search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக் கோப்பை"

    • உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது ஐபிஎல் லீக் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், சி.எஸ்.கே .அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பிசிசிஐ தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2011 உலகக் கோப்பை டிராபி மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

    மேலும், மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.

    • உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்றது.
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    ஓமனில் நடைபெற்று வரும் முதலாவது ஐவர் மகளிர் ஆக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம்பெற்று இருந்தது.

    இதே பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்கா, போலந்து, நமீபியா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. லீக் சுற்றில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பாதையில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    அந்த வகையில் இந்திய அணி இன்று (ஜனவரி 26) காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடியது.

     


    போட்டி முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தியா சார்பில் தீபிகா சோரெங், ருதஜா பிசல் ஆகியோர் தலா 3 கோல்களும், மும்தாஜ் கான், மரியானா குஜூர் ஆகியோர் தலா 2 கோல்களும், ஓரிவா ஹெபி 1 கோல் அடித்தனர்.

    அரையிறுதி சுற்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. லீக் சுற்று வெற்றிகளை தொடர்ந்து இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    • இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனை.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டார். தொடரில் தான் விளையாடிய ஏழு போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது 2023 உலகக் கோப்பை தொடரில் மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிகம் ஆகும். இதில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    ஒரே உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகளை தகர்த்த முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் அதுவரை செய்யாத சாதனையாக அமைந்தது. இலங்கை அணிக்கு எதிராக முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய சம்பவம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

     


    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது தனது ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி தரையில் முழங்காலிட்டு அமர்ந்தார். இதனை நெட்டிசன்கள் வேறு விதத்தில் புரிந்து கொண்டு, அதனை சர்ச்சையாக்கும் செயலில் தீயாக ஈடுபட்டனர்.

    அதன் படி, "ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய போட்டி ஒன்றில் நீங்கள் தரையில் முழங்கால் வைத்தீர்கள். உடனே பாகிஸ்தானை சேர்ந்த சிலர், முகமது ஷமி ஒரு இந்திய முஸ்லீம், அவர் சஜ்தா (பிரார்த்தனை) செய்ய முற்பட்டார், ஆனால் இந்தியாவில் இதை செய்ய அவர் அஞ்சுகிறார்," என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, "யாராவது சஜ்தா செய்ய நினைத்தால், யார் தடுக்க முடியும். நான் மற்ற மதத்தை சேர்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டேன், நீங்களும் மற்ற மதத்தை சார்ந்த யாரையும் அப்படி தடுக்க மாட்டீர்கள். எனக்கு சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை செய்வேன். அதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது? நான் ஒரு முஸ்லீம் என்பதை பெருமையுடன் கூறுவேன். நான் ஒரு இந்தியன் என்று கூறுவதில் நான் பெருமை கொள்கிறேன்."

     


    "எனக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், நான் இந்தியாவில் வசித்து இருக்க மாட்டேன். நான் சஜ்தா செய்ய யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டும் என்றால், நான் ஏன் இங்கு வாழ வேண்டும். நானும் அத்தகைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பார்த்தேன். நான் எப்போதாவது மைதானத்தில் சஜ்தா செய்திருக்கிறேனா? நான் ஏற்கனவே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன். நான் சஜ்தா செய்ய வேண்டுமெனில், நான் அதை எங்கு செய்ய வேண்டும் என சொல்லுங்கள், நான் அதை செய்வேன்."

    "இந்தியாவின் ஒவ்வொரு மேடையிலும் நான் அதை செய்வேன். யாரும் என்னை தடுக்க முடியாது. இவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் உங்களுடனோ அல்லது என்னுடனோ இல்லை. அவர்கள் யாரையும் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பிரச்சனை மட்டுமே ஒரே குறிக்கோள். நான் எனது உடலை வருத்திக் கொண்டு பந்துவீசியதால் முழங்காலிட்டேன். எனக்கு சோர்வாக இருந்தது. மக்கள் அந்த செய்கையை வேறு மாதிரி நினைத்து கொண்டனர்," என தெரிவித்துள்ளார். 

    • இந்திய கேப்டன் நவ்ஜோத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
    • அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றது.

    சலாலா:

    ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்ற 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஹாக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசிய அணியை எதிர் கொண்டது. லீக் சுற்றை போலவே இதிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-5 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தரப்பில் நவ்ஜோத் கவுர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வீருநடை போடுகிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒமன் நாட்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்து அணியுடன் இன்று இரவு பலபரீட்சை நடத்த உள்ளது. முன்னதாக இவ்விரு அணிகள் மோதிய லீக் சுற்றில் இந்திய அணி தாய்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.




    • உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.
    • ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்தியா தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சர்ச்சை கருத்துகளும் பரவிய வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்கு பிறகுதான் பிளே ஆஃப் விளையாட முடியும்.

    ஆனால், உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.

    ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.
    • தகுதி சுற்று போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் மற்றும் போட்டி அட்டவணை வெளியீடு.

    10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில், தகுதி சுற்று போட்டியில் விளையாடும் அணிகளின் பட்டியல் மற்றும் போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

    இதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது.

    • நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • ருத்ரங்க்ஷ் பாட்டில் அவருடன் போட்டியிட்ட மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகளில் தோற்கடித்தார்.

    எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்து உள்ளது.

    10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

    ×