என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் அரசு நிகழ்ச்சில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் - வீடியோ வைரல்
    X

    இஸ்ரேல் அரசு நிகழ்ச்சில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம் - வீடியோ வைரல்

    • இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இஸ்ரேலிய போலீசார் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர்.
    • இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிகழ்வின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    இஸ்ரேலில் ஓட்டமன் சாம்ராஜ்யத்தியில் இருந்து விடுதலை கிடைத்த ஹைஃபா போரின் 107 ஆவது நினைவு நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

    இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ஜே.பி. சிங், இஸ்ரேல் ராணுவத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த விழாவில், இஸ்ரேலிய போலீசார் இந்திய தேசிய கீதத்தை இசைக்கச் செய்தனர்.

    இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், நிகழ்வின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, "1918-ல் ஹைஃபாவை விடுவித்த ஜோத்பூர், மைசூர் மற்றும் முன்னாள் ஹைதராபாத் பகுதிகளைச் சேர்ந்த இந்திய குதிரைப் படை வீரர்களின் வீரம் மற்றும் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    மேலும் இதுகுறித்து பேசிய இந்திய தூதர் ஜே.பி. சிங், "முதலாம் உலகப் போர் காலத்தில் 74,000-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றும் இஸ்ரேலில் ஐ.நா. அமைதி படைகளில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×