search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "campus"

    • 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் பூச்சந்தை தற்காலிக இடமாற்றம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

    மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் பூக்கார தெருவில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் பூக்கார தெருவில் 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பூக்கார தெருவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    இதனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் இன்று முதல் பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதனையொட்டி ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது கடைகளை மாற்றினர். இன்னும் சில கடைகள் மட்டும் பூச்சந்தையில் உள்ளது. அதுவும் வரக்கூடிய நாட்களில் இடமாற்றம் ஆகி விடும். 

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும்.
    • மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் , தஞ்சை தொகுதிக்குட்பட்ட இடங்களில் நிறைவேற்ற வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் போக்குவரத்திற்கு இடையூறாகவும் அதிக விபத்துகள் ஏற்படும் காரணத்தாலும்அ ப்பாலத்தை மேரீஸ் கார்னரிலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சை சட்டமன்ற தொகுதியில் ஆண்,பெண் இருபாலரும் பயிலும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். தஞ்சைகாட்டுத்தோட்டம் பகுதியில்ர அரசுவேளாண்கல்லூரி அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை செய்யும் வசதி அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நவீன அரிசி ஆலை அமைத்து தர வேண்டும்.

    மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சை பெரிய கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் சோழன் சிலை அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து பெரிய கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படி சாலை அமைத்து, தற்சமயம் சாலையாக உள்ள தடத்தை மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும், வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

    சி.இ.ஓ, டி.இ.ஓ, பி.ஓ.அலுவலக கட்டிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைத்து தர வேண்டும்.

    பூக்காரத் தெரு பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய (குளிரூட்டப்பட்ட) பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி

    மற்றும் முழுமையான தமிழ் வழி பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியங்களில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    • மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு உருளைகளை கொண்ட எண்ணெய் பிழியும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.94,683, தென்னை மட்டை உரிக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.61,600, வாழை மட்டை நார் உரிக்கும் எந்திரங்களுக்கு ரூ.52,000, சிறிய வகை நெல் அரைக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,000, நெல் உமி நீக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.44,000 பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ, சிட்டா அடங்கல், மும்முனை மின்சாதன வசதியுடன் கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம் உள்ளதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் எந்திரங்கள் தேவைப்படும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613004 என்ற முகவரியிலும்,

    கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தொழில்பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம்-612103 என்ற முகவரியிலும்,

    பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை-614601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ×