search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reddiyarpatti"

    • நெல்லையை அடுத்துள்ள பாளை ரெட்டியார்பட்டி உப மின் நிலையத்தில் காலாவதியான 11 கிலோவோல்ட் தாமரைச்செல்வி மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம்‌ நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு அங்கு புதிய மின்தடை சாதனம் பொருத்தப்பட்டது.
    • ரெட்டியார்பட்டி மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட தாமரை செல்வி மின் பாதையில் வினியோகம் பெறும் சிவந்திபட்டி, இட்டேரி, ஆலங்குளம், கொங்கந்தான் பாறை, மல்லகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்கும்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்துள்ள பாளை ரெட்டியார்பட்டி உப மின் நிலையத்தில் காலாவதியான 11 கிலோவோல்ட் தாமரைச்செல்வி மின் பாதைக்கு உண்டான மின்தடை சாதனம்‌ நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு அங்கு புதிய மின்தடை சாதனம் பொருத்தப்பட்டது.

    இதனை மின்னளவி சோதனை பிரிவு செயற்பொறி–யாளர் ஷாஜகான் தலைமையில் தாழையூத்து சிறப்பு பராமரிப்பு பிரிவு மற்றும் மின் அளவி சோதனை பிரிவு அதிகாரிகள், பணியாளர்கள் பரி சோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இந்த சாதனத்தால் ரெட்டியார்பட்டி மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட தாமரை செல்வி மின் பாதையில் வினியோகம் பெறும் சிவந்திபட்டி, இட்டேரி, ஆலங்குளம், கொங்கந்தான் பாறை, மல்லகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தங்கு தடையின்றி மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் கூறினர்.

    நிகழ்ச்சியில் செயற்பொறி யாளர் முத்துக்குட்டி

    (நகர்ப்புறம்) , நெல்லை சந்திப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் தங்க முருகன், ரெட்டியார்பட்டி பிரிவு மற்றும் ரெட்டியார்பட்டி உப மின் நிலைய உதவி மின் பொறியாளர் ( பொறுப்பு ) அபிராமிநாதன், சிறப்பு பராமரிப்பு பிரிவு உதவி மின் பொறியாளர் கருங்காட்டான், மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மழைக்காலங்களில் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் இச்சாலையை சூழ்ந்து உள்ளது.
    • பள்ளிக்கூடம் முடிந்து திரும்பிய மாணவர்கள் இந்த சாக்கடை நீரிலேயே நடந்து செல்லும் நிலை உள்ளது.

    நெல்லை:

    மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி சாலை மேலப்பாளையம் நகரத்தில் மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது.

    செப்பனிடாமல் உள்ளது

    இச்சாலையில் நாள்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து சென்று வரும் இச்சாலையை பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ளது.

    குறிப்பாக மழைக்காலங்களில் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாமல் இச்சாலையை சூழ்ந்து உள்ளது. நேற்று நெல்லை மாநகரில் பெய்த அரை மணிநேர மழைக்கு தாக்கு பிடிக்காமல் ரெட்டியார்பட்டி ரோடு கரீம்நகர் மற்றும் தாய்நகர் அருகே சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பள்ளிக்கூடம் முடிந்து திரும்பிய மாணவர்கள் இந்த சாக்கடை நீரிலேயே நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். மேலப்பாளையம் மண்டலம் சாக்கடை நீர் தேங்குவதை அப்புறப்படுத்தி இச்சாலையை விரைந்து சீர் செய்து புதிதாக வடிகால் ஏற்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • காமராஜர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவையொட்டி ரெட்டியார்பட்டி கு.ரா. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனையொட்டி ரெட்டியார்பட்டி கு.ரா. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நாற்காலிகள் மற்றும் மேஜை வழங்கப்பட்டது. மேலும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சரவணவேல், செல்வக்குமார் சார்பில் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி முன்னாள் ஊராட்சி செயலாளர் மணி பிள்ளை, பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிராம், மளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் பிரபாகர், முன்னாள் ஆசிரியர் ஆவரைகுளம் செல்வராஜ், மூலக்கரைப்பட்டி நகர துணை செயலாளர் எடுப்பல் காளிமுத்து, பாளையங்கோட்டை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மாயா ரகுராம், முத்தூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் நயினார், தருவை எம்.ஜி.ஆர். நகர் முன்னாள் கிளை செயலாளர் தருவை செல்லத்துரை, ரமேஷ், செல்வகுமார், முத்தூர் ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கொடிக்குளம் மாரியப்பன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×