என் மலர்
நீங்கள் தேடியது "disaster"
- பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர்.
- மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பா் வரை தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபா் முதல் நவம்பா் வரை வடகிழக்குப் பருவ மழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.
இது மலைப் பிரதேசம் என்பதால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுவதால் பெரும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதுதவிர நீலகிரியின் குறுகிய மலைச்சாலை வழியாக தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட காலதாமதம் ஆகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து 200 பேருக்கு பேரிடர்மீட்பு பயிற்சி தருவது என்று முடிவு செய்தனர். இதற்காக பெண்கள் உள்பட 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பேரிடர்மீட்பு தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவா்.
இதற்காக அவா்களுக்கு தனி அடையாள அட்டை, பயிற்சி சான்றிதழ், பேரிடா் கால மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் மழையில் நனையாமல் இருக்க உடைகள், தலைக்கவசம், கையுறை போன்றவையும் வழங்கப்பட்டன.
- உயிருக்கு போராடுபவர்களை மீட்பது குறித்து மாணவ- மாணவிகளுக்கு ஒத்திகை நிகழ்த்தி காட்டப்பட்டது.
- தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
கடையநல்லூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூர் அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கு மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்க ளையும், கட்டிட இடிபாடு களில் சிக்கியவர்க ளையும் மீட்பது எப்படி திடீரென ஏற்பட்ட தீயை அணைப்பது எப்படி, அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி கடைய நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரிகளின் முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா மாணவ- மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், கல்லூரியின் பேராசிரி யர்கள் குருசித்திர சண்முக பாரதி, சண்முகப்பிரியா, சாம்சன் லாரன்ஸ், சண்முக வடிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா கேட்டறிந்தனர்.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலைமேடுதிட்டு ஆகிய கிராமங்களில் ரூ16 கோடி மதிப்பீட்டில் 2 பேரிடர் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தினை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஊரக உள்ளாட்சி துறை சார்பாக கொள்ளிடம் மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றிய குழு தலைவர்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்கள் வழங்குவதற்கான சாவிகளை வழங்கி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனர்.
கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடைக்கு சென்ற பொது மக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, எடை சரியான முறையில் வைத்து வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம், நிவேதா.முருகன்,சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா,வட்டாட்சியர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மஞ்சுளா,ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
- வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட குன்னலூர் ஊராட்சியில், குடிசை தீவில் இருந்து எக்கல், கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இந்த சாலையானது மேலமருதூர் மெயின் சாலையை இணைக்கும் வழித்தடமாக இருப்பதால், விவசாயிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த வழியாக தான் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பூமிநாதன் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
- தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்
நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகர பகுதி களில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள், ஓடை தூர்வாருதல், சாக்கடை கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை விரைவுப்படுத்த அதிகாரி களுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தர விட்டார். மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நெல்லை மாநகர பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான எஸ்.என்.ஹைரோடு, பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை, சமாதானபுரம் சாலை, திருமால் நகர் சாலை உள்ளிட்டவை உள்ளது. இதில் பாளை மார்க்கெட் சீவலப்பேரி சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அதேபோல் திருமால் நகர் சாலையும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் மாநகரப் பகுதிகளுக்குள் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைக ளையும் மாநகராட்சிக்கு மாற்றிக் கொடுத்தால் உடனடியாக சீரமைத்து மாநகராட்சி முழுவதும் தரமான சாலைகள் பொது மக்கள் பயன்படுத்தலாம் என கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி கூறினார்.
தொடர்ந்து அமைச்சரின் உத்தரவுக்கு இணங்க நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஓடைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகளை கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
மாநகராட்சி கமிஷனரின் இந்த நடவ டிக்கைகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
- பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
- கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;
நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
- நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
- முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18--ந்தேதி நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-
எம்.எல்.ஏ கேள்வி:
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகளில் 2வது கோரிக்கையாக இதை கொடுத்துள்ளோம்.விவசாயிகள் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருமருகல்.
நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
எனவே அங்கு அரசு நிர்வாக அமைப்புகள் எளிதில் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
எனவே திருமருகலை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திருமருகல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
மாவட்ட கலெக்டர் வாயிலாக இதற்கான முன்மொழிவை அனுப்பி உள்ளீர்கள்.
முதலமைச்சாடம் கலந்து பேசி நிச்சயமாக உங்கள் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை.
- பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.
வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், வாய்மேடு காவல் நிலைய உதவியாளர் மற்றும் வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
- பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்படி கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டுச்சேரியிலும் மற்றும் கபிஸ்தலம் பாலக்கரையிலும் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின சிறப்பு பேரணி நடைபெற்றது.
கபிஸ்தலம் பாலக்கரையில் நடைபெற்ற பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.
பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகநாதன், ஜெய்சங்கர், காமராஜ், யசோதா சரவணன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பேரணியில் தன்னார்வ தொண்டு நிறுவன முதல்நிலை பொறுப்பாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி என்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், டி.என்.டி.ஜே .சேவை அமைப்பு ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ,ரெட் கிராஸ் குழுவினர், லயன்ஸ் மகாத்மா காந்தி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக்கல்லூரி, வீராசாமி செட்டியார் என். எஸ். எஸ் . மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் அரவிந்த், மோட்டார் வாகன ஆய்வாளர், கனகவல்லி, வட்டாரப் போக்குவரத்து சூப்பிரண்டு ஜீவானந்தம் ,பொதுப்பணித்துறை அலுவலர் சரவணகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் , கடையநல்லூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் நஸ்ரின், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ரெட் கிராஸ் மனோகரன், தவ்ஹீத் ஜமாத் நல்லூர் சுலைமான், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், நாராயணன், சங்கரநாராயணன், மாடசாமி, சாந்தி , கிராம நிர்வாக உதவியாளர்கள் பாலின்ரமேஷ், ஆரோக்கி யராஜ், மாரியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.