என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய நகரங்கள்"
- பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
- விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.
- 4 நகரங்களும் முந்தைய ஆண்டை விட பல இடங்கள் முன்னேறி உள்ளன.
- தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த லண்டன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
புதுடெல்லி:
லண்டனை சேர்ந்த சர்வதேச உயர் கல்வி ஆலோசனை நிறுவனமான 'கியூ.எஸ்.' மாணவர்களுக்கான உயர் கல்விக்கு சிறந்த நகரங்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், 2½ லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையுடனும், உலக தரவரிசை பட்டியலில் குறைந்தபட்சம் 2 பல்கலைக்கழகங்களுடனும் உள்ள 150 நகரங்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சுமார் 1 லட்சம்பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில், முதல் 130 இடங்களுக்குள் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 4 நகரங்களும் முந்தைய ஆண்டை விட பல இடங்கள் முன்னேறி உள்ளன.
மும்பை, 15 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி, 7 இடங்கள் முன்னேறி 104-வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு 22 இடங்கள் முன்னேறி 108-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-வது இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த லண்டன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென்கொரிய தலைநகர் சியோல், முதல் இடத்தை பிடித்துள்ளது.
- சிரியா தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.
லண்டன்:
லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 2 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
அகமதாபாத் 8-வது இடத்தையும், சென்னை 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஈரான் நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும், லிபியாவின் திரிபோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.






