ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா?-கலெக்டர் ஆய்வு

கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கோப்புகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
கோப்புகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், ஒரத்தநாடு வட்டாட்சியர்சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரமேஷ், ரகுநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com