் இருப்பது போன்ற அனைத்து வசதிகளும் பிரசார வாகனத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினர். அதற்கு ஏற்ப பிரசார வாகனங்களில் படுக்கை, அமருவதற்கு ஷோபா, கழிப்பறை, எல்.இ.டி வி, மற்றும் விளக்குகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தலைவர்கள் நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்களை விரும்புவதில்லை.
அவர்கள் பெரும்பாலும் சுழலும் இருக்கை, திறந்த கூரை, கால்களை அகலமாக நீட்டிக்கொள்வதற்கு வசதியான படிகள், தலைவர்களுடன் வரக்கூடிய பாதுகாவலர்கள், முக்கிய நிர்வாகிகள் நிற்பதற்கு வசதியாக அகலமான படிக்கட்டுகள், பொதுமக்களை பார்க்கும் வகையில் 360 டிகிரி கோணத்தில் சுழலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கும் வகையில் அமைத்து தரும்படி தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப நாங்களும் வாகனங்களை தயாரித்து வருகிறோம்.
கூடுதல் வசதிகள் அவர்கள் விருப்பப்பட்டு கேட்டால் அதனையும் செய்து கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
அரவேணு:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோத்தகிரி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாநில துணை தலைவர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் சலீம், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். பிரசாரத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்தை பணி வரன் முறை செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் பணி சுமை அவலநிலை குறித்து விளக்கினார்
“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட, 1.1.2019 முதல் அமலுக்கு வர உள்ள பிளாஸ்டிக் தடையை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மூன்று மண்டல ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயலாற்ற தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை கொண்ட ஏழு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 23.8.2018 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தினை துவக்கி வைத்தார்.
அதற்கான இலச்சினையை அறிமுகம் செய்து, கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்து, பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த குறும்படங்களை வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட விளம்பரத்தூதரையும் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன், சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு தொழில் துவங்க காசோலைகளையும் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பிரச்சார வாகனம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ்நாடு அரசின் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த உறுதுணையாக இருக்கும்.
நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். #Edappadipalaniswami






