என் மலர்
நீங்கள் தேடியது "மகாராஷ்டிர அரசு"
- நிலத்தை மாற்றிய பிறகு, அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு நடந்திருப்பது தெரியவந்தது.
- மனுவை கலெக்டர் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார்.
மும்பை:
நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பெயரில் பங்களா உள்ளது. ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகான் பெயரில் உள்ள இந்த பங்களா இருக்கும் நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. அந்த நிலத்தை இதற்கு முன்பு அந்த பங்களாவை வைத்திருந்தவருக்கு மாநில அரசு குத்தகைக்குவிட்டிருந்தது. அதனை வாங்கியவர் ஷாருக்கானுக்கு விற்பனை செய்தார். 2,446 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த வீட்டுடன் கூடிய நிலத்தை ஷாருக்கான் வாங்கிய பிறகு மாநில அரசு புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. அதன்படி மாநில அரசிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கியவர்கள் குறிப்பிட்ட பணம் செலுத்தி அதனை சொந்தமாக்கி கொள்ள முடியும்.
இந்த கொள்கையை பயன்படுத்தி ஷாருக்கான் தனது வீடு இருந்த நிலத்திற்கு பணம் செலுத்தி குத்தகையில் இருந்த நிலத்தை சொந்தமாக்கி கொள்ள அரசிடம் விண்ணப்பித்தார். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து அதன் மதிப்பில் 25 சதவீதத்தை செலுத்தும்படி ஷாருக்கானிடம் கூறினர்.
இதையடுத்து ஷாருக்கான் ரூ.27.50 கோடி செலுத்தி நிலத்தை தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயருக்கு மாற்றினார். நிலத்தை மாற்றிய பிறகு, அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு நடந்திருப்பது தெரியவந்தது.
இதனை 2022-ம் ஆண்டு ஷாருக்கான் கண்டுபிடித்ததோடு, தான் கூடுதலாக செலுத்திய ரூ.9 கோடியை திருப்பி கொடுக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை கலெக்டர் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார். அதை ஏற்று மாநில அரசு ஒப்புதல் கொடுத்த பிறகு ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி திருப்பி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது.
- இந்தி நடிகை பூஜாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்பை:
நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதற்கு இந்தி திரையுலகம் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லோண்டே கூறியதாவது:-
மகாராஷ்டிர பா.ஜ.க. அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. பிரபல நடிகர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பிரபலங்கள் வீடுகளில் குண்டு துளைக்காத ஜன்னல்கள் இருக்கும். அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்.
இதுபோன்ற சம்பவங்களால் மாநிலத்தின் முதலீடுகள் பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியதாவது:-
சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. அவர் ஆஸ்பத்திரியில் நலமாக இருக்கிறார். இந்த சம்பவம் மும்பையில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ராம்கதம் கூறும்போது, 'சைஃப் அலி கானை தாக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவான். போலீசார் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
இந்தி நடிகை பூஜாபட், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பயமாகவும் உள்ளது என்று பூஜா பட் தெரிவித்துள்ளார்.
- ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
- ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா' இருந்த வீடியோ வைரல்
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இதனிடையே, ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் 'கோவா' உயிரிழந்து விட்டதாக வாட்சப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அந்த செய்தியில், ரத்தன் டாடா உயிரிழந்து 3 நாட்களுக்கு பிறகு அவரது வளர்ப்பு நாய் கோவா உயிரிழந்து விட்டது. மனிதர்களை விட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம் கொண்டவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் உயிரிழந்ததாக பரவும் செய்தி பொய்யானது என்று மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்தார்.
- மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மாலை மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்த பிரபல சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவுக்கு மணற் சிற்பம் செய்துள்ளார்.
- தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
- ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினர்.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மாலை மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Ratan Tata's love for dogs was legendary. His pet (Goa) meeting him for the last time ? #Ratan #RatanTata pic.twitter.com/paX54zihwu
— Prashant Nair (@_prashantnair) October 10, 2024
- ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
- ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஊழல், லஞ்சம் குறித்து ரத்தன் டாடா தெரிவித்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
2010 ஆம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரத்தன் டாடா, "அமைச்சர் ஒருவருக்கு 15 கோடி கொடுத்தால் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஒரு தொழிலதிபர் எனக்கு ஆலோசனை கூறினார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.
அப்போது அந்த தொழிலதிபர், "நீங்கள் ஏன் அமைச்சருக்கு பணம் கொடுக்கக்கூடாது. அமைச்சருக்கு 15 கோடி தேவைப்படுகிறது. உங்களுக்கு விமான ஒப்பந்தம் தேவையில்லையா? நீங்கள் ஒரு முட்டாள்" என்று அவர் கூறினார்.
"உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை. நான் பணம் கொடுத்து விமான ஒப்பந்தம் பெறவில்லை என்று தெரிந்த பின்பு இரவு வீட்டிற்கு சென்று தூங்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்திற்காக நான் அவருக்கு பணம் கொடுத்திருந்தால் நான் மிகவும் அவமானமாக உணர்ந்திருப்பேன்" என்று அவரிடம் தெரிவித்ததாக ரத்தன் டாடா கூறினார்.
ஆனால் அந்த அமைச்சர், தொழிலதிபரின் விவரங்களை ரத்தன் டாடா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும்.
- மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ள ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தொழிலதிபரும், கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' வழங்க மத்திய அரசை வலியுறுத்தி மகாராஷ்ர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது 'பாரத ரத்னா' என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின.
- சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீரென அவரது அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்து வந்த மெகா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தனர். இதனால் பா.ஜனதா-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் புதிய ஆட்சி அமைந்தது.
ஏக்நாத்ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், சிவசேனா கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின. இது தொடர்பாகவும், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் இரு பிரிவினர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சிவசேனாவின் வில்-அம்பு சின்னத்தை பயன்படுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை தொடர்ந்து விசாரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி முதல் 9 நாட்கள் விசாரணை நடந்தது. இரு பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 16-ந் தேதி அறிவித்தது.
இந்தநிலையில் சிவசேனா கட்சி, சின்னம் மற்றும் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
மேலும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய நேரத்திற்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசு ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது.
- பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார்.
- இன்று காலை தேசிய கீதம் பாட வேண்டுமென மகாராஷ்டிர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மும்பை:
இந்தியா சுதந்திரத்தின் 76-வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை பதிவிடுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டன.
இந்நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என மகாராஷ்டிர மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் 11.01 மணிக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும். மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் சுவராஜ் மகோத்சவின் ஒரு பகுதி என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.