search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "win"

    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின.
    • பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே. சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்றுமாலை தொடங்கியது.

    தொடக்க விழாவுக்கு தமழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்புக்குழு தலைவ ருமான டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், கே.ஏ.ஜி.டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ரவிச்சந்திரன், ஒட்டல் லீ பேலஸ் இயக்குனர் ஏ.என். கார்த்திக், போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின. இதில் வருமானவரி 25-17, 25-23 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. அணி 19-25, 26-24, 25-23 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.மை போராடி வென்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 17-25, 20-25 என்ற கணக்கில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 2-0 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது.

    இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்க ளில் ஜி.எஸ்.டி-டி.ஜி.வைஷ்ணவா, தமிழ்நாடு போலீஸ்-வருமானவரி, இந்தியன்வங்கி-எஸ்.ஆர்.எம்., ஐ.ஒ.பி.-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.-எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ்-டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் மோதுகின்றன.

    • புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
    • பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    சென்னை:

    மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவா அணி (ராம்-நிதின்) 21-18, 17-21, 15-9 என்ற செட் கணக்கில் மெரினா பீச் கிளப் அணியை (ராபின்-பரத்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், அரேபியன் கார்டன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கே.அப்துல் நபீல், மாநகராட்சி மண்டல சேர்மன் மதியழகன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம். அழகேசன் செயலாளர் மகேந்திரன், சேலம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
    • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

    ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

    பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

    • பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது.
    • தச்சநல்லூரில் பால்கண்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    பா.ஜனதா கட்சியுடனான அ.தி.மு.க. கூட்டணி நேற்று முறிந்தது. இதனையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின்பேரில் தச்சநல்லூரில் முன்னாள் நெல்லை தொகுதி செயலாளரும், டவுன் கூட்டுறவு நகர வங்கி தலைவருமான பால்கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பகுதி செயலாளர் சக்திகுமார், பகுதி துணைச்செயலாளர் பழனி சுப்பையா, சத்ய முருகன், பால்ராஜ், கேபிள் சுப்பையா, கோல்டு கண்ணன், போர்வெல் மணி, வெள்ளரி அய்யப்பன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை தலைவர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

    • பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது.
    • நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.

    திருப்பூர்,செப்.24-

    ஏஐடியூசி., தேசிய பொதுக்குழுக்கூட்டம் திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில் ஏஐடியூசி., அகில இந்திய பொதுச்செயலாளா் அமா்ஜித் கெளா் பேசியதாவது:-

    பாஜக.வின் பிளவுபடுத்தும் இந்துத்துவா சித்தாந்தத்தால் நாட்டில் ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிா்கொள்கிறது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதுடன் மட்டுமல்லாமல் பொருளாதாரம் பின்னடைகிறது.மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. வேலையிழப்பு, ஊதிய குறைப்பு, சமூக பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலை, நிரந்தரத் தொழிலாளா்களின் எண்ணிக்கை குறைப்பு அதிகரித்துள்ளது.

    ஆகவே எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'இந்தியா' கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

    • தூத்துக்குடி மாவட்ட மேல்நிலை பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் எல்.கே. அணி அணி வெற்றி பெற்றது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட மேல்நிலை பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஆறுமுகநேரியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியும், ஆறுமுகநேரி பெர்ல் பப்ளிக் பள்ளி அணியும் மோதின. இதில் 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் எல்.கே. அணி அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்த பள்ளி மாவட்ட கால்பந்து போட்டியில் வென்றுள்ளது.

    வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பள்ளியின் தாளாளர் முகமது லெப்பை தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செய்யது முகைதீன், உதவி தலைமை ஆசிரியர்கள் முகமது சித்திக், ஷேக் பீர் முகமது காமில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால் முகமது, முகமது இஸ்மாயில் மற்றும் போட்டியின் போது வெற்றி கோல்களை அடித்த மாணவர்களான பாஜி, அக்ரம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் இப்ராஹிம் முகமது நோபல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, கோப்பை வழங்கப்பட்டன.

    பணகுடி:

    பணகுடியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சி ராணி, துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் சென்னை, பாண்டிச்சேரி, மதுரை சிவகாசி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதல் பரிசு சென்னை அணியும், 2-ம் பரிசு பணகுடி அணியும், 3-ம் பரிசு தூத்துக்குடி அணியும், 4-ம் பரிசு நெல்லை அணியும் பெற்றது. போட்டியில் முதல் 4 இடங்களை வென்ற அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதில் முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள், தொழிலதி பர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பணகுடி

    அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெய்னூல் ஆப்தின், வக்கீல் ராஜா செய்திருந்தனர்.

    • வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • தடகள் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் வட்டார பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையிலான குழு மற்றும் தடகள போட்டிகள் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆடவர் மற்றும் மகளிருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

    டி.டி.என். கல்வி குழு மத்தின் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கி போட்டிகளை தொடக்கி வைத்தார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை உரை யாற்றினார். தொடர்ந்து மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளாடிஸ் லீமா ரோஸ் தேசிய கொடியையும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் கொடியை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் மற்றும் ஒலிம்பிக் கொடியினை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ஆகியோர் ஏற்றினர்.

    குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், ராதாபுரம் குறு வட்டார செயலாளருமான பெஞ்சமின் வரவேற்று பேசினார். வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் வாழ்த்தி பேசினார். ஆண்களுக்கான தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி பெற்றது.

    2-வது இடத்தை இடிந்தகரை பிஷப்ரோச் மேல்நிலைப்பள்ளியும், 3-வது இடத்தை திசையன் விளை பொதிகை பப்ளிக் மேல்நிலைப்பள்ளி அணியும் பெற்றது. மகளிருக்கான தடகள் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்ட த்தை கூடங்குளம் ஹார்வர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்று சென்றது. 2-வது இடத்தை திசையன்விளை ஹோலி ரெடிமேர்ஸ் மேல்நி லைப் பள்ளியும், 3-வது பரிசை திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியும் பெற்றது.

    வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற தடகள் போட்டியில் 35 பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாட்டி னை ஹை-டெக் பாலி டெக்னிக் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் செய்திருந்தார்.

    • போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர்.
    • சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம், கோப்பையை வென்றது.

    நெல்லை:

    மாநில அளவிலான வக்கீல்கள் இடையேயான கபடி போட்டி தூத்துக்குடி தருவைகுளம் மைதானத்தில் நடந்தது. இதில் 36 மாவட்டத்தை சேர்ந்த வக்கீல்கள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடினர். இந்த போட்டிகளில் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க அணி முதல் பரிசு ரூ.75 ஆயிரத்தையும், கோப்பையையும் தட்டிச்சென்றது. சென்னை உயர்நீதிமன்ற அணி 2-வது பரிசாக ரூ.60 ஆயிரம் மற்றும் கோப்பையும், தூத்துக்குடி அணி 3-வது பரிசாக ரூ.45 ஆயிரமும் பெற்றன. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் அமல் ராஜ், துணைத்தலைவர் வேலு கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஷ் பிரபு, தூத்துக்குடி மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நெல்லை வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் பாலகணேசன், செந்தில்குமார், பொருளாளர் ராஜா, உதவி செயலாளர் சிதம்பரம், நூலகர் இசக்கி பாண்டியன் மற்றும் வக்கீல்கள் லட்சு மணன் ரமேஷ், மகேஷ், மகாராஜன், முத்துராஜ், கதிரவன், அனந்த கிருஷ்ணன், எட்வின் துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கியது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    நெல்லை:

    2023-ம் ஆண்டிற்கான நெல்லை மாவட்ட 24-வது ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் பாளை அண்ணா விளையாட்ட ரங்கில் நேற்று தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது.

    தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்து கொண்டு தேசிய கொடி, ஜோதியினை ஏற்றி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 6 பிரிவுகளில் (12, 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் கள்) மற்றும் பொது பிரிவுகளில் 500 வீரர்கள், 400 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும் முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டி கள் உட்பட மொத்தம் 67 போட்டிகள் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெற விருக்கும் போட்டிகளில் பங்குபெறுவார்கள்.

    இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி யில் நெல்லை மாவட்ட தடகள சங்க தலைவர் செய்யது நவாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு வெற்றிக் கோப்பை களும், சுழற்கோப்பைகளும் வழங்கி பாரட்டினார்.

    மேலும் ஆசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கு பெற்று 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்று சாதனை படைத்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகளான தங்கப் பதக்கம் வென்ற கனிஷ்டா தீனா மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற அபிநயா ராஜராஜன் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தடகள சங்க துணைத்தலைவர் சுரேஷ் , டாக்டர் பிரேம்நாத் மற்றும் நிர்வாகிகள், தடகள சங்க உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்று நர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செய லாளர் சேது நன்றி கூறினார்.

    • கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
    • கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோர்த்தகிரி காந்தி மைதானத்தில் தாலுகா அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அரவோனு ட்ரீம்ஸ் லெவன் கிரிக்கெட் அணியும், கோத்தகிரி ஸ்டார் ஓம்நகர் கிரிக்கெட் அணியும் தகுதிசுற்று 2வது போட்டியில் மோதின.

    இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ட்ரீம்ஸ் லெவன் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 143 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய ஸ்டார் ஹோம் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ட்ரீம்ஸ் லெவன் அணி 3வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது.

    அப்போது கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கெங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோத்தகிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் அமுதம் பாபு ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

    • மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது.
    • போட்டியில் நான்காம் பரிசை வாழத்தூர் அணி வென்றது

    உடன்குடி:

    உடன்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மாவட்ட அளவில் 32 அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் தேரியூர் மைதானத்தில் நடந்தது.

    இதில் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தேரியூர் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், இரண்டாவது பரிசு ரூ. 7 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை வடக்கு காலன்குடியிருப்பு அணியும், மூன்றாவது பரிசு ரூ. 5 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை குருநாதபுரம் அணியும், நான்காம் பரிசு ரூ. 3ஆயிரம் மற்றும் வெற்றிக் கோப்பையை வாழத்தூர் அணியும் வென்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா உடன்குடி மெயின் பஜாரில் நடந்தது. உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளரும், உடன்குடி பேருராட்சி துணைத்தலைவருமான சந்தையடியூர் மால்ராஜேஷ் தலைமை தாங்கி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு. உடன்குடி பேரூராட்சி பணி நியமனக்குழு தலைவர் ஜாண் பாஸ்கர், உடன்குடி பேரூர் அவைத்தலைவர் அப்துல் ரசாக், பேரூர் துணைச் செயலாளர்கள் தங்கம், பிரவீனா, பொருளாளர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் சலீம் வரவேற்றார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர் மோசஸ், முபாரக், மதன், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் பஷீர், மும்தாஜ், வார்டு செயலாளர்கள் அன்வர் சலீம், சித்திரைசெல்வன், முருகேசன் பாலசிங் பாண்டியன், ஆனந்த், கணேசன், சாம்னேஸ், முத்துப்பாண்டி, கணேஷ், நாராயணன், ஒன்றிய பிரதிநிதிகள் ஹரி இசக்கிமுத்து, இஸ்மாயில், உடன்குடி பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் மனோ, உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் சக்திவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் மெராஜ், உடன்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பாய்ஸ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மஹாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ் மற்றும் லெட்சுமி, ஜெபமலர், தீபன் சக்கரவர்த்தி, ஆட்டோ கணேசன், குங்ஃபூ சங்கர், சிவப்பிரசாத், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×