என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "School"
- பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
- தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.
இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.
மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
- ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
காசா:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.
காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.
இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஆஸ்பத்திரியில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆஸ்பத்திரியின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.
அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
- வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
- இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.
அர்ப்பணிப்பு
இந்நிலையில் இப்பள்ளிக்கு நியமிக் கப்பட்ட தலைமை யாசிரியர் ஸ்ரீதர், இடைநிலை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சி, அர்ப்பணிப்பு கல்விப் பணியால், மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குனர் கோபால்சாமி இப்பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க உதவினார். கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், தன்னார்வ லர்கள் ஒத்துழைப்பால் பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றது.
சிறந்த தொடக்கப் பள்ளி விருது
இப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து 2022- 2023- ம் ஆண்டிற்கான தமிழக பள்ளி கல்வித்துறை வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி விருதுக்கு காளியம்மன் புதூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 14-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்க உள்ளார். இவ்விருதை பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
அரசு வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெறும் காளியம்மன் புதூர் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ், துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா மற்றும் கிராம மக்கள், பெற்றோர்கள், தன்னார்வ லர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறம் மற்றும் பின்புறம் பல்வேறு வகையான மரங்கள் உள்ளது . அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அந்த பகுதிக்கு செல்லும் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி வந்தது . இது குறித்து தலைமை ஆசிரியை வளர்மதி புகளூர் தீயணைப்பு துறை நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக் கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினார்.இதனால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
- பேச்சுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
- முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கம் நன்றி கூறினார்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுக்கூர் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம் தலைமை தாங்கி கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
வட்டார கல்வி அலுவலர் மனோகரன் வரவேற்றார்.
இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், அரசு பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் மதுக்கூர் வட்டார அளவிலான மாணவிகளின் கலைநிகழ்ச்சிி நடைபெற்றது.
இதில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி இசைக்கருவி வாசித்தல் என பல்வேறு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்,கல்வியில் கலை நிகழ்ச்சிகள் என்பது மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வருவது எனவும் உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக விளங்குகிறது என்றும் பள்ளியின் பற்றி எடுத்து கூறினார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட திட்ட கூறு ஒருங்கிணைப்பாளர் ஷீலா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் புனிதா, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தங்கம் நன்றி கூறினார்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளை வால்பாறை நகர தி.மு.க. செயலாளர் குட்டி என்ற சுதாகர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
வால்பாறை வட்டாட்சியர் அருள் முருகன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர், பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் அலுவல பணியாளர் பன்னீர், பிரதிநிதி டென்சிங் மற்றும் பலர் உடனிருந்தனர்
- மனநலம் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
- தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மன்னார்குடி:
உலக மனநல தினத்தை யொட்டி மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு, நேசக்கரம், திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மன்னார்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வெளியிட அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பு லட்சுமி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நம்பிக்கை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
திட்ட இயக்குனர் விஜயா, மன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், துணை தலைவர் ஆசிரியர் ராஜப்பா, நேசக்கரம் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேசக்கரம் ஒருங்கிணை ப்பாளர்கள் கார்த்திகேயன், தீனதயாளன், நேசக்கரம் தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெலிக்ஸ், எழிலரசன் மற்றும் கலை குழுவினர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தத்ரூபமாக நடித்து, அவரை எவ்வாறு வழிநட த்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.
சுவாமிமலை:
சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி யின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா சுவாமிநாதசாமி கோவிலில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லயன் மாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷபானா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குணாளன், பாலலெட்சுமி தொடக்கப்ப ள்ளி தாளாளர் பாலசுப்ர மணியன், சுவாமிமலை கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்த தேவ ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.
- புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .
- மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ஒன்றியம் மொன்னையம்பட்டி பஞ்சாயத்து புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .
இதனை முன்னிட்டு புனித அந்தோணியார் மேல்நிலைப் தஞ்சாவூர் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் ஆதவன் சங்கம் மற்றும் ஏகம் பவுண்டேஷன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் முன்னிலையில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன .
மேலும் இயற்கை காய்கறிகள், வீட்டு தோட்டம் அமைத்தல் மற்றும் பள்ளிக்கு தேவையான மூன்று மருத்துவ முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவைகள் அனைத்தையும் பாரத சிற்பி டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது.
- டாஸ்மாக் கடை பக்கத்திலேயே ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நெல்லை உடையார் தலைமையில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது. இதன் முன்பு மீனாட்சிபுரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் இந்த கடையை உடனடியாக அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக அந்த கடையை அப்புறப்பத்த வேண்டும்.
இதன் பக்கத்திலேயே பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் அருகிலேயே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. மேலும் பெருமாள் கோவிலும் இதன் அருகே இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது குடிமகன்கள் சாலைகளில் வீசி செல்லும் மது பாட்டில்கள் காலில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இது தொடர்பாக பல முறை மனு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை விசாரித்து உடனடியாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
அப்போது தொழிற்சங்க தலைவர் மாயாண்டி, தொழிற்சங்க செயலாளர் நாகராஜன், கார்த்தீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.