நல்லகண்ணு உடல்நிலை குறித்து விசாரித்த த.வெ.க. தலைவர் விஜய்

செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளிடம் கேட்டறிந்தார்.
நல்லகண்ணு உடல்நிலை குறித்து விசாரித்த த.வெ.க. தலைவர் விஜய்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பின் காரணமாக அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்ல கண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.

செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்து பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று காலையிலும் அதே நிலை நீடித்து வருகிறது.

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் ஆண்டாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலை குறித்து த.வெ.க. தலைவர் விஜய் நலம் விசாரித்தாக தகவல் வெளியாகி உள்ளது. நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விஜய் கேட்டறிந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com