என் மலர்
இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் டிரோன்.. வெடிபொருட்கள் அடங்கிய பையை வீசிச் சென்றதால் பரபரப்பு
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
Next Story






