என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பி. சு வெங்கடேசன்"

    • கோவையில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது.
    • பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர்," தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறத்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் அவர்களே!

    நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.

    இந்திய குழந்தைகள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற உங்கள் அரசின் மொழிக்கொள்கை தான் பிரச்சனை.

    "இந்தியை திணிக்க மாட்டோம்" என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள். அது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யாருடைய விசுவாசத்துக்காக இந்த பெரு நஷ்டத்தை இந்திய தொழில்கள் சந்திக்கின்றன.
    • தனது நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மோடியையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய நேரமிது.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த மறுப்பதாகச் சொல்லி டிரம்ப் நிர்வாகம் 50 சதவிகித வரி விதித்துள்ளது.

    சரி, ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வது யார்?

    இந்திய அரசா? அல்லது பிரதமர் மோடியின் நண்பரா?

    யாருடைய விசுவாசத்துக்காக இந்த பெரு நஷ்டத்தை இந்திய தொழில்கள் சந்திக்கின்றன.

    இந்தியாவின் சுதந்திர கொள்கைகள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் டிரம்பையும், நாட்டின் நலனைவிட தனது நண்பர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மோடியையும் ஒருசேர எதிர்க்க வேண்டிய நேரமிது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.
    • தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

    ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

    உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

    இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

    இதைதொடர்ந்து,"ஜகதீப் தன்கர் என்னவானார்? இதே நிலை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்?

    எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

    தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை ரெயில் தீ விபத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழப்பு.
    • தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை செய்ய இருக்கிறார்.

    மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மதுரை ரெயில் தீ விபத்து குறித்து எம்.பி. சு வெங்கடேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சு வெங்கடேசன் கூறியதாவது..,

    "ரெயில் தீ விபத்துக்கு ஆர்.பி.எஃப். தோல்வியே காரணம் என்று ரெயில்வே ஆலோசனை உறுப்பினர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ரெயில்களில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல, அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தான் வாகனம் ரெயிலில் அனுமதிக்கப்படுகிறது."

    "நாடு முழுக்க எந்த ரெயில் நிலையத்திலும் உள்ள கடைகளில் கியாஸ் அடுப்பு பயன்படுத்தக்கூடாது. மின்சார அடுப்பையே பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடுமையான விதிகள் அமலில் இருக்கும் போது, இந்த விபத்துக்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் கொண்டுவந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை."

    "தீப்பற்றக்கூடிய பொருட்களை இரயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி இருக்கும் போது பத்து நாட்களாக கியாஸ் சிலிண்டரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் ஆர்.பி.எஃப். சோதனைப்பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள். இந்த விபத்து ரெயில் பயணத்தின் போது ஏற்பட்டு இருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரும் விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்துக்கு முதல் காரணம் ரெயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வி தான் ஆகும்," என்று அவர் தெரிவித்தார்.

    • சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு;-

    மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "கண்டா வர சொல்லுங்க... என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?" என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 2 முறை மதுரை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வான சு.வெங்கடேசன் பொதுமக்களிடம் நேரில் வந்து குறைகளை கேட்பதில்லை. மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் உள்ளனர்.

    இதுதொடர்பாக எம்.பி. நேரில் வந்து விசாரித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பரங்குன்றம் ரோடு உள்ளிட்ட மதுரை தொகுதியில் உள்ள பெரும்பாலான ரோடுகள் பல மாதங்களாக படுமோசமாக உள்ளது. அண்மையில் பெய்த மழையால் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனை கூட ஆய்வு செய்ய எம்.பி. சு.வெங்கடேசன் வரவில்லை என தெரிவித்தனர்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.
    • இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு

    பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது.

    இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், கூட்டுகுழுவுக்கு அனுப்ப ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் வாக்களித்தனர். எனவே பெரும்பான்மை வாக்குப்படி மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவானது.

    இந்நிலையில், ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பும் வாக்கெடுப்பு தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.

    ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    ×