என் மலர்
நீங்கள் தேடியது "Soldiers"
- ஷர்வன் சிங் என்ற சிறுவன் ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளான்.
- சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களின் தாகம் தீர்த்த 10 வயது சிறுவனுக்கு பரிசளித்த ராணுவம்
ஆபரேஷன் சிந்தூரின்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ஷர்வன் சிங், ராணுவ வீரர்களுக்கு தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகம் தீர்த்துள்ளான்.
இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இதன் பிறகு பேசிய சிறுவன், "வளர்ந்த பிறகு நானும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்" என்று நெகிழ்ச்சிப் பொங்க கூறுகிறார்
- ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? என செல்லூர் ராஜு சர்ச்சை பேச்சு
- போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் தொடர்பாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு ,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார் , எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுது மதிக்கிரேன் !!!" என்று பதிவிட்டுள்ளார்.
- ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
- திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்குதான் திமுகவினர் நன்றி கூற வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "2 நாட்கள் தூங்காமல் கண்விழித்து ராணுவ நடவடிக்கைகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இப்படி ஒரு பிரதமரை பெற்றதற்கு இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும். அதற்கு பதிலாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக கூறுகிறது. .
ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.
ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டது.
- அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர்.
இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.
- இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
- அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர்.
அதிரடியாக ராணுவத்தைவிட்டு 1200 பாகிஸ்தான் வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் அச்சத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ராணுவத்தைவிட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக ராஜினாமா எனவும் கூறப்படுகிறது.
- புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
- இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 70 ராணுவ வீரர்களை கொன்றதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
மாலியை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, சமீபத்தில் தனது செயல்பாடுகளை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.
வடக்கு பெனினில் கிளர்ச்சியாளர்கள் செயல்படத் தொடங்கியதிலிருந்து இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
- ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
- மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.
எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.

எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.
இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
- கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;
நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
- நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்க கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
விளையாட்டுத்துறையில் சர்வதேச/தேசிய அளவி லான போட்டிகளில் வெற்றி களை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ கத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றி ருக்க வேண்டும். மேலும் அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு, பல்கலைக்கழகங்கள் நடத்திய போட்டிகள், ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் விளையா டியிருக்க வேண்டும். விண்ணப்ப தாரர்கள் ஜனவரி மாதம் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவ ராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்ற வராகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய-மாநில அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் விண்ணப் பிக்க முடியாது.
மேற்கண்ட தகுதியுடை யவர்கள் www.sdat.tn.gbv.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ராணுவ வீரர்களின் நலனுக்கு உண்டியலில் சேமித்த பணத்தை சிறுமி வழங்கினார்.
- ரூ.7,999-ஐ கலெக்டரை சந்தித்து வழங்கி உள்ளார்.
மதுரை
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் 2-வது மகளான தனுஷ்கா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சுரேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தார். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்தனர்.
அப்போது சிறுமி தனுஷ்கா தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.7 ஆயிரத்து 999-ஐ இந்திய ராணுவ வீரர்க ளின் நலனுக்காக வழங்கு வதாக கூறி கலெக்டரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சங்கீதா, மாணவி தனுஷ்காவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், எஙகளது மகள் தனுஷ்கா சிறுவயதில் மாறுவேட போட்டியின்போது ராணுவ உடை அணிந்து கலந்து கொண்டார்.அப்போது ராணுவம் குறித்து ஆர்வம் அதிகரித்தது. நாட்டிற்காக தன்னுயிரை பற்றி கருதாமல் பாடுபடும் ராணுவ வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்து கூறினோம். நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என எண்ணிய தனுஷ்கா, எல்.கே.ஜி. முதல் உண்டியலில் சிறுகசிறுக பணத்தை சேமிக்க தொடங்கினார். தற்போது அந்த பணம் ரூ.7,999-ஐ கலெக்டரை சந்தித்து வழங்கி உள்ளார் என்றனர்.
- எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
- 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.
இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.
இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
- ராணுவ வாகனம் லடாக் அருகே சென்ற போது ஆற்றில் கவிழந்துள்ளது.
- விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் இருந்துள்ளனர்.
ராணுவ வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியதால், நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் (எட்டு ஜவான்கள், ஒரு ஆணையர்) பயணம் செய்ததாகவும், இவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.