என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்லா"

    • 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.
    • இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம்.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து சிம்லா ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் ரத்து செய்தது.

    சிம்லா ஒப்பந்தம்:

    1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை மீட்டெடுப்பதையும் உறவுகளை இயல்பாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, சிம்லா ஒப்பந்தம் ஜூலை 2, 1972 அன்று கையெழுத்தானது.

    போரில் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக மாறியது. கிழக்கு பாகிஸ்தானில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த பிறகு வங்கதேசம் சுதந்திரம் நாடான அறிவிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் - இந்தியா போர் நிறுத்தம் ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது.

    ஒப்பந்தத்தின் முக்கிய விதிகள்:

    டிசம்பர் 17, 1971 அன்று ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டை இரு நாடுகளும்  முன்நிபந்தனைகளும் இல்லாமல் மதிக்கும். இந்தக் கோட்டை மீறுவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்துவதை நாங்கள் தவிர்ப்போம் என்ற வாக்குறுதிகள் இதில் அடங்கும்.

    இந்த ஒப்பந்தத்தின்படி, போரின் போது கைப்பற்றப்பட்ட 13,000 சதுர கிலோமீட்டர் நிலம் இந்தியாவிடம் திரும்ப வழங்கப்பட்டது. சிம்லா ஒப்பந்தத்தின்படி காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு நிறுவப்பட்டது.

    இந்த வழித்தடத்தை ஒருதலைப்பட்சமாக மாற்ற எந்த முயற்சியும் இருக்காது என்றும் ஒப்பந்தம் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் வரையறுப்பதற்கும் சிம்லா ஒப்பந்தம் ஒரு முக்கிய ராஜதந்திர மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 

    • போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உஷார் நிலையில் உள்ளனர். எல்லையில் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு தமது முப்படைகளுக்கும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தியா பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

    • இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.
    • அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    டெல்லியிலிருந்து இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் இன்று காலை சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் தரையிறங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகளும் விமானத்தில் இருந்தனர்.

    தொழில்நுட்ப சிக்கல் காரணமாக தரையிறங்கும் விமானத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை. இதனால் விமானம் ஓடுபாதையில் வளைந்து வெகு தூரம் சென்றது. விமானி உடனடியாக அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி விரைவாக செயல்பட்டதால் பெரிய அளவிலான விபத்து தவிர்கப்பட்டது.

    விமானத்தில் இருந்த துணை முதல்வர் உட்பட 44 பயணிகளும் பாத்திரமாக இருப்பதாக சிம்லா விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தர்மசாலாவுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம் ரத்து செய்யப்பட்டது

    • கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஹட்கோட்டி பௌண்டா சாஹிப்பை இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

    கனமழை, நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மண்டியில் 38 சாலைகளும், குலுவில் 14 சாலைகளும் சிம்லாவில் 5 சாலைகளும் மூடப்பட்டன.

    இதையடுத்து ஜூலை 12ம்தேதி வரை கனமழை தொடரும் என சிம்லா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டது
    • தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக மணாலி அருகே ரோஹ்தாங்கின் சோலாங் மற்றும் அடல் சுரங்கப்பாதை இடையே சுமார் 1000 வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரமாக நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். பனிப்பொழிவுக்கு மத்தியில் போக்குவரத்து நெரிசலை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால நாட்களில் பனி படர்ந்த மலைகளைக் காண சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வார்கள். அதன்படி பனி படர்ந்த மலைப்பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இந்த வருடமும் அலைமோதியது.

    இந்த சூழலில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 700 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கல்கள் இருந்தபோதிலும் அதிக பனிப்பொழிவு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தலைநகர் சிம்லா முற்றிலும் பனியால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவானது டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து தற்போது ஏற்பட்டுள்ள மிகையான பனிப்பொழிவு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    • ‘ஒயிட் கிறிஸ்துமஸ்’ மலை போல் ஆன சிம்லா
    • வாகனம் சறுக்கி விழுந்த விபத்துகளால் 4 பேர் பலி

    சிம்லா:

    இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஒட்டி உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு குளிர் பல நேரங்களில் மைனஸ் டிகிரிக்கும் சென்றுவிடும். இதனால் சுற்றுலாப் பயணிகள் இங்கு விரும்பி வருகின்றனர்.

    திருமணமான புது தம்பதிகள் தங்களின் தேன்நிலவை கொண்டாட அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

    இங்குள்ள மலை பிரதேசங்களில் பனிகள் படர்ந்து வெள்ளியை சிதறிவிட்டது போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதை யொட்டி சிம்லாவில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒயிட் கிறிஸ்துமஸ் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில் சிம்லாவிற்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கி சறுக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

    பயணிகளின் வருகையை குறைக்கவும் மேலும் உயிரிழப்புகளை தடுக்கவும் சிம்லாவை சுற்றி உள்ள 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 223 சாலைகளை அந்த மாநில அரசு மூடியுள்ளது.

    சிம்லாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை குறிப்பாக சனிக்கிழமை உச்சக்கட்ட பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு அவரது தாயின் ஓவியத்தை பெண்மணி ஒருவர் பரிசாக அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
    சிம்லா:

    மத்திய அரசின் 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிம்லாவில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    முன்னதாக, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சிம்லா சென்றார். மாநாட்டிற்குச் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது காரை திடீரென நிறுத்தச் சொன்னார். சாலையோரம் நின்றிருந்த மக்களில் ஒரு பெண்மணி தனது தாயாரான ஹீரா பென்னின் ஓவியத்தை பரிசளிக்க நின்றிருப்பதைக் கண்டார். 

    இதையடுத்து, பிரதமர் மோடி அந்தப் பெண்ணிடம் இருந்து தாயின் ஓவியத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்குப் பாராட்டு தெரிவித்தார்.
    117 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் சிம்லாவில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
    சிம்லா:

    உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள் நிறைந்து வருகின்றன. 

    இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநிலத்தின்  தலைநகரமான சிம்லாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 1901ல் சிம்லாவில் 277 மிமீ மழை பதிவானது.
    இதற்கு அடுத்தபடியாக ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி காலை 8 மணி வரை 172. 6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 13-ம் தேதி காலை 8 மணியளவில் 73.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2011ல் 75 மிமீ மழை பதிவானது. 

    இதேபோல், லாஹவுல், ஸ்பிடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். #ShimlaHeavyrain
    இமாசலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவுக்கு 6 நாள் பயணமாக வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரை மாநில கவர்னர், முதல் மந்திரி உள்பட பலர் வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    சிம்லா:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் இன்று இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் சிம்லாவுக்கு வந்தனர்.

    சராப்ரா பகுதியில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர், மாநில மந்திரி மொகிந்தர் சிங் தாக்குர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். #RamnathKovind #Shimla
    ×