search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில், 2வது அரையிறுதியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லக்வின் அபேசிங்க 69 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

    ஆயுஷ் மத்ரே 34 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரை சதமடித்து 67 ரன்னுக்கு அவுட்டானார்.

    இறுதியில் இந்தியா 21.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷி க்கு வழங்கப்பட்டது.

    முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை சுருட்டி எளிதில் வீழ்த்தியது வங்கதேசம். இறுதிப்போட்டியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது.

    • உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷியா சாதனை படைத்து வருகிறது.
    • விவசாயம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் இந்தியாவை பாராட்டினார். அதிபர் புதின் பேசியதாவது:-

    இந்திய பிரதமர் மோடியிடம் 'மேக் இன் இந்தியா' திட்டம் உள்ளது. அது ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்துக்கு இணையாக உள்ளது. 'மேக் இன் இந்தியா' திட்ட முயற்சி பாராட்டுக்குரியது. இந்தியாவில் பொருளாதார திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமர் மோடி சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறார். எங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க நாங்களும் தயாராக உள்ளோம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரதமர் மோடியும், இந்திய அரசும் நிலையான தன்மைகளை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

    நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரஷியா சாதனை படைத்து வருகிறது. மேற்கத்திய பொருட்களை விட ரஷிய பொருட்கள் அதிகமாக விற்பனையாகிறது. மேலும் விவசாய உற்பத்தியும் ரஷியாவில் பெருகியுள்ளது. விவசாயம் செய்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

    1988-ம் ஆண்டு ரஷ்யா 35 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை இறக்குமதி செய்தது. கடந்த ஆண்டு நாங்கள் 66 பில்லியன் டாலர்களுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்தோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நாளை தொடங்குகிறது.
    • முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் பெர்த் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டுவில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆன பிறகு பெர்த் டெஸ்டில் பெற்ற வெற்றி மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் லெவனுக்கு எதிரான பகல்-இரவு பயிற்சி ஆட்டத்திலும் வென்று இருந்தது.

    இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளெயிங் 11 அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் ஹேசில்வுட்டிற்கு பதிலாக ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அடித்த பந்தை பவுண்டை லைனில் தடுத்த இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் பந்தை வீசினர். அந்த பந்தை பிடித்த ஹர்வன்ஷ் சிங் திரும்பி பார்க்காமலேயே எம்.எஸ்.டோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

    ஆனால் அதற்கு ஐக்கிய அரபு அமீரக வீரர் கிரீசுக்குள் வந்துவிட்டதால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் டோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்த இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    • மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரையிறுதியை எட்டின.

    அரையிறுதி போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 5 ஆவது முறையாக ஜூனியர் ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

    • சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது.
    • நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.

    இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சமீபத்திய ஐ.சி.சி.யின் கூட்டம் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்தில் மாற்றுவதற்கு (ஹை பிரிட் மாடல்) பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டது. இதை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே ஹைபிரிட் மாடலை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தான் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் தங்களுக்கு உரிய ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உள்ளது.

    இதை ஏற்று உறுதியான எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிபந்தனை 3 ஆண்டுகளுக்கா? அல்லது 2031 வரையிலான ஐ.சி.சி. சுழற்சி முறை போட்டிகள் வரையா? என்று தெரியவில்லை.

    இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் 3 ஐ.சி.சி. போட்டிகள் தொடங்குகிறது. 2026 பிப்ரவரியில் 20 ஓவர் உலக கோப்பையை இலங்கையுடன் இணைந்து நடக்கிறது. 2029-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2031-ல் உலக கோப்பை போட்டிகளை நடத்துகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீதத்தில் முடிந்தது
    • விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியினர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

    ஆய்வுகூடமான இந்தியா

    இந்தியா புதிய விஷயங்களைச் சோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் என உலகப் பணக்காரர் பில் கேட்ஸ் கூறியுள்ள கருத்துக்கு கண்டங்கள் எழுந்துள்ளது. வேலை தேடும் தளமான லிங்க்ட்இன் தளத்தின் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் உடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், இந்தியாவில் கடினமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு வருகின்றன, மேலும் அவை போதுமான அளவு நிலையான வருவாய் உருவாகி வருகிறது.

    இன்னும் 20 வருடங்கள் கழித்து அங்குள்ள மக்கள் வியத்தகு முறையில் முன்னேறி இருப்பார்கள். எனவே இந்தியா [புதிய] விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும் ஆய்வுக்கூடம் போன்றது. அங்கு நிரூபனம் ஆன பிறகு அவற்றை [திட்டங்களை] இடங்களுக்கு[ நாடுகளுக்கு] எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

     

     சோதனை எலிகளான பழங்குடியின மாணவிகள் 

    முன்னதாக பில் கேட்ஸ் தனது மனைவி பெயரில் நடத்தும் தொண்டு நிறுவனமான மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன்14,000 இந்திய பழங்குடியின பள்ளி மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விபரீத முடிவுகளைசுட்டிக்காட்டி பலர் பில் கேட்ஸ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இயங்கும் PATH (Programme for Appropriate Technology in Health) என்ற அரசு சாரா நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் [ ICMR] உடன் இணைத்து தெலுங்கானா மற்றும் குஜராத் வதோதரா பகுதிகளில் உள்ள 14,000 பழங்குடியின மாணவிகளுக்குப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு அதன் விளைவுகள் பரிசோதிக்கப்பட்டது.

