என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் அவர்களே.. நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.. ஆனால்..!- சு.வெங்கடேசன்
    X

    பிரதமர் அவர்களே.. நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.. ஆனால்..!- சு.வெங்கடேசன்

    • கோவையில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது.
    • பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர்," தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறத்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் அவர்களே!

    நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை.

    இந்திய குழந்தைகள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற உங்கள் அரசின் மொழிக்கொள்கை தான் பிரச்சனை.

    "இந்தியை திணிக்க மாட்டோம்" என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள். அது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×