என் மலர்
நீங்கள் தேடியது "Army"
- கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
- இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது
அசாமில் இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது வன்முறைகள் வெடிப்பதுண்டு. அந்த வகையில் தற்போது வெடித்த வன்முறை ஒன்றில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு அன்று கோக்ரஜார் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கரிகான் என்னுமிடத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த இரு இளைஞர்கள்மீது வாகனம் மோதியுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படுள்ளது.
இதனைத்தொடர்ந்து வாகனம் மோதிய இளைஞர்களின் சமூகமாக ஆதிவாசியினர் ஒன்றுதிரண்டு அந்த மூன்று இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தொடர்ந்து வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட மற்ற நான்கு இளைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சையில் அனுமதிப்பட்டுள்ளனர். இதில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இரு உயிரிழப்புகளை தொடர்ந்து இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டக்காரர்கள் சிலர் வீடுகளுக்கும், ஒரு அலுவலகக் கட்டிடத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்த ஆதிவாசி கிளர்ச்சிக் குழுவின் ஒரு முகாமிற்கும் தீ வைத்தனர். மேலும் கரிகான் காவல் புறக்காவல் நிலையத்தையும் தாக்கினர்.
வன்முறை வெடிக்க போலீஸ், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இராணுவத்தின் நான்கு குழுக்களுடன் , விரைவு அதிரடிப்படை, மத்திய அரசுக் காவல் படை மற்றும் அசாம் மாநில காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் இன்று இரண்டாவது நாளாக அங்கு கொடி அணிவகுப்பை நடத்தியது.
இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்ச உணர்வு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பி அகிலேஷ் குமார் சிங், நிவாரண முகாம்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் சில நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இன்று அனைவருடனும் ஒரு கூட்டத்தை நடத்துவோம்," என்று அவர் கூறினார். நிலைமை ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். வதந்திகளை பரப்புவோர் இத்தகைய செயல்களை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
நிலைமை சீராக கட்டுக்குள் வந்தாலும் நேற்றுமுதல் கோக்ரஜார் மாவட்டத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. அதே சமயம், கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
- அந்த மோதிரங்களில் ரஹ்மத் சர்க்கார் மற்றும் ரிஸ்வான் 2025 என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
- புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.
ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கரா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று, ஆரியன் என்ற 13 வயது சிறுவன், கால்களில் மோதிரங்கள் அணிந்த புறா ஒன்றை பார்த்துள்ளான்.
அதை பிடித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.
சாம்பல் நிறத்திலான அந்தப் புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருந்தன. அதன் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மோதிரங்கள் கட்டப்பட்டிருந்தன.
அந்த மோதிரங்களில் 'ரஹ்மத் சர்க்கார்' மற்றும் 'ரிஸ்வான் 2025' என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இந்தப் புறா பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் ரகசியச் செய்திகளைத் தாங்கி வந்ததா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
அண்மையில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
- கினியா-பிசாவ் நாட்டில் இன்று ராணுவ புரட்சி ஏற்பட்டது.
- அதிபர் மாளிகைக்குள் புகுந்த ராணுவத்தினர் அதிபரை கைதுசெய்தனர்.
பிசாவு:
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா-பிசாவ் குடியரசு. இந்த நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ பதவி வகித்து வருகிறார்.
கினியா-பிசாவ் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளராக பெர்னாண்டோ டியாஸ் போட்டியிட்டார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளை, தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் டியாஸ் தகுதிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், கினியா-பிசாவில் இன்று ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதிபர் மாளிகைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர் அதிபர் உமரோ சிசோகோவை கைது செய்தனர்.
தலைமை தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதேவேளை, நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள்.
- அதில் நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள்தான் இருப்பார்கள் என்றார்.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர்ஜாதியினர்) ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இது தெரியும்.
நம் நாட்டில் தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்துப் பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள்தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.
காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ராகுல் காந்தி உயர்ஜாதியினரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
- நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
- பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் தணிந்தது.
நாடு முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
- அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரி காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் திங்கள்கிழமை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குல்காமின் குட்டர் காட்டில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்த ரகசியத் தகவலைப் பெற்றதை அடுத்து, சிஆர்பிஎஃப் போலீஸ் உடன் இணைந்து ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 வீரர்கள் வீரமரணமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும் மேலும் பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
- ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
- இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே 6 பாகிஸ்தானிய டிரோன்கள் நடமாட்டத்தை அடுத்து ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரஜோரி மாவட்டத்தின் சுந்தர்பானி, கனுயன் மற்றும் பால்ஜரோய் பகுதிகளில் இந்த டிரோன்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்கள், கட்டுப்பாட்டுக் கோடு அருகே சிறிது நேரம் காற்றில் வட்டமிட்டு பின்னர் பாகிஸ்தானுக்குத் திரும்பியதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் எச்சரிக்கப்பட்ட இந்திய ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) எல்லையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து இதேபோன்ற டிரோன் ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன.
எல்லையில் இந்திய ராணுவ தளங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைப் பெற பாகிஸ்தான் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளில் மீண்டும் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
- லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோடியா மற்றும் லான்ஸ் கார்போரல் தல்ஜித் சிங் ஆவர்.
கிழக்கு லடாக்கில் சாலையில் ஒரு பெரிய பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு லெப்டினன்ட் கர்னல் உட்பட இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
கல்வானில் உள்ள துர்பக் அருகே உள்ள சர்பாக்கில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இராணுவ வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாக அவர்கள் ஜீப்பில் பயணித்தபோது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டது.
இறந்தவர்கள் லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோடியா மற்றும் லான்ஸ் கார்போரல் தல்ஜித் சிங் ஆவர். காயமடைந்த மேஜர் மயங்க் சுபம், மேஜர் அமித் தீட்சித் மற்றும் கேப்டன் கௌரவ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
- சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது தாரா வாலி என்ற கிராமம் அருகே சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி போறவற்றை கொடுத்து சவான் சிங் (10) என்ற சிறுவன் உதவியுள்ளார்.
இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்நிலையில், இந்த சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது.
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உயிரிழந்தார்.
- கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றவர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 6 பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி ராணுவ சீருடையில் கண்ணீர் மல்க இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் ராஜ்வீர் சிங்கின் புகைப்படத்தை அவரது கையில் பிடித்தபடியே நடந்து வந்தார்.
ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
கர்னல் ராஜ்வீர் சவுகான் 14 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்த பிறகு ஓய்வு பெற்றார். கடைசியாக அவர் பதான்கோட்டில் உள்ள ராணுவ விமானப் படையில் லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்ற பிறகு, லெப்டினன்ட் கர்னல் ஆர்யன் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிவில் ஹெலிகாப்டர் விமானியாக சேர்ந்தார்.
ராஜ்வீர் சவுகான் 2011 இல் தீபிகாவை திருமணம் செய்தார். தீபிகா சவுகான் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். 14 வருட திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
- லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர்.
காங்டோக்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவு காரணமாக பல சாலைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் 30க்கும் மேற்பட்டோரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.






