search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Political"

    • தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மேலும் சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. அதேபோல் தமிழகத்தில், தான் மேற்கொள்ளவுள்ள பாத யாத்திரை குறித்தும் அமித் ஷாவிடம் அண்ணாமலை விளக்கினார்.

    இந்த சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Republicday
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

    ‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    என்.ஆர்.தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday


    தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிப்பாளையத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

    இதில் கலந்து கொள்ள நடுப்புணி சாலையில் இருந்து விழா நடைபெற்ற இடம் வரை ரேக்ளா மாட்டு வண்டியில் வந்தார்.

    அங்கு நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். பின்னர் புரவிப்பாளையம் பொது மக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    பானை பொங்கியபோது பெண்கள் குலவையிட்டு மகிழ்ந்தனர். அதன் பின்னர் அங்கு வரிசையாக அமர்ந்திருந்த பொது மக்களுக்கு பொங்கல் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டார்.

    விழாவில் அவர் பேசும் போது, தமிழை பயிற்றுவிப்பது ஆசிரியர்களாக இருந்தாலும் தமிழ் பேசி வாழ வைப்பது தமிழக மக்கள் தான். பறை, உருமிமேளம் ஆகியவை எனது உறவினர் போன்றது. அடுத்த பொங்கலின் போது தமிழகத்தில் மாற்றம் வரும் என்றார்.

    முன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சான்றோன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 பேருக்கு விருது வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    இந்த சான்றோன் விருது கட்சி பொறுப்பாளர்கள் முன் வழங்கப்படுகிறது. இது எதற்காக என்றால், விருது பெற்ற அனைவருமே தன்னலம் இன்றி பல துறைகளில் சேவை புரிந்தவர்கள்.

    எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் தன்னலம் இன்றி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் விருது பெற்றவர்களைப்போலவே பாடுபடவேண்டும் என்பதற்காகத்தான். எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் போராளிகளாக இருக்கவேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி நாட்டுக்காக உழைக்கும் போராளிகளாக இருக்க வேண்டும்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் சுருதிஹாசன், அக்‌ஷராஹாசன் ஆகியோர் வாரிசுகளாக அரசியலுக்கு வரமாட்டார்கள். பெயர் தெரியாதவர்கள்தான் கட்சியின் பொறுப்பில் வரவேண்டும் என நினைக்கிறேன்.

    சாதனை என்பது சொல் அல்ல செயல். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் பறக்கவேண்டும். நமது கட்சியை குறுக்கு வழியில் கொண்டு செல்லமாட்டேன்.

    மக்கள் நீதி மய்யம் என்ற மரத்தை தொண்டர்கள் வளர்க்கவேண்டும். அணிலாக நாம் இவ்வளவு நாள் இருந்துவிட்டோம். வில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் உள்ளதால் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றவேண்டும். தமிழகத்தில் சிறு, குறு தொழில் தொடங்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.

    அண்டை மாநிலங்களை விட தமிழகம் பின்தங்கி உள்ளது. ஆகவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்லவேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan
    தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical
    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தனது அரசியல் வருகை பற்றி பிரபல ஆங்கில ஊடகத்துக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்குப் பதிலளித்த ரஜினி, "அவர் நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்" எனக் கூறினார்.

    தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், “தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள்.

    ஆனால் அவர்கள் தங்களது திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்து விட்டார்கள். எல்லாம் இருந்தாலும் அவற்றை ஒழுங்காக நிர்வகிக்கத் தெரியவில்லை. தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் அது மிக முக்கியமானது. அவர்கள் வாக்குகளைப்பெறுவதை விட இது மிகவும் முக்கியமானது.

    மக்களுக்கு அரசியல் அறிவை அளிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்பதை விட, அறிவை அளிப்பதே முக்கியம். மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், அவர்களுக்கு நாம் கைமாறு செய்ய வேண்டும்.

    நான் எப்போதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்து பார்க்க நினைத்ததில்லை. தொடக்கத்தில் இருந்தே இரண்டையும் தூரத்திலேயே வைத்து இருந்தேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுது போக்கிற்கு மட்டுமே.


    எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல்வாதி. சினிமா நடிகர் அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை எம்.ஜி.ஆர். தான் நிரூபித்துக் காட்டினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் எல்லோருக்கும் அவர்தான் ரோல் மாடல். எனக்கும் அவர் தான் ரோல்மாடல். அதேபோல் தான் ஜெயலலிதாவும். அவர் மிகவும் வலுவான பெண்.

