என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், பல்வேறு இடங்களில் நாளை மின்நிறுத்தம்
- தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அண்ணாநகர் மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும், அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளிலும், மேரீஸ் கார்னர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் திருச்சி சாலை, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர் ஆகிய இடங்களிலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல் நிர்மலா நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர் ஆகிய பகுதிகளிலும், யாகப்பாநகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.