என் மலர்
நீங்கள் தேடியது "Education"
- கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
- தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,
கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
- 2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான கல்வியாளர் வசந்தி தேவி (87) சென்னையில் காலமானார்.
சென்னை பல்கலையில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் வசந்தி தேவி.
1973ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றவர் வசந்தி தேவி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தராக 1992- 1998 வரை வசந்திதேவி இருந்துள்ளார்.
2002- 2005ஆம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக வசந்தி தேவி இருந்துள்ளார்.
2017இல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வென்றவர் வசந்தி தேவி.
2016ஆம் ஆண்டில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டியிட்டார்.
- பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
- சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது தாரா வாலி என்ற கிராமம் அருகே சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி போறவற்றை கொடுத்து சவான் சிங் (10) என்ற சிறுவன் உதவியுள்ளார்.
இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்நிலையில், இந்த சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது.
- பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?
- அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!
நல்லவேளை, "பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?" என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!" என்று தெரிவித்துள்ளார்.
- 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது.
- அப்போது மிசோரம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது.
இந்தியாவில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற சாதனையை மிசோரம் படைத்துள்ளது. இதனை மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அறிவித்துள்ளார்
மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில், அம்மாநில முதல்வர் இதனை தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மிசோரம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் 91.33 சதவீதமாக இருந்தது. அப்போது மிசோரம் மாநிலம் நாட்டிலேயே அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மூன்றாவது மாநிலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா கையெழுத்திடவில்லை.
- கேரளாவுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும்
கேரளாவின் பொதுக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.1186.84 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று கேரளா கல்வி அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவன்குட்டி, "2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான மத்திய பங்கின் நிலுவைத் தொகை முறையே ரூ.280.58 கோடி மற்றும் ரூ.513.54 கோடி என்றும், 2025-26 ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட தொகை ரூ.654.54 கோடி என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், கேரளாவின் கல்வி நிதிக்கான பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்கும் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் கேரளாவைப் பாராட்டும் மத்திய அரசு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
- பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம்.
- ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.
ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
3-வது தவணையாக...
விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
- கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.
மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.
ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.
- கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
- மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.
மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.
* தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.
* இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.
* எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.
* பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.
* காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.
* இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
- மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது.
- நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு தற்கொலைகள் அவ்வப்போது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்னும் 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு தோல்விகளை கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் மாணவ- மாணவிகள் இருப்பது கவலை அளிக்கிறது. அதற்கு வீடு மற்றும் சமூகத்தின் பார்வையால் எழும் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் 1834 மாணவர்கள், மத்திய பிரதேசத்தில் 1308 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். தமிழகத்தில் 1246 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர்.இந்தியாவில் மொத்தம் 13,089 மாணவர்கள் தற்கொைல செய்து உள்ளனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 10,732 பேர். தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலை செய்தவர்கள் மட்டும் 864 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு 12,526 பேர் தற்கொலை செய்து உள்ள னர். இதில் ஆண்கள்- 55.62 சதவீதம். பெண்கள்- 44.38 சதவீதம். 2021-ம் ஆண்டு 13,089 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில் ஆண்கள்- 56.51 சதவீதம். பெண்கள்- 43.49 சதவீதம் என்று குறிப் பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவிகளை விட மாணவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவை மதிப்பிட முடியாது. ஆனால் மதிப்பெண்கள் தான் உயர் கல்விக்கும், நல்ல வேலை பெறவும் ஆதாரமாக இருக்கிறது. எனவே நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வில் மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும் போது குற்ற உணர்ச்சி கொள்ள எந்த அவசியமும் இல்லை. மீண்டும் படித்து தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு மாணவர்- ஆசிரியர் இடையே உறவு மேம்பட வேண் டும். பாடம், படிப்பு, தேர்வு என்பதை தாண்டி உலகம் எவ்வளவு அதிசயங்களை உள்ளிடக்கியது என்பதை ஆசிரியர்கள் மாணவர் களுக்கு புரிய வைக்க வேண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை சமூகத்தில் தைரியமாக வாழத் தகுதி உடையவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தோல்வி அடைவது என்பது கவனக்குறைவால் ஏற்படும் சிறு சறுக்கல், தடுமாற்றம் தான் என்பதை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறுகள், தோல்விகள், இழப்புகள், பலவீனங்களில் இருந்து மீண்டும் வர முடியும். படிப்பு, தேர்வு உள்பட எந்த தோல்வியும் வாழ்க்கையை விட மேலானது, உயர்ந்தது அல்ல. எத்தனை தோல்வி அடைந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் ஒரு பிறப்பின் அர்த்தத்தை சமூகத்துக்கு விளக்கும் சான்றாக இருக்க முடியும்.
- தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
- நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வட மழை மணக்காட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு நாகை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தாமோதரன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாக்குடி வடக்கு வடமழை மணக்காடு நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உபகரணங்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் வழங்கினார்.
விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோபா மலர்வண்ணன். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், துணை அமைப்பாளர் ஜோதி செல்லபாண்டியன், ரெத்தினசாமி, கவியரசன் சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி மாவட்ட கவுன்சிலர் சோழன், ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், ஒன்றிய துணைச் செயலாளர் சேது ராஜன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தாமரைசெல்வன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மோகனாதச மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காந்திமதி லோகநாதன், மாவட்ட பிரதிநிதி செல்வம் செந்தில், சார்பு அணி அமைப்பாளர் கலைக்கோவன், கவி இளவரசன் ஒன்றிய கிளைக் செயலாளர்கள் தசமணி, சாம்பசிவம், ஒன்றிய பிரதிநிதி காமராஜ், வேதரத்னம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மற்றும் அட்மா தலைவர் தனராசு தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மணி , துணைத் தலைவரும், பேரூர் கழக செயலாளருமான ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு. நோட்டு,பேனா,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ,ஒன்றிய, பேரூர்கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






