என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் விநியோகம்"

    • சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இரவு 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியால், சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரம், மின் வயர்கள் அறுந்து விழுந்தன.

    இதற்கிடையே, புயலின் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின் வயர் அறுந்து மின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு நடத்தி வருகிறது என்றும், இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

    • தஞ்சாவூர் நகர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் நகர் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம் தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கோ-ஆப்பரேட்டிவ் காலனி, நியூ ஹவுசிங் யூனிட், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிசப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும், மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை கோர்ட்டு ரோட்டில் உள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேம்பாலம், சிவாஜி நகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரா நகர், உமாசிவன் நகர், வெங்கடாசலா நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர், டிசிடபிள்யூஸ் காலனி, களிமேடு-3 மற்றும் 4, மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம், ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர்நோன்புசாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம்.

    வெங்கடேச பெருமாள் கோவில் பகுதிகள், சேவியர் நகர், சோழன் நகர், கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர் மற்றும் சிறுவர் ஜெயில் பகுதிகள் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • 2021-2022-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித் துறை மந்திரி ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டில், அது நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும்.

    இவ்வாறு மத்திய எரிசக்தித்துறை மந்திரி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான மின் கடத்தியை மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • நாளை மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான மின்னல் கடத்தியை மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே நாளை(புதன்கிழமை) மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கானூர்பட்டி, சர்க்கரை ஆலை, குருங்குளம், நாகப்ப உடையான்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிப்பட்டி, சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் பால முருகன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், கொல்லாங்கரை, சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, வேங்கைராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர், மேலஉளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை தஞ்சை புறநகர் பகுதி மின்வாரிய உதவி செயற்பொ றியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    • ஆலங்குடியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் செய்யபடுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    ஆலங்குடி,

    வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் நடைபெறும் வடகாடு, புள்ளான்விடுதி, கீழாத்தூர், மாங்காடு, சூரன் விடுதி, கொத்தமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று வடகாடு உதவி செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

    • தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் 6-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்
    • காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக் கட்டிப்பொட்டல், ஒசர விளை, காட்டுவிளை, புதூர், ஈத்தா மொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன் விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்க விளை, புத்தன்துறை, ராஜாக்கமங் கலம், ஆலன் கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக் குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
    • குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை மின் கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கடை, கருங்கல், கொல்லங்கோடு, நம்பாளி, இரவிபுதூர்கடை, கிள்ளியூர், பள்ளியாடி, சூரியகோடு பிரிவுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் தளவாடங்கள் மாற்றும் பணி வருகிற 19-ந் தேதி முதல் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. 31-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு நாளும் பணி நடக்கும் நாளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.அதன்படி 19-ந் தேதி கொன்னறை, மங்காடு, பள்ளிக்கல், சரல்விளை, குழித்தோட்டம், திருஞானபுரம், பாலவிளை, மங்கலக்குன்றி, தொழிச்சல், வள்ளவிளை, இளம்பாலமுக்கு. மங்காடு, சரல்முக்கு, கோயிக்கத்தோப்பு, பணமுகம், பணமுகம், செறுகோல், அரசகுளம், கல்நாட்டி, குஞ்சாகோடு, பகுத்திக்காட்டு விளை, கோழிப்போர்விளை பகுதியிலும், 20-ந் தேதி மெதுகும்மல், குளப்புறம் பகுதி யிலும், 21-ந் தேதி மானான்விளை, கருக்குப்பனை, வடக்கன்கரை, கொல்லன்விளை, காக்கவிளை, வைக்கல்லூர், பருத்திக்கடவு, வாழ் வச்சக்கோஷ்டம், கொடு வனம்தோட்டம், முள்ளங்கனா விளை, இடவார், வளனூர் பகுதியிலும் மின் தடை ஏற்படும்.வருகிற 24-ந் தேதி பாத்திமாபுரம், பூவன்விளை, கோழிப்போர்விளை, இலவுவிளை, கல்லுக்கூட்டம், சடையன்குழி, மணக்காலை பகுதிக்கும், 25-ந் தேதி கொடுவனம்தோட்டம், மாராயபுரம், உதய மார்த்தாண்டம், மிடாலம், தையாலுமூடு, கோழிவிளை பகுதிகளுக்கும், 26-ந் தேதி கொல்லங்கோடு, மேடவிளாகம், மார்த் தாண்டன்துறை, நீரோடி, பாத்திமாபுரம், சுவாமியார்மடம், புலிப்பனம், விழுந்தயம்பலம், வெட்டுவிளை, ஆப்பிக்கோடு, நட்டாலம், இடவிளாகம் பகுதிகளுக்கும், 27-ந் தேதி ஓச்சவிளை, பேப்பிலாவிளை, ஓலவிளை, வாய்க்கால்கரை, விரிவிளை, வாவறை பகுதி களுக்கும், 28-ந் தேதி சங்குருட்டி, அடைக்காகுழி, செங்கவிளை, செம்முதல், தாழக்கான்வல்லி, செவ்வேலி, கூட்டமாவு, சூரியகோடு, பாத்திமாநகர் பகுதிகளுக்கும், 31-ந் தேதி தொண்டனாவிளை, தும்பாலி, மறுகண்டான்விளை, பிராகோடு, கடுவாக்குழி, சிராயன்குழி, குன்னம்பாறை, பழையகடை, வருக்கவிளை பகுதிகளிலும் முன்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை குழித்துறை மின்விநியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, வல்லான்குடிகாடு, கீழ திருப்பாலக்குடி, மேலதிருப்பாலக்குடி, மகாதேவபட்டினம், தளிக்கோட்டை, கண்ணாரப்பேட்டை, இடையர்நத்தம், ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, துளசேந்திரபுரம், பைங்காநாடு ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி :

    குழித்துறை உபக்கோட்டத்திற்குட்பட்ட கண்ணுமாமூடு, களியல், அருமனை பிரிவு களுக்குட்பட்ட சில பகுதிகளில் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின் வினியோக செயற் பொறியாளர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கண்ணுமாமூடு பிவுக்குட்பட்ட அம்பலக்கா விளை, கொட்டற கோணம், மாங்கோடு, ஐந்துளி, மற்றும் காஞ்சியோடு ஆகிய பகுதிகளிலும், களியல் பிரிவுக்குட்பட்ட பிலாங்காலை, பீலிகோடு மற்றும் ஆலஞ்சோலை ஆகிய பகுதிகளிகளிலும், அருமனை பிரிவுக்குட்பட்ட குஞ்சாலுவிளை, காவூர்கோணம், பாம்புவளச்சான், மற்றும் காரோடு ஆகிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×