என் மலர்tooltip icon

    உலகம்

    தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு.. இங்கிலாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் திக் திக் நொடிகள்
    X

    தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு.. இங்கிலாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் திக் திக் நொடிகள்

    • பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது
    • விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

    நேற்று, பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

    பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் அவசரகால ரேம் ஏர் டர்பைன் (RAT) தானாகத் திறந்து கொண்டது.

    இதை கவனித்த விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

    விமானம் தற்போது பர்மிங்காமில் ஆய்வில் வைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து டெல்லிக்குச் செல்லும் அடுத்த விமான சேவை (AI114) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×