search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Chief Minister"

    • முதல் கட்ட பணிகளுக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.
    • பிரதமருக்கு நெருக்கமான தேவகவுடா இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவாரா?

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கனகபுரா என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டது. ரூ.9 ஆயிரம் கோடியில் இந்த திட்டத்ததை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த அணை மூலம் 67.14 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி கபினி, கிருஷ்ணராஜர் சாகர் அணை கட்டி கர்நாடக அரசு 115 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை கட்டினால். தமிழகத்தில் பாயும் காவிரி நீரோட்டம் குறைந்து பாலைவனமாக மாறிவிடும் என்பதால், தமிழகத்தில் மேகதாது திட்டத்திற்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆனாலும் கர்நாடக அரசு அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு ஒப்புதலுக்கு அனுப்பியது. மேலும் முதல் கட்ட பணிகளுக்காக கடந்த பா.ஜ.க ஆட்சியில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், விவசாயிகளும், தமிழக அரசும் கடுமையாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

    இதற்கிடையே கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சியும் மேகதாது அணையை கட்ட தீவிரம் காட்டியது. துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மேகதாது அணை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1000 கோடி நிதியை நிலம் கையகப்படுத்துவதற்கு பயன்படுத்தி இருக்கலாம். ஏன் அதை செய்யவில்லை என்றும் இத்தகைய திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் பேசினார். அவரது பேச்சு தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கர்நாடக முதல் மந்திரி டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநிலம் பெரியபட்னா தாலுகாவில் உள்ள 79 கிராமங்களில் உள்ள 150 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்படும். பெங்களூருவின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவதற்காக முன்வைக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு நிலம் வழங்க சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா மற்றும் பெங்களூரு கிராமபுற மாவட்டங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை அதிகாரிகள் மர கணக்கெடுப்பை தொடங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பாதயாத்திரை சென்றது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய டி.கே. சிவக்குமார், பிரதமருக்கு நெருக்கமான தேவகவுடா இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவாரா? என்றார். மேலும் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற தவறியதாக பா.ஜ.க எம்.பி.க்கள் மீதும் குற்றம் சாட்டினார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு தீவிரம் கட்டி வருவதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    • இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
    • பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.

    உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

    • கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.
    • வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் தி.மு.க. தலைவராக இருந்து மறைந்த கலைஞர் நீண்ட காலம் முதலமைச்சராக பணியாற்றினார்.

    அவரது காலத்திலேயே மு.க.ஸ்டாலின் கட்சியில் இளைஞர் அணி செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றார். அதன் பிறகு சென்னை மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றி தனது ஆளுமை திறனை வெளிப்படுத்தினார்.

    இதையடுத்து அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கலைஞர் வழங்கினார். கலைஞர் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராகி கடந்த தேர்தலை சந்தித்து முதலமைச்சர் ஆனார்.

    தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸடாலினும் தந்தை வழியில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.

    அதன் பிறகு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர் பதவிக்கு வந்துள்ளார்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வருகிற 21-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு நடை பெறுகிறது. அதன் பிறகு பதவி ஏற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    உதயநிதியின் தீவிரமான கட்சி பணியை பார்த்து அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    இது தொடர்பாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "நானும் என் தந்தை வழியில் துணை முதலமைச்சர் ஆக போகிறேன்" என்பது வதந்தி. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது முதலமைச்சர்தான் என்றார்.

    • மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார்.
    • தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். கூடவே அவரை துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உதயநிதி ஸ்டாலின் உயர்ந்த பொறுப்புகளுக்கு பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மறைந்த தலைவர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு ஒவ்வொரு முறையும் நிறைய பரிட்சைகள் வைப்பார். அவற்றில், அவர் தேறிய பின்தான் உயர்வு அளிப்பார். அப்படித்தான், கட்சியின் இளைஞர் அணி செயலராக, துணைப் பொதுச் செயலராக, பொருளாளராக, செயல் தலைவராக, தலைவராக உயர்வு பெற்றார்.

    நிர்வாகப் பொறுப்பிலும் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக படிப்படியாக உயர்த்தப்பட்டார். தற்போது முதல்வராகி இருக்கிறார். அந்த வகையில், உதயநிதியும் போட்டியின்றி அனைவர் மனதிலும் நிறைந்திருக்கிறார். அவருக்கான உயரங்களும் விரைவில் போட்டியின்றி, அவருக்கு தானாகவே வந்து சேரும்.

    அவரது உழைப்பு என்பது சாதாரணமானது அல்ல. தந்தையை போல மகனும் உழைப்பு உழைப்பு என்று வாழ்ந்து கொண் டிருக்கிறார்.

    கருணாநிதி ஒருமுறை என்னிடம், பேரனின் புத்திக் கூர்மை மற்றும் அவர் பின்பற்றும் கொள்கை குறித்து வியந்து பாராட்டினார். அப்படி கருணாநிதியால் அன்றைக்கே அடையாளம் காட்டப்பட்டவர் தான் உதயநிதி. உயர்வுக்கு பொருத்தமானவர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
    • துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா அரசு "வீட்டிற்கு வீடு நம் ஆட்சி" என்னும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

    அதன்படி அமைச்சர்கள் எம்.பி,எம்.எல்.ஏ என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும்.

    பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.

    இந்நிலையில் துணை முதல் அமைச்சர் நாராயணசாமி சித்தூர் மாவட்டம், குண்ட்ராஜு இன்லு எனும் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது திருப்பதி ஆயுதப்படை போலீஸ்காரர் யுகேந்திரன், கிராமத்தில் உள்ள சாலை குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அவரது குறைகளை எடுத்துக் கூறினார். மேலும் இதுபற்றி அவர் கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரமடைந்த துணை முதல் அமைச்சர் நாராயணசாமி, யுகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.

    அதன் பின்னர் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ்காரர் யுகேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.

    அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.

    சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

    ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது.

    சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #SulurMLA #MLAKanagaraj
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64) இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    எம்எல்ஏ கனகராஜ் உடல்  காமநாயக்கன்பாளையம், வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதை
    தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.



    இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
    கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.#KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்தார். இன்று மாலை அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். முன்னதாக இன்று காலை ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் குமாரசாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்திருக்கிறார். அநேகமாக பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய தலைவர்களை குமாரசாமி சந்தித்த பின்னர் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    எனவே, புதன்கிழமை குமாரசாமி மட்டுமே பதவியேற்பார். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபிறகு பதவியேற்கலாம். #KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
    ×