search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Management Committee"

    • மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது.
    • யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    1991, 2011-ம் ஆண்டுகளில் கடலோர ஒழுங்குமுறை மண்ட லங்களை உருவாக்க மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பி ன்படி, புதுவை அரசு 2011-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது.

    மற்றொரு விதியானது, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஒழுங்குமுறை மண்டலக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. புவியியல் ரீதியாக 4 பகுதிகளாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் 4 பிராந்திய குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்தது. மீனவர்சமூகத்தின் 3 உறுப்பினர்கள் உட்பட 4 பிராந்தியங்களில் குழுக்க ளின் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அரசாணை 8-12-2014-ல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆணையை செயல்படுத்த வில்லை.

    இதன் மூலம் மத்திய சட்டத்தின் நோக்கத்தையே புதுவை அரசு தோற்கடித்துவிட்டது. கடற்கரை மேலாண்மை பாதுகாக்கப்பட வில்லை. உடனடியாக 4 பிராந்தியத்திலும் கடலோர மண்டல மேலாண்மை குழுக்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை மாதந்தே ாறும் இறுதி வெள்ளிக்கிழ மைகளில் கட்டாயம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    • பள்ளி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    பள்ளிகள் தோறும் மறு கட்டமைப்பு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை மாதந்தே ாறும் இறுதி வெள்ளிக்கிழ மைகளில் கட்டாயம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

    வளாகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேலாண்மைக்குழு தலைவர் கனிமொழி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் ஆட்டோசுரேஷ், கல்வியாளர் பெரியார்மன்னன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மாதந்தோறும் மேலாண்மைக்குழு கூட்டத்தை நடத்துவது, அனைத்து உறுப்பினர்க ளுக்கும் அடையாள அட்டை வழங்குவது, பள்ளி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை லதா நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.
    • திருப்பூர் மாவட்டத்தில் 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

    திருப்பூர் :

    கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி அனைத்து குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் செயல்பாடின்றி உள்ளது.உள்கட்டமைப்பு வசதி உட்பட எல்லா வகையிலும் அரசு பள்ளிகளை தன்னிறைவு பெறச்செய்ய தமிழகம் முழுவதும்அரசு பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 பேரை உள்ளடக்கிய மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 908 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,260 நடுநிலைப்பள்ளிகளில் கடந்த வாரம் மறு சீரமைப்பு செய்யப்பட்டமேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்கியுள்ளன. மாவட்டம் முழுவதும் 89 அரசு, நகராட்சி உயர் நிலைப்பள்ளிகள், 76 உயர் நிலைப்பள்ளிகள் எனமொத்தம் 165 பள்ளிகளில் மேலாண்மை குழு பிரதிநிதிகள் பதவியேற்றனர்.இதனால் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,333 அரசு, நகராட்சி பள்ளிகளில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழுக்கள் செயல்பாட்டை துவக்கியுள்ளன.

    அவ்வகையில் திருப்பூர் பழனியம்மாள் பள்ளியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட மேலாண்மை குழு கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தலைமைவகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக ராஜேஸ்வரி, துணை தலைவராக விமலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி பிரதிநிதி, பெற்றோர் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஞ்சப்பா, கே.எஸ்.சி., ஜெய்வாபாய் பள்ளிகளிலும், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாரம் ஒருமுறையாவது பள்ளியை பார்வையிட வேண்டும். மாதம் ஒருமுறை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கவேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு, தன்னார்வலர்கள், தங்களது சுய பங்களிப்பு மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்றனர்.

    • ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும்.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் புதிய எஸ்.எம்.சி., குழுக்கள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஏற்படுத்தப்பட்டன.அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஜூலை 9-ந்தேதி மறுகட்டமைப்புக்கான கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஒரு வாரம் முன்பே தகவல் தெரிவிக்கப்படும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஏற்கனவே நடத்தப்பட்டன.

    இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 86 உயர்நிலை மற்றும் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், 12 பெற்றோர் பிரதிநிதிகள், ஒரு ஆசிரியர், தலைமையாசிரியர், கல்வியாளர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் என 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்படுகிறது.

    பராமரிப்பு நிதியை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை இக்குழு தீர்மானிக்கும். பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதி, வகுப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை, சுற்றுச்சுவர் இல்லை, இரவு பாதுகாவலர் இல்லை, பெண் குழந்தைகளுக்கு இன்சினரேட்டர், சானிட்டரி நாப்கின் வசதியின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ×