என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நல்லகண்ணு உடலுக்கு வைகோ, ரஜினிகாந்த் அஞ்சலி
    X

    நல்லகண்ணு உடலுக்கு வைகோ, ரஜினிகாந்த் அஞ்சலி

    • நல்லகண்ணு நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×