என் மலர்
நீங்கள் தேடியது "Leaders"
- திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது.
- புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
திருப்பூர் :
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் துறையினர் 84 பேர், உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்தவகையில், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கிளைக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான புதிய தலைவராக பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கீதா; துணை தலைவராக அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். புதிய நிர்வாகி களுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
திருப்பூரில் சி.ஐ.ஐ., கிளை துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக தற்போது, ஒரு பெண் தொழில்முனைவோர், கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நகர-வட்டார தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ராஜபாளையம்
விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் 3 நகர தலைவர்கள், 10 வட்டார தலைவர்கள் பதிவிகள் உள்ளது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புதிய தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையினால் அங்கீகரி க்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நகர, வட்டார காங்கிரஸ் தலைவர்களை மாவட்ட தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதில் ராஜபாளையம் நகரத் தலைவராக சங்கர் கணேஷ், சாத்தூர் நகர தலைவராக அய்யப்பன், ஸ்ரீவில்லி புத்தூர் நகர தலைவராக வன்னியராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ராஜ பாளையம் மேற்கு வட்டார தலைவராக கணேசன், ராஜபாளையம் கிழக்கு வட்டார தலைவராக கோபால கிருஷ்ணன், வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார தலைவராக கணேசன் வெம்பக்கோட்டை வடக்கு தலைவராக செல்வக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவராக பவுல்ராஜ், சாத்தூர் மேற்கு வட்டார தலைவராக கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு வட்டார தலைவராக பாலகுருநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு வட்டார தலைவராக முருகராஜ், வத்ராயிருப்பு மேற்கு வட்டார தலைவராக லட்சுமணன், வத்ராயிருப்பு கிழக்கு வட்டார தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் அறிவிக்கபட்டுள்ளனர்.
இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.
ஈரோடு:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்ய–ப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா காலகட்டத்தில் இந்து முன்னணி பிரமுகர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்று உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ளதாக கருதப்படும் இந்து முன்னணி பிரமுகர்கள் 7 பேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீஷ், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி,
ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ், மேற்கு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணசாமி, சேலம் கோட்ட செயலாளர் பழனிச்சாமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்ப–ட்டுள்ளது. இவர்களுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது போலீசார் உடன் செல்வார்கள். இந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வரும் விநாயகர் சதுர்த்தி வரை தொடரும் என போலீசார் தெரிவித்து–ள்ளனர்.
- மானாமதுரை அருகே சட்ட விழிப்புணர்வு முகாமில் இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உண்மையாக்க வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.
- மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்-சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். கல்வி ஒன்று தான் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு துணை நிற்கும். ''இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்'' என்பதை மாணவர்கள் உண்மையாக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்த முகாமில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் வனராஜன், பள்ளி தாளாளர் சேவியர் சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர் செல்வன் ஆகியோரும் பேசினர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்களான நாகேந்திரன், காளிதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-
அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-
இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-
நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday
நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கும் இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கட்சியினருக்கு கவலையை அளித்து உள்ளது.
கோவா முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் கோவாவில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக புகார் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருப்பது ஆட்சியினருக்கும் கட்சியினருக்கும் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது தெரியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நுரையீரல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்(அமைப்பு) ராம்லால் காய்ச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தகவல் தொடர்பு உறுப்பினர் கெச்சாண்டு சர்மா வழக்கமான உடல் பரிசோதனைக்காக கைலாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளேன். யாரும் கவலைப்படதேவையில்லை. விரைவில் நான் வீடு திரும்புவேன்‘ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று(வெள்ளிக்கிழமை) பார்வையிடுவார் என தெரிகிறது. #BJP
‘‘தமிழர் தந்தை’’ சி.பா.ஆதித்தனார் தமிழ்ப் பத்திரிகை உலகில் முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.
தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர், கூட்டுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை எழும்பூரில் 5 சாலைகள் சந்திக்கும் பகுதியில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு அந்த சிலையை திறந்து வைத்து அந்த பகுதி சாலைக்கு ‘‘சி.பா.ஆதித்தனார் சாலை’’ என்றும் பெயர் சூட்டினார்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வி.ஜி.சந்தோஷம், டாக்டர் கருணாநிதி, தண்டுபத்து ஜெயராமன், திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் ராமராஜா, எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் இ.சி.சேகர், வேல் ஆதித்தன், கே.எஸ்.அரிபாபு, நித்யானந்தம்.
தி.மு.க. நிர்வாகிகள் சிம்லா முத்துசோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமோதரன், நிர்வாகிகள் சூளை ராமலிங்கம், காஜா மொய்தீன்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், ஜீவன், சுப்பிரமணியன், சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், நிர்வாகிகள் நன்மாறன், நிசார், பூங்கா நகர் ராமதாஸ்.
த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிவபாலன், ஐசக் வில்சன், காளியப்பன், ஆர்.எஸ்.முத்து, லோகநாதன், ஆர்.சம்பத்குமார், வேலா, ஸ்டீபன், நாஞ்சில் நேசையா, தி.நகர் கனகராஜ்.
பா.ஜனதா வர்த்தகர் அணி மாநில தலைவர் ராஜா கண்ணன், மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் எஸ்.ஆர்.ராமையா, வன்னியராஜன், பட்டுராமசுந்தரம்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் புழல் தர்மராஜ், மோகன், பாலாஜி, ராபர்ட், அய்யர், விக்டர், முருகேசபாண்டி, நாகராஜ், பொன்ராஜ், சக்தி முருகன், ரவிச்சந்திரன், செல்வராஜ், அருணாசல பாண்டியன், மாரிமுத்து, ஜெயபால், எஸ்.கே.மணி, ஜஸ்டின் சாம்ராஜ்.
சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் எம்.கண்ணன், ஆர்.பாஸ்கர், பி.என்.குமார்.
தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி, மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் கருணாகரன்.
காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொருளாளர் டி.எம்.பிரபாகரன்.
விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் செங்கோடன், பம்மல் கார்த்திக், கோபால், நெல்லை சண்முக சுந்தரம், முருகேசன், சங்கர், முத்து ராஜ், குமார், வெங்கடேசன், வடிவேல், வாசுகி, தனசுந்தரம், குணசுந்தரம், குமார் பாபு, மூர்த்தி.
அகில இந்திய சமத்துவ கழக தலைவர் ஆர்.ராஜேஷ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் பா.இசக்கி முத்து, மணியரசன், அருள்ரூபன்.
சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொது செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் செல்லத்துரை, துணை தலைவர் தாமஸ், இந்திய நாடார்கள் கூட்ட மைப்பு துணை தலைவர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.
சென்னை வாழ் கொளத்தூர் நாடார் சங்க கவுரவ தலைவர் எஸ்.பாண்டியன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், ஆவுடையப்பன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொது செயலாளர் சுந்தரேசன்.
சென்னை வாழ் கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் ஜூலியட், வண்ணாரப் பேட்டை நாடார் சங்க தலைவர் ராஜன், பொருளாளர் ராஜேஷ், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மனாபன், சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொது செயலாளர் மாரிதங்கம், துணை தலைவர்கள் எஸ்.ஆர்.பி.ராஜன், இமானுவேல், பொருளாளர் குணசீலன்.
பெரம்பூர் வட்டார நாடார் சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணசாமி, சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், சிங்கராஜா, பொன்குமார், முருகேசன், பால்ராஜ், சமுத்திரபாண்டி, மாரியப்பன், ஆறுமுகலிங்கம், சந்திரசேகர்.
சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ் நாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க செயலாளர் மாடசாமி, தங்கதுரை, துணை செயலாளர் ராஜன், துணை தலைவர் செல்வகுமார், மாரீஸ்வரன், கிறிஸ்டோபர், கனகராஜ், வியாசை சுற்று வட்டார நாடார் இளைஞர் பேரமைப்பு காப்பாளர் காம ராஜ், கவுரவ தலைவர் ஆத்தியப்பன், தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் தவசிராஜன்.
நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொது செயலாளர் கு.சுந்தரேசன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் பூபாண்டியன், துணை செயலாளர் ராஜா, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், துணை பொது செயலாளர் மார்க்கெட் ராஜா.
சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, ஒருங்கிணைப்பாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயமணி, அமிர்தராஜ், கற்குவேல் ராஜன், அய்யப்பசாமி, தனியரசன், ராம்ஜித், ஜெயசந்திரன், இனாம் கரிசல்குளம் நாடார் உறவின் முறை துணை செயலாளர் விஜயகுமார், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பெருமாள், பிரித்திவிராஜ், விஜயகுமார், அமிர்தராஜ், மரிய சந்தோஷம், தமிழ்நாடு நாடார் சங்க காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரவி.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மகேஷ்வரன், எட்வர்ட், செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன்.
மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல், பொருளாளர் ஷேக் முகைதீன், வினோத் பாபு, கே.ஏ.மாரியப்பன், ராமசாமி, சண்முக சுந்தரம், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராபர்ட்.
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.பி.முத்து பாண்டியன், பாலமுனியப்பன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.
தென்காசி கப்ளிமுஸ்தபா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் தோப்புமணி, தென் சென்னை மாவட்ட தலைவர் இந்துநாதன், துணை செயலாளர் ஊதான்ஸ், அம்பேத்கார் சேகர், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, முல்லை பிரைட்டன், ஆதித்தனார் முரசு கணேசா, ஆறுமுக கண்ணன், மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிதலைவர் தங்க பெருமாள்.
இட்லி இனியவன், தொழில் அதிபர் சபேஷ் ஆதித்தன், ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, பொருளாளர் சமுத்திர பாண்டியன், பொது செயலாளர் ஸ்டீபன், செயலாளர் சோலை கணேஷ், சந்தனா சேகர், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை மண்டல செயலாளர் பால் பாண்டியன். #SPAdithanar #AdithanarBirthday

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம்.
அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயன், மகிழன்பன், இ.சி.சேகர், நாகராஜ், பெரம்பூர் மகேஷ், வேளாங்கண்ணி.
தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், சூளை குப்புசாமி.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், சக்தி சிவகுமார், வீரபாண்டியன், தாமோதரன், ரவிராஜ், முத்தமிழ், சீதாராமன், சேகர், அன்பழகன், பன்னீர், கோல்டன் ரவி, தணிகை வேல், ஜெகதீஷ், ராமலிங்கம், அன்பழகன், எம்.எஸ்.திரவியம், ராமசாமி, சித்ரா.கிருஷ்ணன், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வேலுத்தேவர், சக்திவேல், ஜவகர், முகமது பாரூக், தமிழ்ச்செல்வன், சூளை ராஜேந்திரன், வக்கீல் நரேஷ்குமார்.
பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், ஜெய்சங்கர், தனஞ்செயன், ஏழுமலை, சாய் வெங்கடேசன், முரளி.
ம.தி.மு.க. நிர்வாகிகள் கணேசமூர்த்தி, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சுப்பிரமணி, நன்மாறன், மைக்கேல்ராஜ், பூமிநாதன்.

விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்லத்துரை, ரவிசங்கர், ராஜேந்திரன், எழில் இமயன், சேத்துப்பட்டு இளங்கோ, ஜேக்கப்.
த.மா.கா. நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோ கரன், ரவிச்சந்திரன், டி.சிவ பால், நாஞ்சில் நேசையா.
தே.மு.தி.க. நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லதம்பி, விசாகராஜன், பூங்கா ரமேஷ், பிரபு, பாஸ்கர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசு, வாகைவேந்தன், பார்த்த சாரதி, ராஜா, சாலமன், சரவணன், விக்னேஷ், விமல்ராஜ்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தானம், சிவகுமார், வைகுண்டராஜா, வி.பி.அய்யர், விக்டர், ராபர்ட், மாங்காடு முருகேச பாண்டி, பொன்ராஜ், கருணைதாசன்.
புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஆர்.டி.சேது ராமன், ராஜாராம், எஸ்.பழனி, செல்வம், சுதர்சன், மனோகரமூர்த்தி.
தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யா மொழி, மாநில செயலாளர் கருணாகரன்.
தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், நிர்வாகிகள் அப்துல்சபிக், ஸ்ரீதர், தர்மேஷ், விஜய் ஆனந்த், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், தீபா பேரவை மாதவன்.
அகில இந்திய காந்தி - காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணிஅரசன், ஐகோர்ட்டு வக்கீல் இரா.சிவசங்கர்.
சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் பி.தங்கமுத்து, அனியாப்பூர் ராஜகோபால், தமிழ்நாடு நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் மணிமாறன், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன், தமிழ்நாடு பனை வளர்ச்சி கழக முன்னாள் இயக்குனர் பார்வதிமுத்து, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார், எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, இட்லி இனியவன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலா ளர் கார்த்திகேயன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார், அகில இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை கண்ணன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க மத்திய செனனை மாவட்ட தலைவர் வில்லிவாக்கம் பிரபாகரன்.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் ராஜசேகரன் நாடார், சி.திருப்புகழ் நாடார், எஸ். சிங்கராய நாடார், சாமுவேல், தேவராஜ் சீலன், செந் தில்குமார், சரவணபவன், ஹரிதாஸ், சேம் நாடார், நாகராஜ் நாடார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.
அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற் சங்க பேரவை தலைவர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு, கார்த்திகேயன், குகன்கோபிநாத், பாலமுருகன், முத்துக்குமார், நந்தகுமார், மவுலிவாக்கம் சுற்றுவட்டார நாடார் சங்க தலைவர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் பாஸ்கர், துணை பொதுச்செயலாளர் பொன்ராஜ்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணி ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், துணை செயலாளர் வன்னியரசு, இணை செயலாளர் நாகராஜன், அனியாப்பூர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல் நாடார், பொருளாளர் மனோகரன், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் தங்கபெருமாள், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மகளிரணி தலைவி சுந்தரமீனாட்சி, தேரடி ராஜன், சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சாலமோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் செல்வராஜ், காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆலோசகர் வைரவராஜன்.
ஆலந்தூர் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஆலந்தூர் கணேசன் நாடார், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், பொதுச்செயலாளர் பால் ராஜன், பொருளாளர் நம்புசாமி, ஆலோசகர் முத்து, வீரமாமுனிவர் தமிழ் சங்க தலைவர் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம், செயலாளர் அப்துல்ஹாரி, பொருளாளர் சுந்தரசேகர், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகவேல், ஞானசேகர், முல்லைராஜா, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் முத்துக் குமார், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க செயலாளர் ஆர்.செல்வகுமார், பொருளாளர் சி.லட்சுமணன், தங்கமுத்து நாடார், சின்னமணி நாடார், கொட்டிவாக்கம் முருகன், வன்னிய ராஜன்.
அயனாவரம் ரஜினிராஜ், சுரேஷ்குமார், பிரபாகரன், செல்வம், கணபதி, ஜெய், தமிழன்னை செய்தி ஆசிரியர் ரவி, பார்க்கவ குல சங்க நிர்வாகி தனபால் உடையார், சந்தானம், தங்கவேல் உடையார், செல்வ கண்ணன், மகாலட்சுமி, சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் நாகராஜன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சந்திரபாபு, சந்திரன், மோகன், பாஸ்கர், கந்தவேல், ராஜேந்திரன், அந்தோணி, உஷாராணி, ஹரி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற திருவொற்றியூர் நகரத் தலைவர் முல்லைராஜா, நிர்வாக குழு உறுப்பினர் ஜாம்ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க துணை பொதுச் செயலாளர் பாஸ்கர் ராஜா, மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகர், அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக தலைவர் காட்ஸ்பிரே நோபிள், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, நற்பணி மன்ற மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.
பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், முருகேசன், பால்ராஜ், அய்யங்கண்ணு. #spadithanar
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் ஆவார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்
காங்கிரசின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான, மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், தொண்டர்களும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். #rajivgandhi #deathanniversary #leaderspayhomage