என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி"
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிபிஐ-ன் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாட்டை மத அடிப்படைவாதம் சுற்றியுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைப்போம்" என்றார்.
- சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மு.வீரபாண்டியின், சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.
- நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
- நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
- நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
- நல்லகண்ணு சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நல்லகண்ணு கடந்து ஆகஸ்ட் 22ம் தேதி அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் காயம் அடைந்தார்.
இதையடுத்து அவரை சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், நூறு வயது தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சனைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்க நரம்பியல் நிபுணர், நுரையீரல் நிபுணர், இருதய நிபுணர், தீவிர சிகிச்சைப் பிரிவு றிபுணர் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவர் குழு ஏற்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை நடிகர் சிவகார்த்திகேயன், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
- துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* தமிழ்நாட்டிற்கு எதிராக துரோகம் செய்யும் கட்சியாக பா.ஜ.க. செயல்படுகிறது.
* தமிழக மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
* துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க.வுடன் அணி சேர்வது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாகும்.
* துரோகத்தை எதிர்த்து போராடும் தமிழக மக்களுடன் இ.பி.எஸ். துணை நிற்கவில்லை.
* தமிழக மக்களை காட்டி கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
- தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
சேலம்:
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதையொட்டி சேலத்தில் அதன் லோகோவை அறிமுகப்படுத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் லோகோவை வெளியிட்டு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது,
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று திரும்ப திரும்ப உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியை பலப்படுத்தவும் முயற்சி மேற்கொள்கிறார்கள்.
பா.ஜ.க. விரும்பும் கூட்டணி பலமான கூட்டணியாக அமையும், எதிரிகளால் எதிர்கொள்ள முடியாத கூட்டணியாக அமையும் என்று கற்பனையாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர பாரதிய ஜனதா கூட்டணி கருவே உருவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளை உடைத்து அங்கிருந்து பல கட்சிகள் எங்களுக்கு வருவார்கள் என்று பா.ஜ.க. தலைவர்களும் சொல்கிறார்கள்.
தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கூட்டணியும் இவ்வளவு நாள் நீடித்தது கிடையாது.
இந்த கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல, கொள்கைக்காக அமைந்த கூட்டணி. 2 பாராளுமன்றத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். தி.மு.க. கூட்டணி ஒரு போதும் உடையாது.
தி.மு.க. கூட்டணியை உடைத்து அவர்கள் கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள் என பா.ஜ.க. கூறிக்கொண்டிருக்கிறது.
முருகனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க. முருகன் மாநாட்டால் பா.ஜ.க. வெற்றிபெற முடியாது. நெருக்கடி நிர்பந்தத்தின் பேரில் அ.தி.மு.க. வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மடியில் கனம் இருந்ததால் பா.ஜ.க.வின் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
- நாளை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.
திருச்சி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அந்த அமைப்புகள் ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றன.
அரசியல் சட்டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது. இந்த அவசர நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டை சனாதனம் ஒற்றுமைப்படுத்தியது என ஆளுநர் பேசிவருகிறார். உண்மையில் சனாதனம் மக்களை பிளவுபடுத்தியது. ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அவர் செயல்படட்டும். ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நாளை (26-ந்தேதி) விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.
மின்வாரிய கணக்கெடுப்பு அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு வழங்க வேண்டும். அதுவரை மின் கட்டணம் வசூலிக்க மாட்டோம், மின் இணைப்பை துண்டிப்போம் என்ற முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும். தி.மு.க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் காவல் துறையால் தேடப்படும் நபர்கள் பா.ஜ.க.வில் அடைக்கலம் பெற்றுள்ளனர். அங்கு அவர்கள் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
- கவர்னர் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கவர்னரின் நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக கவர்னர் பேசுகிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் கவர்னர் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தொண்டனை போல் செயல்படுகிறார் கவர்னர் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
- கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.
இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
- அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 விருப்பத் தொகுதிகளை குறிப்பிட்டு 2 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்.
- 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது.
சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.
இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த கூட்டத்தில், 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது. இதில், இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டியளித்தது.






