என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், பல்வேறு இடங்களில் நாளை மின் நிறுத்தம்
- துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- ஏ.பி.சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர், ராமநாதன் ஆஸ்பத்திரி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் கீழ்கண்ட மின்வழித்தடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
ஸ்டேடியம் மின் வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ்ரோடு, ஆபிரகாம்ப ண்டிதர் நகர். திலகர்திடல் வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
வண்டிக்காரத்தெரு வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர் நகர், சோழன்நகர். சர்க்யூட்ஹவுஸ் வழித்தடத்தில் கல்லணைக் கல்வாய்ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோல் மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரகுமான்நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. கீழவாசல் வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாளக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். வ.உ.சி. நகர் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், ஏ.பி.சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர், ராமநாதன் ஆஸ்பத்திரி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவி த்துள்ளார்.