என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MP Su Venkatesan"
- சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.
சிபிஎஸ்இ பிரிவு ஏ தேர்வில் இந்திக்கு 300க்கு 30 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பி பிரிவு தேர்வில் ஹிந்திக்கு 300க்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரான அநீதி மீண்டும் தொடங்கியுள்ளது என்று சு. வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள்.
பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 30 மதிப்பெண்கள்.
பிரிவு பி இளநிலைப் பொறியாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்கள். பிரிவு பி இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.
பிரிவு சி கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 300 இல் இந்தி & ஆங்கில மொழித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். பிரிவு சி இளநிலை கணக்காளர் பதவிக்கு மொத்த மதிப்பெண்கள் 240 இல் இந்தி மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
இது இந்தியாவின் மொழி பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது.
இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- மதுரை ரெயில் தீ விபத்தில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழப்பு.
- தீ விபத்து தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை செய்ய இருக்கிறார்.
மதுரை ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மதுரை ரெயில் தீ விபத்து குறித்து எம்.பி. சு வெங்கடேசன் கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. சு வெங்கடேசன் கூறியதாவது..,
"ரெயில் தீ விபத்துக்கு ஆர்.பி.எஃப். தோல்வியே காரணம் என்று ரெயில்வே ஆலோசனை உறுப்பினர் என்ற அடிப்படையில் கூறுகிறேன். ரெயில்களில் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல, அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகு தான் வாகனம் ரெயிலில் அனுமதிக்கப்படுகிறது."
மதுரையில் ரயில் தீவிபத்து;தீப்பற்றக்கூடிய பொருட்களை இரயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என விதி இருக்கும் போது 10 நாட்களாக கேஸ் சிலிண்டர்ரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் RPF சோதனைப்பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள். pic.twitter.com/geKWW1rLx5
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 26, 2023
"நாடு முழுக்க எந்த ரெயில் நிலையத்திலும் உள்ள கடைகளில் கியாஸ் அடுப்பு பயன்படுத்தக்கூடாது. மின்சார அடுப்பையே பயன்படுத்த வேண்டும். இத்தகைய கடுமையான விதிகள் அமலில் இருக்கும் போது, இந்த விபத்துக்கு சொல்லப்படும் காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் கொண்டுவந்த ஒரு பொருளால் மட்டும் இந்த விபத்து ஏற்படவில்லை."
"தீப்பற்றக்கூடிய பொருட்களை இரயிலில் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி இருக்கும் போது பத்து நாட்களாக கியாஸ் சிலிண்டரோடு தென்னிந்தியா நெடுக ஒரு ரயில் பெட்டி பயணித்திருக்கிறது என்றால் ஆர்.பி.எஃப். சோதனைப்பணி என்பது முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்றே பொருள். இந்த விபத்து ரெயில் பயணத்தின் போது ஏற்பட்டு இருந்தால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரும் விபத்தாக மாறி இருக்கும். இந்த விபத்துக்கு முதல் காரணம் ரெயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வி தான் ஆகும்," என்று அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்