    இந்த சோதனை தொடங்கி சில மாதங்களுக்குப் பிறகு, பல மாணவிகளுக்குக் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டது. 7 பழங்குடியின மாணவிகள் சோதனை தடுப்பூசி விளைவுகளால் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்களின் இறப்புக்கான காரணம் தொற்று பாதிப்பு, தற்கொலை என வேறு விதமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோப்புப் படம்

     

    விழிப்புணர்ச்சி 

    விசாரணையின்மூலம் ஆராய்ச்சியில் நடந்த விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சுகாதார முன்னெடுப்பு என கூறி இந்த சோதனைகள் நடத்தப்பட்டது என்றும் சம்மத படிவத்தில் பழங்குடியின மாணவிகளின் பெற்றோருக்குப் பதில் அவர்கள் தங்கிப் படித்து வந்த விடுதி காப்பாளர்கள் கையெழுத்திட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விழிப்புணர்ச்சி இல்லாததால் ஆராய்ச்சிக்குப் பழங்குடியின சிறுமிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.  

    ஸ்கின் டாக்டர் 

     2009 தடுப்பூசி சோதனைகள், வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவனங்களால் இந்தியாவும் பிற வளரும் நாடுகளும் எவ்வாறு சோதனைக் களமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 'ஸ்கின் டாக்டர்' என்ற விமர்சகர், நிதியுதவி பெறும் எத்தனை என்ஜிஓக்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற சோதனைகளை நடத்துகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?

     

    எங்களை வெளிப்படையாகக் கினிப் பன்றிகளாக நடத்தும் அதே வேளையில், எங்கள் ஆட்சியாளர்களை அவர்கள் எவ்வளவு எளிதாக அணுகுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் முகேஷ் அம்பானி மகன் திருமணத்துக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

    • ‘ஏ’ பிரிவில் இந்தியா முதலிடமும், ஜப்பான் 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
    • ‘பி’ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின.

    மஸ்கட்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் இந்தியா (12 புள்ளி) முதலிடமும், ஜப்பான் (9 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியா (6 புள்ளி), தாய்லாந்து (3 புள்ளி), சீன தைபே (0) முறையே 3 முதல் 5 இடங்கள் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.

    'பி' பிரிவில் பாகிஸ்தான் (12 புள்ளி) முதலிடத்தையும், மலேசியா (7 புள்ளி) 2-வது இடத்தையும் கைப்பற்றி அரைஇறுதியை எட்டின. வங்காளதேசம் (5 புள்ளி) 3-வது இடமும், சீனா (4 புள்ளி) 4-வது இடமும், ஓமன் (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை கோட்டை விட்டன.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) அரைஇறுதி ஆட்டம் அரங்கேறுகிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவுடன் மல்லுக்கட்டுகிறது.

    லீககில் தங்களது 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற (தாய்லாந்து, ஜப்பான், சீன தைபே, தென்கொரியா) இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டுள்ள மலேசிய அணி இறுதிப்போட்டியை எட்ட கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. முன்னதாக நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் (மாலை 4.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.
    • 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஷார்ஜா:

    8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 340 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஜப்பான் அணியினர், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 211 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சேத்தன் சர்மா, ஹார்டிக் ராஜ், கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 4ம் தேதி யு.ஏ.இ அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தோல்வி கண்டால் யு.ஏ.இ அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    • இந்திய அணி 4 (ஆஸ்திரேலியா) போட்டிகளில் 2 வெற்றி பெற வேண்டும்.
    • தென் ஆப்பிரிக்கா அணி 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

    புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணிக்கு இன்னும் 4 (ஆஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

    ஆஸ்திரேலியாவுக்கு 6(4 இந்தியா 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும் இலங்கைக்கு ( 1 தென் ஆப்பிரிக்கா 2 ஆஸ்திரேலியா)3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

    • இந்திய கேப்டன் அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
    • ஜப்பான் தரப்பில் அதிகபட்சமாக கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    ஷார்ஜா:

    8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் விளையாடி வருகிறது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மத்ரே களமிறங்கினர். சூர்யவன்ஷி 23 ரன்களிலும், ஆயுஷ் மத்ரே 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து ஆண்ட்ரே சித்தார்த் தனது பங்குக்கு 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    மிடில் ஓவர்களில் ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது அமான்- கார்த்திகேயா ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கார்த்திகேயா 57 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் அமான் நிலைத்து விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

    நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. ஜப்பான் தரப்பில் கீபர் லேக் மற்றும் ஹ்யூகோ கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஜப்பான் பேட்டிங் செய்து வருகிறது. 

    ×