என் மலர்
நீங்கள் தேடியது "தொழில்நுட்ப கோளாறு"
- விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
- போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சேலத்தில் இருந்து இன்று மதியம் ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு சென்றது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை அருகே அந்த விமானம் சென்றது. திடீரென்று அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானிகள் அதை சாலையில் தரை இறக்கினர். இதில் விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. திடீரென்று சாலையில் விமானம் தரை இறங்கியதல பரபரப்பு உண்டானது.
போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- AMSS ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
- பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு தானியங்கி அமைப்பில் (AMSS) ஏற்பட்ட கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
நேற்று மாலை தொடங்கிய இந்தக் கோளாறு, ஆட்டோ டிராக் சிஸ்டம் (ATS) மற்றும் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பு (AMSS) ஆகியவற்றைப் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்நுட்பக் குழு கோளாறை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும், விரைவில் அதைச் சரிசெய்வதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தீர்க்க தங்கள் ஊழியர்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (AMSS) தொழில்நுட்பக் கோளாறால் தங்கள் விமான நிலையத்திலும் விமான இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணம் மேலதிக தகவல்களுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் தடங்கலுக்கு வருந்துவதாகவும் மகாரஷ்டிராவின் மும்பை சத்திரபதி மகராஜ் விமான நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.
விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு உதவிகளை வழங்கின. மேலும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தின.
நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சர்வர் செயலிழப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது.
- இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவிற்கு திருப்பி விடப்பட்டது.
AI 174 போயிங் 777 ரக விமானம் மதியம் 2.47 மணிக்கு சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்டது. இரவு 9.59 மணிக்கு கொல்கத்தா வழியாக வந்து டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்தது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது.
- இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார்.
நேற்று முன் தினம், உலக அளவில் அமேசான் வெப் சர்விசஸ் (AWS) சர்வர் தொழில்நுட்பம் பாதிப்புக்குள்ளானது.
இதனால் AWSஐ சார்ந்து இயங்கும் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்களும் இதனால் பாதிக்கப்பட்டன. சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது. அதிக வெப்பத்தில் தூங்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சில பயனாளர்கள் பதிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார். எதிர்காலத்தில் ஆஃப்லைனிலும் கட்டில்கள் இயங்கும் வண்ணம் உருவாக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது
- விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
நேற்று, பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.
பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் (RAT) தானாகத் திறந்து கொண்டது.
இதை கவனித்த விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
விமானம் தற்போது பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை (AI114) ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஃப்ளாப் ட்ரான்சிட் லைட் கோளாறை விமான குழு கண்டறிந்தது.
- மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
மகாரஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து டெல்லி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், நடுவானில் ஏற்பட்டதொழில்நுடப கோளாறு காரணமாக திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இன்று காலையில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஃப்ளாப் ட்ரான்சிட் லைட்' (flap transit light) கோளாறை விமான குழு கண்டறிந்த நிலையில் மீண்டும் புனே விமான நிலையத்துக்கே விமானம் திரும்பியது.
இருப்பினும் அவசர நிலை ஏதும் இல்லை என நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் பயணிகள் பத்திரமாக வெளிற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.
- துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
- பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12.20 மணிக்கு துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
மதுரையில் இருந்து துபாய் செல்ல தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
130 பயணிகளுடன் ஓடுபாதைக்கு சென்றபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
- விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் கே.சி.வேணுகோபால், கே.ராதாகிருஷ்ணன், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் அடூர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு கேரள எம்.பி.க்கள் அடங்குவர்.
கடந்த ஜுன் மாதம் 12 ஆம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
- லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் ரத்தானது.
- பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-9 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படுவதற்கு முன் ரத்து செய்யப்பட்டது.
இன்று ஜூலை 31, டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா Boeing 787-9 ரக விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது ரத்து செய்யப்பட்டது என ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பயணிகளை விரைவில் லண்டனுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகதிடம் (DGCA) இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களை இயந்திரக் கோளாறுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தத் தரவு பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் 2020 முதல் 2025 வரை, 65 விமான எஞ்சின்கள் செயலிழந்த சம்பவங்களும், 11 'மேடே' அழைப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகதிடம் (DGCA) இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்தள்ளது.
இந்த 65 சம்பவங்களிலும், விமானிகள் விமானத்தை அருகிலுள்ள விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக திருப்பி விட்டு விபத்தை தவிர்த்தனர்.
மாதத்திற்கு ஒரு விபத்து ஆபத்து என்ற விகிதத்தில், இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களை இயந்திரக் கோளாறுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தத் தரவு பிரதிபலிக்கிறது.
மேலும் DGCA வழங்கிய தரவுகளின்படி, ஜனவரி 1, 2024 முதல் மே 31, 2025 வரை, பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானி, அவசர தரையிறக்கத்தைக் கோரிய 11 மேடே(MAYDAY) அழைப்புகள் வந்துள்ளன.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான AI-171 மே டே அழைப்பு இந்தத் தரவுகளில் சேர்க்கப்படவில்லை. 11 விமானங்களில் 4, ஐதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது தெரியவந்தது.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
- 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை இன்று காலை பாதிக்கப்பட்டது.
கோயம்பேடு - அசோக் நகர் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரெயில்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் - சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான அட்டவணைபடி இயக்கப்படுகிறது.
விம்கோ நகர் டிப்போவிலிருந்து விமான நிலையம் வரை நீலப்பாதையில் மற்றும் சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை பசுமைப் பாதையில் வழக்கமான அட்டவணைப்படி ரெயில் சேவைகள் இயங்குகின்றன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் மீண்டும் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.






