என் மலர்
நீங்கள் தேடியது "works"
- பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
- விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.
- 2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா?
- Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் லோகா' படத்தின் போது திரையரங்கிற்குள் அமர்ந்து மடிக்கணினியில்
வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா? Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
- 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
- முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.
கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீத வரிவசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டினார்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நெற்களம் அமைக்கும் பணிகள் ஆய்வு.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்து பார்வையிட்டு அதனை தொடர்ந்து பி.எல். எப், மற்றும் சுய உதவி குழுக்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியவுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.
அப்பொழுது சுயதொழில் செய்யும் நபர்களை அழைத்து அவர்கள் செய்த மண்பாண்டங்கள், அகல் விளக்குகள், ஆகியவற்றை பார்வையிட்டு சிறப்பாக செய்துள்ளதாக அவர்களை ஊக்குவித்து தொழில் முனைவோரில் தஞ்சை மாவட்டம் தலைசிறந்த மாவட்டமாக திகழ வேண்டும் என அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து கபிஸ்தலம் ஊராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டிருப்பதை பாராட்டி நல்ல முறையில் செயல்பட்டு கொண்டுள்ள இந்த ஊராட்சி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ஊராட்சியில் தனியார் வசமுள்ள குளங்களை ஊராட்சி நிர்வாகத்திற்கு கீழ் கொண்டு வந்தால் ஊராட்சிக்கு வருமானத்தை பெருக்க வழிவகை செய்ய முடியும் என ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குளங்களை பராமரித்து வரும் தனியாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சோமேஸ்வரபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணி, மற்றும் நெற்களம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆயுள் போது பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், வட்டார துணை வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், சுய உதவி குழுவினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வீரராகவ மேல்நிலை பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிர்வாக குழு செயலாளர் பூண்டி தனசேகரன் வாண்டையார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி ஆர் மற்றும் டி. தலைவர் டாக்டர் நடராஜன் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சியில் இப்பள்ளியில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்களை 21 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவக்குமார், பிரபாகரன், சூரியபிரகாஷ் வாண்டையார் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
- 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
- வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் பூச்சந்தை தற்காலிக இடமாற்றம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.
மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் பூக்கார தெருவில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் பூக்கார தெருவில் 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பூக்கார தெருவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.
இதனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் இன்று முதல் பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனையொட்டி ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது கடைகளை மாற்றினர். இன்னும் சில கடைகள் மட்டும் பூச்சந்தையில் உள்ளது. அதுவும் வரக்கூடிய நாட்களில் இடமாற்றம் ஆகி விடும்.
- வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
- விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் ஹேமலதா கூறியதாவது:-
வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ. 9 ஆயிரத்து 330 அரசு மானியமாக 30 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.
தற்போது 18 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ. 31 லட்சம் 28 ஆயிரம் செலவில் கட்டப்படும் பொது கழிவறையும் விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு விடப்படும் என்றார்.
ஆய்வின்போது வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஆத்மா குழு தலைவர் சதாசிவம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
- சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைக்க வேண்டும்.
- 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாபநாசம்:
கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த சாலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
தஞ்சாவூரிலிருந்து தொடங்கப்பட்டுள்ள அந்த பணியானது ஒரேயொரு கட்டுமான குழுவைக் கொண்டு கும்பகோணம் நோக்கி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றது.
கடந்த சில வாரங்களாக பெய்துள்ள தொடர்மழை காரணமாக இந்த சாலை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாலை சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தவும், தரமானதாகவும் அமைத்திட வேண்டும்.தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவிலிருந்து அய்யம்பேட்டை வரை ஒரு பகுதியாகவும். அய்யம்பேட்டை தொடங்கி பாபநாசம் உத்தாணி வரை ஒரு பகுதியாகவும், உத்தாணி முதல் தாராசுரம் புறவழிச்சாலை வரை ஒரு பகுதியாகவும் ஆக 3 பகுதியாக இந்த பணிகளை, 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேகமாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும்.
இந்த நெடுஞ்சாலையில் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்டுமானத்தின் போது, அய்யம்பேட்டை, பாபநாசம் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பொறியாளர்கள். பேரூராட்சி மன்றத் தலைவ ர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேரூராட்சி அல்லாத கிராமப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இளையான்குடி யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளரும் இளையான்குடி பேரூராட்சி தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைப்பது, தி.மு.க.வின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது, இளையான்குடி யூனியனில் பருவமழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாணவரணி சந்திரசேகர் தொண்டரணி புலிக்குட்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் சாரதி என்ற சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- ரூ 20 லட்சம் மதிப்பில் கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 26-வது வார்டு பாரதி மார்கெட் பகுதியில், ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் மற்றும் பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
அதே போல், ரூ 20 லட்சம் மதிப்பில், நாகை தம்பிதுரை பூங்கா மேம்படுத்துதல், கடைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, உறுப்பினர்கள் முகம்மது நத்தர், திலகர், பிரதீப், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பேராவூரணி:
மின் நிலையத்தில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்விநியோகம் பெறும் பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், துறவிக்கா டு, செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, படப்பனா ர்வயல், மணக்காடு, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நாட்டாணி க்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர், நாடியம், திருவத்தேவன், மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம், குப்பத்தேவன், கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
- மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.






