search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national anthem"

    • காணொலி முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது.
    • காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

    தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சரோஜினி நாயுடு, அம்பேத்கர், மவுலானா அப்துல் கலாம் அசாத், சர்தார் வல்லபாய் பட்டேல், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர்களின் குரல்களில் தேசிய கீதம் பாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த காணொலி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளதாக இணையவாசிகள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

    மேலும், இந்த முயற்சி வரலாற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர்ப்பிக்கிறது. சுதந்திர தினத்தன்று நாட்டின் முக்கிய தலைவர்களை அவர்களின் வடிவத்தில் நெருங்கி காணவும், அவர்களுடன் கொண்டாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதோ அந்த காணொலி..

    • ஸ்ரீநகரில் சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது.
    • போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

    ஸ்ரீநகர்

    காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த மாதம், போலீஸ் ஏற்பாட்டில் நடந்த சைக்கிள் ஓட்ட நிகழ்வின் நிறைவு விழா நடைபெற்றது. துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா பங்கேற்ற இந்த விழாவின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அப்போது அதற்கு மரியாதை அளிக்கும்வகையில் சிலர் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத சில போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதை ஸ்ரீநகர் போலீஸ் மறுத்துள்ளது.

    அதன் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், 'தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சில போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு தவறான தகவல் உலா வருகிறது.

    ஆனால் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது சட்டரீதியான நடவடிக்கைதான் எடுக்கப்படுகிறது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நிற்பதை உறுதி செய்யாத போலீஸ் இசைக்குழு மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்கான ஆணை டிஸ்லரி மேலாளரிடம் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களை செய்து தரும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது

    இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, நகர மன்ற தலைவர் நகர மன்ற துணைத் தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளிகளில் மறு சுழற்சி செய்வதற்கான ஆணையை டிஸ்லரி மேலாளர் கணேசனிடம் வழங்கினார். மேலும் மாணவர்களின் பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறை விளக்கத்தையும் கேட்டறிந்தார்

    நிகழ்வு முடிவதற்குள் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற நிலையில் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

    இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து மாணவ மாணவியர்கள், அரசு அதிகாரிகள், நகராட்சி, நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடினர். ஆனால் தேசிய கீதத்தை அவமதிக்கும் விதமாக முதன்மை கல்வி அலுவலர் ராமன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அதிகாரி, தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் உரையாடிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சட்டமன்ற கூட்ட தொடரில் பாதியிலேயே திரும்பி சென்றது.
    • கவர்னர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு என்று சொல்லாமலும், கூட்டத் தொடரில் பாதியிலேயே திரும்பி சென்றது ஆகிய செயல்களைக் கண்டித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தஞ்சை ரெயிலடியில் இன்று மதியம் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது கவர்னர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என கூறி அவரை கண்டித்து கோசங்கள் எழுப்பி கருப்புக் கொடி காட்டினர்.

    இதனைத் தொடர்ந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன.
    • 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.

    உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.

    196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.

    • பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 9-வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார்.
    • இன்று காலை தேசிய கீதம் பாட வேண்டுமென மகாராஷ்டிர அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மும்பை:

    இந்தியா சுதந்திரத்தின் 76-வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

    பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை பதிவிடுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து இல்லந்தோறும் மூவர்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவர்ணக் கொடி செல்பி படங்கள் பதிவேற்றப்பட்டன.

    இந்நிலையில், சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணிக்கு மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என மகாராஷ்டிர மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் 11.01 மணிக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும். மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் சுவராஜ் மகோத்சவின் ஒரு பகுதி என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #PMModi #NationalAnthem
    சென்னை:

    தமிழகத்தில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி வேம்பு என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். #PMModi #NationalAnthem
    ×