என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "premalatha"
- தமிழக முதலமைச்சர், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.
தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
- மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும்.
மதுரை:
சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை.
முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.
- சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.
அவனியாபுரம்:
மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விழா காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத வகையில் அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் மக்கள் ஆம்னி பஸ்சுக்கு செல்கின்றனர்.
ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சரிடம் கேட்டால் அது தொழில் என்றும், ஏழை மக்கள் என்றால் அரசு பஸ்சில் செல்லலாம். ஆம்னி பஸ்சில் செல்வது என்றால் கட்டணம் உயர்வாகத்தான் இருக்கும் என்றும் பேசுகிறார்.
இதை சொல்வதற்கு அமைச்சர் எதற்கு? ஆம்னி பஸ்சில் பயணம் செய்தால் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு அதிக தொகையை கொடுத்து மக்கள் எப்படி பண்டிகையை கொண்டாடுவார்கள்?.
ஓசி பஸ் பயணம் குறித்து அமைச்சர் பேசியதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். அரசு பஸ்களில் இலவச பயணத்தை முற்றிலுமாக தமிழக பெண்கள் புறக்கணிக்க வேண்டும்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வரவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஒரு செங்கலை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இப்போது என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை?.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக உள்ளதே தவிர மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக தெரியவில்லை. மத்திய-மாநில அரசுகள் விரைவில் மருத்துவமனையை கட்டி முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
- தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா பங்கேற்று பேசியபோது தொண்டர்களுக்கும் கேப்டனுக்கும் இடையேயான உறவு ரத்த உறவு என்றும், இதனை யாராலும் பிரிக்க முடியாது என்றும், பெருமை பொங்க குறிப்பிட்டார்.
பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அப்போது அவர்களிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார். இங்கு ரத்த தானம் செய்த தே.மு.தி.க. தொண்டர்கள் பலரது ரத்தவகை ஓ பாசிட்டிவாகவும், பி. பாசிட்டிவாகவும் இருக்கு. கேப்டனின் ரத்த வகை ஓ பாசிட்டிவ். எனது ரத்த வகை பி. பாசிட்டிவ் இப்படி நாம் ஒரே ரத்தத்தை சேர்ந்தவர்கள். இது ரத்தத்தில் கலந்த உறவு. யாராலும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
பிரேமலதாவின் இந்த "ரத்த பாச பேச்சு" கட்சி தொண்டர்களுக்கு பூஸ்டாக மாறி இருப்பது என்னவோ உண்மைதான். அது கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழாவை இன்று தே.மு.தி.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக அவரது பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
இந்த முகாமில் பங்கேற்று பலர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அதனை அடைந்தே தீருவோம். தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். கேப்டன் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
கேப்டனுக்கு ஏற்பட்டிருப்பது உடல் சோர்வுதான். 75-வது சுதந்திர தின நாள் அன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேப்டனே விரும்பினார்.
70-வது பிறந்த நாளான நாளை கேப்டனை நீங்களே சந்திக்கலாம். கேப்டன் பிறந்தநாளையொட்டி 70 வகையான நலத்திட்ட உதவிகளை தே.மு.தி.க.வினர் வழங்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
இந்த விழாவில் தே.மு.தி.க. துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வி.சி.ஆனந்தன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ். பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான தொண்டர்களும் திரண்டிருந்தனர்.
- மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
- சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
அவனியாபுரம்:
தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.
மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.
- தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு.
- அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர்.
தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு சென்றுள்ளார். பேசும் திறனும் குறைந்துள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்த்துக்கு தொடர் சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதாவிடம், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பிரேமலதா கூறியதாவது:-
விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மை தான். அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று டாக்டர்களிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் விரைவில் அவர் பழைய நிலைக்கு திருப்புவார் என்கிற நம்பிக்கை உள்ளது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துகள். நல்ல வேட்பாளரை தேர்வு செய்த பிரதமருக்கு வாழ்த்துகள். அவர் வெற்றி பெறுவது உறுதி.
தமிழ்நாட்டுக்கும் பழங்குடியினருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. தமிழ் கடவுள் முருகனின் மனைவி வள்ளியும் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தான்.
வெற்றி பெற்று தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்வேன் என திரவுபதி என்னிடம் தெரிவித்தார் என்றார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு கருத்து சொல்ல விருப்பமில்லை என்றும் இருவரில் யார் வெற்றி பெற போகிறார், என்ன முடிவு ஆக போகிறது என்பதை காண காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அந்த கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து ஓய்விலேயே இருந்து வருகிறார். இதனால் அவரது மனைவியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். கட்சி தொடர்பான முடிவுகளை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து பிரேமலதாவே எடுத்து வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியதை அந்த கட்சியினர் விரும்பவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் சில எம்.எல்.ஏ.க்களாவது சட்டமன்றத்துக்குள் சென்றிருப்பார்கள் என்றே தே.மு.தி.க.வினர் இப்போதும் கூறி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பலமுறை ஆலோசிக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.
விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தே.மு.தி.க. நிர்வாகிகள் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அவர்களது இல்ல விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் விஜயகாந்தின் மகன் என்கிற ஒற்றை அடையாளத்துடன் மட்டுமே அவர் கட்சி பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் விஜய பிரபாகரனை தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த கருத்தை பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க. இப்போதே ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் வகையிலும், அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது.
அதற்குள் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இளைஞர்களை அதிக அளவில் தே.மு.தி.க.வில் சேர்க்க வேண்டும் என்று கட்சி தலைமை நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார்.
இந்த பணியை மேற்கொள்ள விஜய பிரபாகரனே தே.மு.தி.க.வில் தகுதியான நபர் என்றும், எனவே அவரை கட்சியின் இளைஞர் அணியில் முன் நிறுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் முடிவுகள், ‘‘ஆப்ரேஷன் சக்சஸ் பட் பேசன்ட் டெட்’’ என்பது போல் உள்ளது. தி.மு.க.வின் வெற்றி, என்னை பொறுத்தவரை தமிழகத்திற்கு தோல்வி.
கூட்டணியில் இருப்பவர்கள், கேபினேட் மந்திரி அந்தஸ்து பெற்று டெல்லி சென்றால் தான், திட்டங்களையும், தமிழ்நாட்டிற்கு வேண்டிய வற்றையும் உரிமையோடு கொண்டு வர வேண்டும்.
கடந்த முறை, அ.தி.மு.க., வில் 37 எம்.பி.க்கள், இருந்தும், போனார்கள், வந்தார்கள். கேபினேட்டில் இருந்தால்தான், எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொண்டு வர முடியும். அந்த வகையில் தற்போது தி.மு.க., எதிர் அணியில் உள்ளது. இது எந்த வகையில் பலனளிக்கும் என்று தெரிய வில்லை.
இந்தியா முழுவதும் ஒரு அலை வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் மோடியை தோற்கடித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. இதற்கு காரணம், கூட்டணி மற்றும் கேபினேட்டில் இல்லை. அது இந்த முறையும் தொடர்கிறது.
இந்தியாவின் அங்கம் தமிழகம். தனியாக பிரிந்தால், நிச்சயமாக தமிழகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். எங்கள் கூட்டணி சார்பில் எம்.பி., இல்லாவிட்டாலும், உரிமையோடு கேட்டு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம். இக்கூட்டணி நிச்சயம் தொடரும்.
தே.மு.தி.க.வின் மாநில கட்சிக்கான அந்தஸ்து பறிபோகாது. கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தால், கேபினேட் பதவிகளை வாங்கி, நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பை மக்கள் தரவில்லை என்பது தான் எனது வேதனை.
இவ்வாறு அவர் கூறினார்.