என் மலர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்- கலெக்டர் வழங்கினார்
- மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடை ஆய்வு.
- பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பகுதியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து அங்கிருக்கும் வருகை பதிவேடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களிடம் சரியாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
அங்கு லேப்டாப், எக்ஸ்ரே கருவிகளை பார்வையிட்டார் மேலும் மருத்துவர் ராஜ்குமாரிடம் விபரங்களை கேட்டறிந்தார் பிறகு மதுக்கூர் - சிரமேல்குடி ரோடு புதுக்குளம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
அங்கு அரிசி எடை உள்ளிட்ட பொருட்களின் தரம் சரியாக இருக்கிறதா என்றும் அங்கு வாங்கும் நபர்களிடம் பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று கேட்டறிந்தார்.
இதனை அடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு, முட்டை தரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடம் உரையாடினார்.
பிறகு மதுக்கூர் வடக்கு பகுதியில் வயலில் நானோ யூரியா செயல் விளக்க ஆய்வு மேற்கொண்டார்.
50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கினார்.
இந்த ஆய்வு போது மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜி, பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் மதுக்கூர் உதவி வேளாண்மை இயக்குனர் திலகவதி மற்றும் அதிகாரிகள் பல கலந்து கொண்டனர்.