என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maintenance"
- பராமரிப்பு பணிகள் நடைெபறுவதால் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது.
- காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவாரூர்:-
திருவாரூர் மின்வாரிய இயக்குதல், பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையம் மற்றும் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம்,
தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயந்தாங்குடி, மாவூர் மற்றும் அடியக்கமங்கலம், துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி.காலனி, சிதம்பரம் நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 18-ந் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அழிஞ்சி வாக்கம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் பண்ணை, சாய் கிருபா நகர், கணேஷ் நகர், ஸ்ரீ நகர், விருந்தாவன நகர், இருளி பட்டு, சத்திரம், பாதி பகுதி அத்திப்பேடு, எம்கே கார்டன், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, சத்திரம், ஜெகநாதபுரம், அகரம், குதிரை பள்ளம், ஆமூர் காலனி, கங்கையாடி குப்பம், நெடுவரம் பாக்கம் காலனி, மாலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை இருளி பட்டு மின்நிலைய உதவி பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் 110/22 கி.வோ. துணைமின் நிலையத்தில் நாளை 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய விழுப்புரம் செயற்பொறியாளர் செந்தில்நாதன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின்தடை தேதி மாற்றியமைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரைஆலை பகுதி, பெரியசெவலை, துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பெண்ணைவலம்,டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரஞர், கரடிப்பாக்கம், செம்மார், வலையாம்பட்டு, பையூர், கொங்கராயனூர், திருவெண்ணணைநல்லூர், சேத்தூர், அமாவாசைபாளையம், தி.கொளத்தூர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஓட்டனந்தல், அண்டராயநல்லூர், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
- செயற்பொறியாளர் எம்.சிவகுரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெட்டிக்குளம், வெள்ளாழங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, ஆலமரத்துக்குப்பம், வடுக்குப்பம், பாக்கம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
- மேலத்திருப்புந்துருத்தி துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பேராவூரணி:
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 19ம் தேதி (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவைாறு:
திருவைாறு மற்றும் மேலதிருப்புந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை 19ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர், ஆவிக்கரை, தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூர், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழமை, அணைக்குடி, விளாங்குடி, திருவையாறு, புனவாசல், மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இத்தகவலை திருவையாறு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியக்ராஹரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், கங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்.எம்.எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி, மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கும்பகோணம் அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் வரும் 19ம் தேதி நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை குடந்தை நகர் முழுவதும், கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இத்தகவலை குடந்தை நகர் இயக்கமும், பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியளார் இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாதாந்திர பராமாரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், வல்லம்புதூர், மொன்மையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வள ம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
மன்னார்குடி:
மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிகாடு, கீழ திருப்பாலக்குடி, மேலதிருப்பாலக்குடி, மகாதேவபட்டினம், தளிக்கோட்டை, கண்ணாரப்பேட்டை, இடையர்நத்தம், ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- ரங்கராமன் நரசிம்மனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்தார்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பரா–மரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப் பது கண்டுபிடிக்கப்பட் டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத் துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே யானை–யின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்ட–ளையின் நிறுவனர் ரங்கரா–ஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப் படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித் தும், குறைகள் இருப்பதா–கவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித் துள்ள தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-
யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோ–திலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளி–நாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படு–கிறது.
பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியா–ளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையை–யும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறை–யில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சி–னைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரி–வித்துள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்து–வர்கள் குழு ஒன்று தாய் லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசம–டைவதற்கான சாத்தியக்கூ–றுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகி ழ குளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்ப–டுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.
நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளு–டைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள் கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்க–மான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.
எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவ–னிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள் ளார்.
- மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
- புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணிகள்
இந்த நிலையில் தற்போது புதிய அனல் மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
1-வது யூனிட்
இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
- மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிய அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .
இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.