என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power supply"

    • கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்துள்ள பாளை ரெட்டியார்பட்டி உப மின் நிலையத்தில் காலாவதியான 11 கிலோவோல்ட் தாமரைச்செல்வி மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம்‌ நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு அங்கு புதிய மின்தடை சாதனம் பொருத்தப்பட்டது.
    • ரெட்டியார்பட்டி மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட தாமரை செல்வி மின் பாதையில் வினியோகம் பெறும் சிவந்திபட்டி, இட்டேரி, ஆலங்குளம், கொங்கந்தான் பாறை, மல்லகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்துள்ள பாளை ரெட்டியார்பட்டி உப மின் நிலையத்தில் காலாவதியான 11 கிலோவோல்ட் தாமரைச்செல்வி மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம்‌ நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு அங்கு புதிய மின்தடை சாதனம் பொருத்தப்பட்டது.

    இதனை மின்னளவி சோதனை பிரிவு செயற்பொறி–யாளர் ஷாஜகான் தலைமையில் தாழையூத்து சிறப்பு பராமரிப்பு பிரிவு மற்றும் மின் அளவி சோதனை பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள் பரி சோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இந்த சாதனத்தால் ரெட்டியார்பட்டி மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட தாமரை செல்வி மின் பாதையில் வினியோகம் பெறும் சிவந்திபட்டி, இட்டேரி, ஆலங்குளம், கொங்கந்தான் பாறை, மல்லகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் கூறினர்.

    நிகழ்ச்சியில் செயற்பொறி யாளர் முத்துக்குட்டி

    (நகர்ப்புறம்) , நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்க முருகன், ரெட்டியார்பட்டி பிரிவு மற்றும் ரெட்டியார்பட்டி உப மின் நிலைய உதவி மின் பொறியாளர் ( பொறுப்பு ) அபிராமிநாதன், சிறப்பு பராமரிப்பு பிரிவு உதவி மின் பொறியாளர் கருங்காட்டான், மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • ஏ.பி.சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர், ராமநாதன் ஆஸ்பத்திரி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கீழ்கண்ட மின்வழித்தடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஸ்டேடியம் மின் வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ்ரோடு, ஆபிரகாம்ப ண்டிதர் நகர். திலகர்திடல் வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    வண்டிக்காரத்தெரு வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர் நகர், சோழன்நகர். சர்க்யூட்ஹவுஸ் வழித்தடத்தில் கல்லணைக் கல்வாய்ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரகுமான்நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. கீழவாசல் வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாளக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். வ.உ.சி. நகர் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், ஏ.பி.சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர், ராமநாதன் ஆஸ்பத்திரி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவி த்துள்ளார்.

    • ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் நாளை 17-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • தென்னம்புலம், கரியாப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம்,ஆயக்காரன்புலம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 17- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பக நாதர் குளம்,இடும்பவனம் தொண்டியக்காடு,

    தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்கா ரன்புலம், கருப்பம்புலம, கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடை யான், குரவ ப்புலம் ,தென்ன ம்புலம், கரியாப்ப ட்டினம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    மின் நிலையத்தில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியி ட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பேராவூரணி துணை மின் நிலையத்தில் நாளை 4-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்விநியோகம் பெறும் பேராவூரணி, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், துறவிக்கா டு, செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, படப்பனா ர்வயல், மணக்காடு, ரெட்டவயல், பெருமகளூர் மற்றும் சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நாட்டாணி க்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர், நாடியம், திருவத்தேவன், மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம், குப்பத்தேவன், கழனிவாசல், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும், மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தஞ்சாவூர் நகர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் நகர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம் தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ-ஆப்பரேட்டிவ் காலனி, நியூ ஹவுசிங் யூனிட், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிசப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவகல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்சார வாரிய திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக் கிழமை) நடைபெறுகிறது. இதனால் கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதேப்போல் திருவையாறு, மேலத்திருப் பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூர், கீழத் திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி.

    திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்திய நாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ் தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லிய நல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் சுற்று பகுதிகளில் நாளை வட்டார 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
    • நாளை காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நாளை (திங்கட்கிமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு கருதி தஞ்சை மேலராஜ வீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோவில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத்தெரு.

    நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை ரோடு, சிரேஸ்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 6 மணி முதல் தேர் நிலைக்கு வரும் வரை மின் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

    • அரை மணி நேரம் மின்சாரம் தடை
    • மின்வாரியத்துறையினர் நடவடிக்கை

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த விண்ண மங்கலம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள் ளது. இங்கிருந்து தான் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வினி யோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் திடீ ரென ஒருடிரான்ஸ்பார்மரில் தீ பற்றியது.

    அடுத்த வினா டியே தீ மளமளவென டிரான்ஸ்பார்மர் முழுவதும் பரவியது.

    இதன் எதிரொலியாக ஆம் பூர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. தகவலறிந்து சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையி னர் சில நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதன் பின் மின் வினியோகம் சீர் செய்ய மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    • தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேம்பாலம், சிவாஜி நகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரா நகர், உமாசிவன் நகர், வெங்கடாசலா நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டிசிடபிள்யூஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4, மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புசாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம்.

    வெங்கடேச பெருமாள் கோவில் பகுதிகள், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர் மற்றும் சிறுவர் ஜெயில் பகுதிகள் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • நாளை 6-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மணி மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அண்ணா நகர் பீடர் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர்,

    மேரிஸ் கார்னர் பீடர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர்,பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம்

    மங்களபுரம் பீடர், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர்,

    ஹவுசிங் யூனிட் பீடர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என் எஸ் போஸ் நகர் , தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ ஆபரேட் காலனி,

    நிர்மலா நகர் பீடர், நியூ ஹவுசிங் யூனிட், நட்சத்திர நகர், வி பி கார்டன், ஆர் ஆர் நகர், சேரன் நகர்,

    யாகப்பா நகர் பீடர், தியாகப்பா நகர் அருளானந்த அம்பாள் நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    மேலும் பொதுமக்கள் மின் குறித்த விவரங்களுக்கு 94 98 79 49 87 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×