என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்தம் ரத்து"

    • ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது.
    • முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன.

    மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசினார். இதில் அனுமதி ஒப்பந்தத்தில் மேற்கொள் ளப்பட்ட திருத்தங்கள் குறித்து புதினுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதுதொடர்பாக புதினின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறும்போது, அமெரிக்க குழுவுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தன.

    ஆனால் அதில் இன்னும் பணிகள் உள்ளன. இதுவரை நாங்கள் ஒரு சமரசத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது" என்றார்.

    திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷியா நிராகரித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன. இதற்கு உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தண்ணீரைத் தடுக்கும் எந்தவொரு செயலும் போர் நடவ்டிக்கையாகும் என்றும் பாகிஸ்தான் கூறியது.
    • ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில்  முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதனபடி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை நேற்று இந்தியா நிறுத்தியது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.

    பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செயல்படுத்த, இந்தியா தடைகளையும் அணைகளையும் கட்ட வேண்டியிருக்கும். இதனால் பெரும் செலவும், தாமதமும் ஏற்படும்.

    ஒன்பது வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் நோக்கத்துடன், இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 19, 1960 அன்று சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    முன்னதாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததை பாகிஸ்தான் நிராகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரைத் தடுக்கும் எந்தவொரு செயலும் போர் நடவடிக்கையாகும் என்றும் பாகிஸ்தான் கூறியது.

    பாகிஸ்தானில் நடந்த உயர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்  சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகா எல்லையை மூடுதல், பாகிஸ்தான் வான்வெளியை மூடுதல், இந்தியாவுக்குச் சொந்தமான விமான நிறுவனங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடை செய்தல் மற்றும் இந்திய குடிமக்களுக்கான விசாக்களை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவுசெய்யப்பட்டது.

    • போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

    மேலும், தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    போரைத் தொடர்ந்து உறுவுகளை சீரமைக்கும் வகையில் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையில் உஷார் நிலையில் உள்ளனர். எல்லையில் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு தமது முப்படைகளுக்கும் பாகிஸ்தான் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தியா பதிலடி கொடுத்தால் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது.
    • ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் மூலம் தனியாரிடம் தூய்மைப் பணி வழங்கப்பட்டது. தற்போது, ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

    ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் குப்பைகளை மட்டுமே அகற்றுவதால், நகராட்சி முழுவதும் கழிவுநீா்க் கால்வாய்கள் தூா்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ள நிலையில், நிரந்தர தூய்மைப் பணியாளா்களாக 8 போ் மட்டுமே உள்ளனா். இவா்களும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதால், தூய்மைப் பணி முற்றிலும் முடக்கியுள்ளது.

    எனவே தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத்தலைவா் குமாா் தலைமை வகித்தாா். ஆணையா் ஆண்டவன், துணைத் தலைவா் ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கைக்கு ஏற்ப தனியாரிடம் வழங்கப்பட்ட தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடா்ந்து குடிநீா் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, உயா்மின் விளக்கு, பொதுக் கழிப்பிடம், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகா் மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

    நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஆண்டவன் தெரிவித்தாா். நிறைவாக மன்ற பொருள் வாசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×