என் மலர்
நீங்கள் தேடியது "exam"
- தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.
திருப்பூர்:
பொது வினாத்தாள் பாணியில் காலாண்டு தேர்வு நடப்பதால், அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வெழுத வைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதை நகலெடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டு முழுமையாக நடந்ததால், மாணவர்களின் கற்றல் திறன் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:-
பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.
தற்போது தொடர் விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் காலாண்டு தேர்வில், 100 சதவீத வருகைப்பதிவுக்கு உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான தேர்வு அரியலூரில் 233 பேர் எழுதினர்
- 233 பேர் தேர்வெழுதிய நிலையில் 140 பேர் எழுத வரவில்லை
அரியலூர்,
மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெறுவதற்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது.தேர்வு எழுதுவதற்காக அரியலூர் மாவட்டத்தில் 373 பேர் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 233 பேர் கலந்து கொண்டனர். 140 பேர் எழுத வரவில்லை. அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தேர்வின்போது ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு இன்று 4 தேர்வு மையங்களில் நடை பெற்றது. திண்டுக்கல்லில் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வறை களில் அனுமதிக்க ப்பட்ட 280 தேர்வர்களில் 224 நபர்களும்,
ஒய்.எம்.ஆர்.பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வ றைகளில் அனுமதிக்கப்பட்ட 268 தேர்வர்களில் 231 நபர்க ளும், அண்ணா மலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனும திக்கப்பட்ட 380 தேர்வ ர்களில் 324 நபர்களும், பேகம்பூர் அவர்லேடி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 380 தேர்வர்களில் 319 நபர்களும் என 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 66 கண்காணிப்பாளர்கள், 8 தலைமை அலுவலர்கள், ஒவ்வொரு மையத்திற்கும் தலா 2 வீடியோ ஒளிப்பதிவாளர்கள், என மொத்தம் 82 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக காற்றோட்டமான தேர்வு அறைகள், இருக்கை வசதிகள், தடையின்றி மின் வினியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மே ற்கொள்ளப்பட்டு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்வுக்கான அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கல்வித்துறை இணை இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் உள்பட அலு வலர்கள் உடனிருந்தனர்.
- 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
- தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அரியலூர்:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கக்கல்வி, பள்ளி கல்வியில் தலா 3 ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியை, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
தொடக்க கல்வியில் முல்லையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கையன், பெரிய திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பள்ளி கல்வியில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமலோற்பவம், சோழன் குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகுணா, மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜேந்திரன் ஆகிய 8 பேருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.
நெல்லை:
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் ஆண்கள் 4,312 பேரும், பெண்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வுக்கு விண்ணப் பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று காவல்துறையில் முதல் நிலை மற்றும் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.
எஸ்.பி. ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 725 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு 170 பேர் வரவில்லை. தேர்வு பாளையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மையத்தில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.
- திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வு ஏழு மையகளில் நடைபெற்றது
- மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர்
திருச்சி,
சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கான எழுத்துத்ேதர்வு திருச்சி மாவட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 7,402 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்த முதல் கட்ட தேர்வில் திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 7 ஆயிரத்து 402 பேரில் ஆண்கள் 4,555 பேரும், பெண்கள் 1,540 பேர் என மொத்தம் 6,095 பேர் தேர்வு எழுதினர். இதில் 961 ஆண்கள், 346 பெண்கள் என மொத்தம் 1,307 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தேர்வு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது
- 2584 பேர் தேர்வெழுதிய நிலையில், 571 பேர் தேர்வெழுத வரவில்லை
பெரம்பலூரில்
தமிழக காவல்துறையில் 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது. அதன்படி இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் 6 தேர்வு மையங்களில் 158 அறைகளில் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,311 ஆண் தேர்வர்களும், 844 பெண் தேர்வர்களும் என மொத்தம் 3,155 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
காலை, மாலை நடந்த தேர்வினை 1,920 ஆண்களும், 664 பெண்களும் என மொத்தம் 2,584 பேர் எழுதினர். 391 ஆண்களும், 180 பெண்களும் என மொத்தம் 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை சென்னை தலைமையிட போலீஸ் ஐ.ஜி. (நலன்) நஜ்மல் ஹோடா, மதுரை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் மொத்தம் 375 போலீசார் ஈடுபட்டனர்.
- பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
- நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி வருவாய் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாநிதி தேர்தல் ஆணையாளர் அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் கருணாநிதி தேர்தல் ஆணையாளராகவும், தேர்தல் இணை ஆணையராக செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் பணியாற்றினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை, மாநில தலைவர் நம்பிராஜ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளராக துரைராஜ் , மாவட்ட பொருளாளராக செல்வதுரை, மாவட்ட மகளிரணி செயலாளராக அமிர்தம், தலைமை நிலைய செயலாளராக துரைராஜ், மாவட்ட துணை தலைவர்களாக சீனிவாசன், மாலாரோஸ்லின், மாவட்ட துணை செயலாளர்களாக சந்திரகுமார், அகிலா, தணிக்கைகுழு உறுப்பினராக முருகேசன், தங்கதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஐபெட்டோ பொதுசெயலாளர் அண்ணாமலை சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் இன்று காலை தொடங்கியது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வு நடக்கிறது.
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,967 ஆண்களும், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 512 பெண்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையத்தில் நேற்று முதலே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து தேர்வாளர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்து நின்றனர். காலை 9 மணி அளவில் 3 கட்ட சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இதேப்போல் ஆண்களுக்கான தேர்வு நடைபெறும் மையத்திலும் நீண்ட வரிசையில் காத்து நின்று இளைஞர்கள் தேர்வு எழுதினர்.திருப்பூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் மொத்தம் 2 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுதினர்.
- தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
- எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
கோவை,
தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது .
கோவையில் பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி, காளப்பட்டி ரோட்டில் உள்ள என் ஜி பி கல்லூரி ஆகிய 4 மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 7,805 பேர் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
தேர்வையொட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்தவர்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளித்தனர்.
இந்த தேர்வு காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடந்தது. 7,805 பேரில் 6,168 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,637 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த எழுத்து தேர்வில் தேர்வானவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.