என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CPI"

    • கோவையில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது.
    • பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர்," தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறத்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் அவர்களே!

    நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.

    இந்திய குழந்தைகள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற உங்கள் அரசின் மொழிக்கொள்கை தான் பிரச்சனை.

    "இந்தியை திணிக்க மாட்டோம்" என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள். அது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
    • திடீரென கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டார்.

    இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

    PM SHRI திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
    • இந்நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.

    இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.

    இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க.வுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறைமுக கூட்டணி வைத்துள்ளது, பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குற்றம்சாட்டியது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி கல்வி வளர்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்தி உண்மையானால், அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இது தொடர்பாக, இடது முன்னணியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபியின் கருத்தை கூட கேரள அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனதெரிவித்துள்ளார்.

    இதனால் தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் ஆளும் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சிபிஐ-ன் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்,"தமிழ்நாட்டை மத அடிப்படைவாதம் சுற்றியுள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைப்போம்" என்றார்.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி!

    ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!

    இவ்வாறு அவர கூறினார்.

    • சிபிஐ மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மு.வீரபாண்டியின் சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    10 ஆண்டுகளாக இப்பொறுப்பில் முத்தரசன் இருந்த நிலையில், சென்னை சூளைமேட்டில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் மு.வீரபாண்டியின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மு.வீரபாண்டியின், சிபிஐ கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
    • நல்லகண்ணுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், நல்லகண்ணு விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
    • ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.

    ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகம், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்தின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:-

    பாஜக-வை சேர்ந்தவர்கள் ஆணவக் கொலைகள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறோம். மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்து யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாஜக அலுவலகத்துக்கும் எத்தனையோ காதல் ஜோடிகள் வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் எனக்கே பலரைத் தெரியும். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் நியாயம் கிடைக்கும் என நம்பி வருகின்றனர்.

    நாம் சில இடங்களில் தந்தை, தாயை அழைத்து சொல்கிறோம். சில இடங்களில் பக்கத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரைக் கூப்பிட்டு சொல்கிறோம். நீங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.

    ஒரு கட்சி அலுவலகம் என்பது எல்லோருக்கும், எல்லா சாதிக்கும், எல்லா மதத்துக்கும் பொதுவானது. நம்பி வருபவர்களை நாங்கள் வர வேற்கிறோம். பாஜக அலுவலகத்துக்கும் வாருங்கள், நாங்கள் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வாலூர் சோமன்.
    • மேடையிலேயே திடீரென வாலூர் சோமன் மயங்கி கீழே விழுந்தார்.

    மூணாறு:

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. வாலூர் சோமன் இறந்தார்.

    • அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.
    • உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காட்பாடி, வேலூர், ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

    காட்பாடி தொகுதி சித்தூர் பேருந்து நிலையம் அருகே புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் இணைந்து மக்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காட்பாடி தொகுதி பாதி நகரம், பாதி கிராமம், விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம், பயிர்க்கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம், பேரிடர் நேரத்தில் பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். வறட்சி நிவாரணம் கொடுக்கப்பட்டது.

    நேற்றைய தினம் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் சேலம் மாநாட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமி கம்யூனிஸ்ட் கட்சியை தரம் தாழ்ந்து பேசுவதாகச் சொல்கிறார். நான் என்ன கேட்டேன், கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சியா அல்லது ஆளும்கட்சியா? எங்க வரிசையில்தான் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றுதான் கேட்டேன்.

    மக்களுக்கு பிரச்சனை வரும்போது, அதை அரசுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். கூட்டணியாக இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும், அதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஆனால் அவருக்கு கோபம் வந்து ஏதேதோ பேசியிருக்கார். அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் பணம் வாங்கியதாக நான் சொன்னதாகச் சொல்கிறார். அதை நாங்கள் சொல்லவில்லை. உங்களைக் காட்டிக்கொடுத்ததே திமுகதான். நாங்கள் சொல்லவில்லை. செய்தி வெளியானதா இல்லையா? தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதா… இல்லையா?.

    பாஜகவுடன் கூட்டணி வைத்ததை தப்பு என்கிறார் முத்தரசன். திமுக கூட பாஜக-வோடு கூட்டணி அமைத்து மத்தியில் அங்கம் வகித்தது எல்லாம் முத்தரசனுக்குத் தெரியவில்லை. அதைப் பேசுவதற்கு முடியாத முத்தரசனுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.

    அதோடு 2026 தேர்தலில் உங்கள் சொந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுவார் என்கிறார் முத்தரசன்.

    உங்க அப்பாவே வந்தாலும் முடியாது. 2021 ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாங்கள் வென்று காட்டினோம், எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் எடப்பாடி தொகுதியில் 45 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்களிப்பார்கள்.

    உங்களைப் போல காலத்துக்கேற்ப நிறம் மாறுகின்ற கட்சி அதிமுக அல்ல, பஞ்சோந்தி போல் நிறம் மாறுவதில்லை. கொள்கையின் அடிப்படையில்தான் செயல்படும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான்.

    நீங்கள் கொள்கை என்கிறீர்கள், திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே கொள்கையா? நேற்றைக்கு முன் தினம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது, 'நான் பாதி கம்யூனிஸ்ட்' என்கிறார். அப்படியென்றால் பாதியை விழுங்கிவிட்டார்.

    கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் சொல்வது இதுதான். திமுக தவறுக்கு துணை போகாதீர்கள், உங்களுக்கென தனிச் செல்வாக்கு உள்ளது. அது சரிந்துகொண்டு வருகிறது என்று சொன்னேன். தன்னை பாதி கம்யூனிஸ்ட் என்கிறார் ஸ்டாலின. அதாவது பாதியை விழுங்கிவிட்டார் ஸ்டாலின். இனியும் நீங்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் உங்களை யாரலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டம்.
    • 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது.

    சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது.

    இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த கூட்டத்தில், 4 விருப்ப தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் இந்திய கம்யூனிட் கட்சி வழங்கியது. இதில், இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளைக் கேட்டுள்ளோம் என்று தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் குழு பேட்டியளித்தது.

    • திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நாடாளுமன்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    ஏற்கனவே திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×