என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Air-India"
- விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியானது.
- அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக மழைக்காலத்தில் மக்கள் குடை இல்லாமல் வெளியில் செல்வது கிடையாது. ஒருவேளை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்த பல்வேறு சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.
இதேபோன்று ஒரு சம்பவம் விமானத்தில் ஏற்பட்டது என்றால் நம்புவீர்களா?. நம்பித்தான் ஆக வேண்டும். ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இருக்கைகைளுக்கு நடுவே மழைநீர் கொட்டுவதுபோல் நீர் கொட்டியது.
மழைநீர் கொட்டுவதை அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவுடன் "ஏர் இந்தியா.. எங்களுடன் பறந்து செல்லுங்கள்- இது ஒரு பயணமாக மட்டும் இருக்காது, ஒரு மிகச் சிறந்த அற்புதமான அனுபவமாகவும் இருக்கும்" என்று அதன் விளம்பரத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இந்த விமானம் எங்கிருந்து எங்கே சென்றது என்பதை அவர் குறிப்பிடவில்லை. பொதுவாக விமானத்தில் காற்று கூட புகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் நிலையில் மழை நீர் எவ்வாறு? என கேள்வியும் எழும்பத்தான் செய்கிறது. தொழில் நுட்பகோளாறாகக் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், விமான நிறுவனம் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபோதிலும், ஒன்றுமே நடக்காதது போல் பயணிகள் பயணித்தனர். இதுகுறித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது.
- விமானத்தில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டு இருக்கும் புதிய வீடியோவில், நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்போருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நவம்பர் 19-ம் தேதி இந்தியாவில் ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற இருக்கிறது. நவம்பர் 19-ம் தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
நவம்பர் 19-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
- இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.
- ஏர் இந்தியா விமானம் தனது சேவையை நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது
புதுடெல்லி:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 19-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், போர் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.
- ஏர் இந்தியா விமானம் தனது சேவையை அக்டோபர் 18ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது
புதுடெல்லி:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- இஸ்ரேல் மற்றும் ஹமஸ் அமைப்பு இடையே பயங்கர மோதல்.
- ஹமஸ் படையினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்.
டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரேல் மீது ஹமஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தாக்குதலால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வழக்கமாக திங்கள் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழன் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என வாரத்திற்கு ஐந்து முறை இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் இருந்து டெல் அவிவ்-க்கு செல்லும் ஏர் இந்தியாவின் ஏ.ஐ. 139 விமானமும், டெல் அவிவ்-இல் இருந்து டெல்லி வரும் ஏ.ஐ. 140 விமானமும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் நலன் கருதி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
காசா எல்லை பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹமஸ், இன்று இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலால் இஸ்ரேலில் போர் துவங்கி இருக்கிறது. போர் காரணமாக நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
- விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய குழுவினர், பயணிகளுக்கு உதவிகளை வழங்கத் தயாராக உள்ளனர்
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.
அந்த விமானம் மகாதன் விமான நிலையத்தை அடைந்த நிலையில், இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டது. விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.05 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை ஏர் இந்தியா தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள குழுவினர், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர் என்றும், பயணிகளின் மருத்துவ உதவி, தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடர் பயணங்களுக்கான உதவிகளை செய்வார்கள் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது.
- பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.
வாஷிங்டன்:
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை அருகில் உள்ள ரஷியாவுக்கு திருப்பினார்.
ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா நோக்கி வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. பயணிகள் தங்கள் பாதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர்" என்றார்.
- விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
- இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார். விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
விமானத்தில் பயணித்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு ஊழியரை தாக்கி உள்ளார். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோதும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். எனவே, அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். பயணிகளின் பாதுகாப்புடன் உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது,
இவ்வாறு அவர் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக விதிகளின் படி, அத்துமீறி நடக்கும் விமானப் பயணிக்கு, அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்திற்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கலாம்.
- விமான நிலையத்தில் அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
- பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார். டெல்லி விமான நிலையத்தை தொடர்புகொண்டு, விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டிருப்பதாகவும், உடனடியாக தரையிறக்க அனுமதி வேண்டும் என்றும் கூறினார்.
விமான நிலையத்தில் அனுமதி கிடைத்ததும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விமான நிலையத்தில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்தகவலை ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணிகள் எத்தனை பேர் இருந்தார்கள்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
- விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது.
- விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறியிருக்கிறார்.
துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் காக்பிட்டில் தனது பெண் தோழியை பயணிக்க செய்த விமானி மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

"விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்து பயணம் செய்ய வைத்த விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது," என்று டிஜிசிஏ தெரிவித்து இருக்கிறது.
"மிக முக்கியமான பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாமல், முறையான நடவடிக்கை எடுக்க தவறிய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறிய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணிஇடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.