என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக அரசியல்"
- தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவர்கள் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். இதில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை தொடர்பாக அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் சட்டசபையில் கவர்னர் உரையின்போது நடந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. அதேபோல் தமிழகத்தில், தான் மேற்கொள்ளவுள்ள பாத யாத்திரை குறித்தும் அமித் ஷாவிடம் அண்ணாமலை விளக்கினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக கவர்னராக ஆர்.என்.ரவியே நீடிப்பார் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் கவர்னர் உரை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தமிழக அரசியல் தலைவர்களில் மிக மிக நிதானமானவர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
- மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் சரி, வேதனையை வெளிப்படுத்தினாலும் சரி அவரிடம் ஒரு சமநிலையை எப்போதும் பார்க்கலாம்.
தமிழக அரசியல் தலைவர்களில் மிக மிக நிதானமானவர் என்ற சிறப்பை பெற்றிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். எந்த ஒரு கூட்டத்திலும், எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் வார்த்தைகளை நுணுக்கமாக அளந்து பேசுவார்.
அவர் வைக்கும் பதில் உரைகள் ஆணித்தரமாக இருக்கும். ஆதாரங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் சரி, வேதனையை வெளிப்படுத்தினாலும் சரி அவரிடம் ஒரு சமநிலையை எப்போதும் பார்க்கலாம்.
அத்தகைய பக்குவம் மிகுந்தவர் சமீபத்தில் சிதம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மைக் வேலை செய்யாததால் நிதானம் இழந்தார். மைக் இணைப்பில் அதிக சத்தம் வந்ததால் அவரது நிதானம் கட்டுப்பாட்டை இழந்தது. இதுபற்றி விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் பொது இடங்களில் தங்களது நிலையை எண்ணிப்பார்க்காமல் நடந்துள்ளனர். எங்கள் தலைவர் மைக் வேலை செய்யாததால் சற்று ஆவேசமானார். இதில் எந்த குறையையும் சொல்ல முடியாது' என்றனர்.
- இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்று வி.சி.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.
- தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க. அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முற்படும் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய சட்ட ஆணையத்தின் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுமென்று வி.சி.க. சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க. அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்துத் தளங்களிலும் படுதோல்வி அடைந்து விட்ட பா.ஜ.க. அரசு, மக்களின் கவனத்தைத் தனது தோல்வியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய பிரச்சினைகளை எழுப்புகிறது. விலைவாசி ஏற்றம், வேலையில்லாத பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி என சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சிகளிலேயே மிகவும் மோசமான ஆட்சி இந்த பா.ஜ.க. ஆட்சிதான் என்ற விமர்சனத்தை மோடி அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு தனக்குத் தெரிந்த ஒரே பிற்போக்கு-பெரும்பான்மை மதவாத அரசியலைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்மை மதத்தவராக இருக்கும் இந்துக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பா.ஜ.க. மனப்பால் குடிக்கிறது.
2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனைத் தீவிரமாக முடுக்கிவிடுகிறது.
அரசியல் லாபத்துக்காக நாட்டில் சமூகப்பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட சதிசெய்யும் பா.ஜ.க.-சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வக்கீல் ஆபத்துக்காத்தான் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக, செங்கோட்டையை சேந்த முன்னாள் நகர தி.மு.க. செயலாளரான முத்தையா தேவரின் மகனும், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வக்கீல் ஆபத்துக்காத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், செங்கோட்டை நகர துணைச்செயலாளர் ஜோதிமணி, பெர்னாட்ஷா, நாட்டாமை ஆறுமுகம், வேலுமணி, ஓம் சக்தி அய்யப்பன், ராமகிருஷ்ணன், திருமால், டைல்ஸ் மாரியப்பன், ஆசிரியர் மணிகண்டன், ரமேஷ், வேல் சாமி, கண்ணன், பட்டையா, அண்ணாதுரை, நடராஜன், சரவணன், கணேசன், ரெங்கன், செங்கோட்டை வார்டு நிர்வாகிகள், கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
- கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.
- 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
- கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றம் வரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவேன் என்ற கமலின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் இப்போது அரசியல் களத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் இப்போது சென்னை தண்ணீரில் தத்தளிக்கும் போது அரசை விமர்சிக்கும் நேரமல்ல என்றும் இயற்கை பேரிடரில் மக்கள் தான் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
இது பற்றி பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-
மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று கட்சி தொடங்கியவர். பாவம் இப்போதும் ஏமாற்றம் வந்துவிட கூடாதே. எப்படியாவது ஒற்றை சீட்டாவது வேண்டுமே என்பதற்காக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். வேறென்ன சொல்ல? என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம்.
- அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
வெள்ள நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்த நிலையில் அரசியலுக்கான வியூகத்தையும் பா.ஜனதா வகுத்தது. 39 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து கமலாலயத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம். அதேபோல் சட்டமன்ற தொகுதிகள் தோறும் ஒரு அலுவலகம்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இந்த அலுவலகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் எவ்வளவு உறுப்பினர்கள் புதிதாக சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரையும் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் என்று கட்சி சாராமல் இருக்கும் அனைத்து பிரபலங்களையும் சந்தித்து அவர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்வது களத்தில் பணியாற்றும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. தெலுங்கானாவில் பூத் கமிட்டிகள் சரியில்லாததால் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது. கூட்டணியைப் பற்றி யோசிக்க வேண்டாம். அதை கட்சி தலைமை முடிவு செய்யும்.
தனித்து நின்றும் சாதிக்கும் அளவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை வலிமைப்படுத்துங்கள். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் தகுதியானவர்களுக்கு திட்ட பலன்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். இந்த அடிப்படை பணிகளே நமது வெற்றிக்கும் அடித்தளம் ஆகும் என்றார்.
- வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.
- பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள்.
பேசும் வார்த்தை சரியாக இருந்தால் கூட இடம், பொருள் பார்த்து பேச வேண்டும். இல்லாவிட்டால் சரியாகவே பேசி இருந்தாலும் சிக்கலில் மாட்டிவிட நேரிடும். அப்படி தான் வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானாவும் சிக்கி இருக்கிறார். வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.
இந்த பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தனது தொகுதி மக்களுக்காக மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அசன் மவுலானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சென்னையின் மொத்த தண்ணீரும் வேளச்சேரி பகுதி வழியாக தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதிக அளவில் தண்ணீர் வந்தது. ஆனால் கடல் உள்வாங்க வில்லை. இதனால் தான் இவ்வளவு தண்ணீர் தேங்கியது என்பதோடு அங்கு நடந்த ஒரு விபத்தை பற்றி குறிப்பிடும் போது இவ்வளவு பெரிய பேரிடர்கள் வரும்போது இப்படி பட்ட விபத்துக்களும் ஏற்படுவது சகஜம் தான் என்று சாதாரணமாக சொல்லி உள்ளார்.
இது தான் இப்போது அவரை சிக்கலுக்குள் கொண்டு விட்டுள்ளது. சொந்த கட்சிக்காரர்களும், ஆத்திரப்பட்டது மட்டுமல்ல தி.மு.க.வினரே கோபம் அடைந்து உள்ளனர். இப்படியா பேசுவது? அவருக்கென்ன அடுத்த தேர்தலில் வேறு தொகுதிக்கு சென்று விடுவார். நமக்குத் தானே சிக்கல் என்று தி.மு.க. தரப்பும் கொந்தளிக்கிறது.
- குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது.
- புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்மொழியப்பட்டார். அவர் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், பிரதமர் வேட்பாளரை பின்னர் தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
எனவே யார் பிரதமர் என்ற சர்ச்சை இந்தியா கூட்டணியில் இல்லை.
குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது. பல ஆயிரம் மக்கள் இறந்தனர்.

இது இயற்கை பேரிடர். இதை சீர் செய்ய மோடிக்கு 2 ஆண்டாகியது. புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.
ஆனால் தென் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 96 செ.மீ மழை பெய்தது. இது இயற்கை பேரிடர். இதை சமாளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக அரசு செய்யும் நல்லவற்றை கவர்னர் தமிழிசை பாராட்டுவதில்லை. கூட்டணி ஆட்சி நடந்தாலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை முடக்கும் வேலையை பார்க்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் இடம் பெற்று இருக்கின்றன.
என்றாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய இரண்டும் இடம் பெறுமா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள். ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்து விட்டனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தென் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் 22 தொகுதிகள் கொண்ட ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அடுத்தடுத்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பிரேமலதாவை நெகிழ்ச்சி அடையவைத்தது. மேலும் பத்ம விருது கொடுத்து விஜயகாந்தை கவுரவித்ததின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பா.ஜ.க. தந்திருப்பதாக பிரேமலதா கருதினார்.
இந்த நிலையில் பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ள பிரேமலதா ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
தே.மு.தி.க. சார்பில் பா.ஜ.க.விடம் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பாக பிரேமலதாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை பாரதிய ஜனதாவிடமும், அ.தி.மு.க.விடமும் கொடுக்கப்பட்டது. எந் தெந்த தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. விரும்புகிறது என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்.பி. இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்து உள்ளது.

இதையடுத்து தே.மு.தி.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க. தரப்பில் கள்ளக்குறிச்சி, மதுரை உள்பட 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதில் பிரேமலதாவின் இளைய சகோதரர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.
மதுரை தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் தே.மு.தி.க. வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க. அளித்துள்ள வேண்டுகோள்கள் அனைத்தையும் பா.ஜ.க. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.
இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
- நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
- தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது தேர்தல் கூட்டணி அமைக்க அரசியல் கட்சியினர் தீவிரமாகி வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தங்களது தலைமையில் புதிய கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதே போல் பா.ஜ.க. தங்களது தலைமையில் டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் கூட்டணியை அமைத்து தேர்தல் களம் காண தயாராகி வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எந்த அணியில் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த 2 கட்சிகளிடமும், பா.ஜ.க., அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடந்த அ.தி.மு.க. தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, பொறுத்து இருந்து பாருங்கள் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் என்று கூறினார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம், மாநில கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்த போது, 14+1 தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்தார். இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர். ராமதாசை தைலாபுரத்தில் அவரது தோட்டத்தில் சந்தித்து பேசினார். எனவே பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அ.தி.மு.கவை சேர்நத நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் சிறப்பான கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பா.ம.க. தலைவர்களுடன் போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் நேரடியாக அவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதே போல் தே.மு.தி.க.விடமும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். தே.மு.தி.க. சார்பில் தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இன்னும் குழு அமைக்கபடவில்லை. வருகிற 12-ந் தேதி தே.மு.தி.க. கொடிநாள் ஆகும். எனவே அன்று தேர்தல் குழு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே அவர்கள் குழு அமைத்ததும் தே.மு.தி.க.வுடனும் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்ட போது அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.விடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதை உறுதி செய்தனர். இதே போல் தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவித்தனர். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை எனவே அ.தி.மு.க. கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றனர். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
- பஞ்சாப்பில் பா.ஜனதாவிடம் தனித்து போட்டியிடுகிறது.
- 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பா.ஜனதா அணிக்கு தாவினார்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள பாராளுமன்ற தொகுதி என 14 இடங்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்றும் அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இதேபோல பாஜக - சிரோமணி அகாலிதளம் இடையே இன்று நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் பஞ்சாப்பில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளது.
இதனால் பஞ்சாப்பில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.