    கமலுக்கும் எனக்கும் எந்த சண்டையும் இல்லை. எனக்கும் அவருக்கும் போட்டி கூட இல்லை. அவர் ஒரு நல்ல நண்பர். அவர் எனக்கு நிறைய இடங்களில் உதவி இருக்கிறார். அவர் இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பர்தான். அவர் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.

    இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியில் கூறி உள்ளார். #Rajinikanth #Rajinikanthpolitical #PMModi
    ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை என்று நடிகை விஜயசாந்தி அறிவுரை வழங்கியுள்ளார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    ஐதராபாத்:

    நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர்.

    1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

    ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார்.

    ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-


    திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன்.

    இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது. ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும். நிற்கவேண்டும். இவை எல்லாம் கடினமாக இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #KamalHaasan #VijayaShanti
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernor #BanwarilalPurohit #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர்களை சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்திருந்தார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாக கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சியில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அதன்பிறகு நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கவர்னர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லியில் 2 நாட்கள் இருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட நிபுணர்களிடனும் விவாதிப்பார் என தெரிகிறது.

    இதனால் தமிழக அரசியல் நிலவரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. #TNGovernor #BanwarilalPurohit  #MLAsDisqualificationCase
    வருகிற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #BJP #TamilisaiSoundararajan #TNPolitical
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பா. ஜனதா கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    மிக மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி மறைவால் அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை.

    அரசியலையும் கடந்து முதுபெரும் தலைவர் என்ற நிலையில் அவருக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்தது. இது எங்கள் அரசியல் பண்பாடு.

    எங்களை பொறுத்தவரை தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும். அதற்காக கட்சியை குக்கிராமங்கள் வரை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

    வருகிற தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.


    மத்தியில் ஆளும் மோடி அரசு மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே மக்களின் ஆதரவு பா.ஜனதா பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேத பாதிப்புகளுக்கு உதவுவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் கேரள மக்களுக்கு உதவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #TNPolitical
    குற்றாலத்தில் எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏக்கள் 4 பேர் திடீரென்று தினகரனுடன் சந்தித்து பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #edappadipalanisamy #dinakaran

    நெல்லை:

    மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை வந்தார். அவர் நேற்று பகலில் நெல்லை மாநகர் மாவட்ட பகுதியில் பல இடங்களில் சென்று மக்கள் மத்தியில் பேசினார்.

    இரவில் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். டி.டி.வி தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 16 பேர் குற்றாலம் சென்று தங்கினர்.

    அவர்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை . அவர்கள் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கை வாபஸ் பெறப் போவதாக கூறிய தங்க தமிழ் செல்வனும் அவர்களுடன் பேசி உள்ளார். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

    இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் இன்று டி.டி.வி.தினகரனை திடீர் என்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    அதன் பின்னர் இன்று காலை டி.டி.வி தினகரன் தென்காசியில் பொறியாளர்அணி செயலாளர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். இன்று பிற்பகல் கடையநல்லூர், புளியங்குடி, சிந்தாமணி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய ஊர்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். #edappadipalanisamy #dinakaran

    நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திருநங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Kasturi
    தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி, தினகரன் அணி என 2 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    தினகரன் அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தொடர்பாக 14-ந் தேதி தீர்ப்பு வெளியானது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

    உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மதுரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதத்திடம் திராவிடர் விடுதலைக்கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணியழகன் புகார் மனு அளித்தார். அதில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தும், திரு நங்கைகளை அவமதித்தும் கருத்துகளை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும் பூமிக்கும், ஆகாயத்தக்கும் இடையே தான் வெற்றிடம் உள்ளது என்றும் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் கிண்டலாக பதில் அளித்துள்ளார். #TNPolitical #TNMinister #OSManiyan
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு காட்டுச்சேரி ஊராட்சி தேவசேனா கிராமத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத விவசாயிகள் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். ஆனால் நாகை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு அலுவலக குளறுபடி காரணமாக 50 சதவீத விவசாயிகள் தான் பயிர் காப்பீட்டு தொகை பெற்று உள்ளனர். இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் தான் காரணம்.

    தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது போல தமிழக அரசியலில் எந்த வெற்றிடமும் இல்லை.


    பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே 37 ஆயிரம் அடி தூரம் வெற்றிடம் உள்ளது. அதைத்தான் ரஜினி குறிப்பிட்டு இருப்பார்.

    டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீரை கொண்டு குறுவை சாகுபடி தொடங்கி உள்ளது. நாகை மாவட்டத்திலும் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.

    தமிழகத்தில் நீட்தேர்வால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக 2 பெற்றோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPolitical #TNMinister #OSManiyan
    ×