search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airlines"

    • நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
    • ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.

    இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.

    அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    டெல்லியில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். #Airlines #FemaleEmployee #Suicide #MausumiGautam
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மவுசமி கவுதம்(வயது 35). திருமணம் ஆன இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

    இவர் இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கும், இவருடன் பணிபுரியும் சிலருக்கும், விமான நிறுவனம் சார்பில் தென் மேற்கு டெல்லியில் உள்ள குர்கான் நகரில் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதற்காக குர்கான் சுசாந்த் லோக் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தங்கியிருந்து அவர் பயிற்சிக்கு சென்று வந்தார். அதன்பின்பு கடந்த வியாழக்கிழமை இரவு விடுதியில் உள்ள தனது அறைக்கு உறங்கச் சென்றார்.

    நேற்றுமுன்தினம் வெகு நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விருந்தினர் இல்ல ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மவுசமி தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பயிற்சியை முடித்து மவுசமி வெள்ளிக்கிழமை அசாம் செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். ஆனால் அப்படிச் செல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். துப்பட்டாவை பயன்படுத்தி அவர் தூக்குப் போட்டு உள்ளார் அவருடைய உறவினர்கள் வந்த பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்படும். இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.  #Airlines #FemaleEmployee #Suicide #MausumiGautam
    இலங்கை அரசு விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரியை நாய் கூட சாப்பிடாது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankaAirlines
    கொழும்பு:

    சமீபத்தில் நேபாளத்தில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரி தரம் குறைந்ததாக இருந்துள்ளது. இதனை குறிப்பிட்டு, ‘விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய் கூட சாப்பிடாது’ என அவர் கூறியிருந்தார்.

    மேலும், விமான நிறுவனத்திற்கு முந்திரிகள் சப்ளை செய்தது யார்? என்ற விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து, இலங்கை விமானங்களில் முந்திரி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. துபாயை சேர்ந்த சப்ளையருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
    ×