search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mandous cyclone"

    • மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் மின் கம்பம் சாய்ந்தது, கொக்கிலமேடு, பேரூர் பகுதியில் மரம் சாய்ந்தது, வெண்புருஷம் பகுதிகளில் கடல் அரிப்பு போன்ற சேதங்கள் ஏற்பட்டது.
    • செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி.பிரதீப், சிறப்பு பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் "மாண்டஸ்" புயல் கரையை கடப்பதால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், போலீஸ் எஸ்.பி.பிரதீப், சிறப்பு பார்வையாளர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.

    இன்று அதிகாலை புயல் வலுவிழந்து கரை கடந்ததால் அதிகளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

    இருப்பினும் மாமல்லபுரம் அடுத்த தேவநேரியில் மின் கம்பம் சாய்ந்தது, கொக்கிலமேடு, பேரூர் பகுதியில் மரம் சாய்ந்தது, வெண்புருஷம் பகுதிகளில் கடல் அரிப்பு போன்ற சேதங்கள் ஏற்பட்டது. இதில் பாதிப்படைந்த அப்பகுதி மக்களை தற்காலிகமாக முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் மூன்று வேளை உணவுகளை மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் கணேசன், தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், கவுன்சிலர்கள் சுகுமார், மோகன்குமார், தேவிராமன் உள்ளிட்டோர் வழங்கி வருகிறார்கள்.

    மேலும் புயல் நிவாரணம் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    • ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
    • அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு 7 மணியளவில் கனமழை கொட்ட ஆரம்பித்து விடிய விடிய கொட்டி தீர்த்தது.

    இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2681 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 2005 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    புழல் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் 2508 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

    நீர்வரத்து 2795 கன அடி‌யாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 554 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தாக 287 கன‌அடி வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2864 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    அதேபோல் கண்ணன் கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 தற்காலிக நிவாரண முகாம்களில் 1560 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சென்னை:

    மாண்டஸ் புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

    சென்னையில் மாநகராட்சி சார்பில் 5 முகாம்களில் 318 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புதுமனை குப்பம்பள்ளி, ஏழுகிணறு, செயின்ட் சேவியர் பள்ளி, சி.எம்.எஸ். சாலை விநாயகர் கோவில், அறிஞர் அண்ணா பள்ளி, அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல் இன்று வழங்கப்பட்டன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 46 தற்காலிக நிவாரண முகாம்களில் 1560 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 860 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடுகலுர், அலம்பறை குப்பம், கானாத்தூர், மடையம்பாக்கம், கோட்டைகாடு, மாமல்லபுரம் கொக்கில மேடு, புளிக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 16 சிறப்பு முகாம்களில் 367 பேர் தங்கி உள்ளனர். மொத்தம் சுமார் 3600 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எனீஜினீயரிங் கல்லூரி அருகில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது.
    • பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. யாரும் பார்க்காததால் மரம் வெட்டி அகற்றப்படவில்லை.

    வேலூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக அதிகாலை 3 மணியிலிருந்து வேலூர் மாவட்டத்தில் பலத்தத காற்று வீசியது. மேலும் பரவலாக மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. அதிகாலை 4 மணிக்கு வேலூர் காட்பாடி குடியாத்தம் பொன்னை பகுதிகளில் கனமழை பெய்தது.

    பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைத்தது‌ இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் க்ரீன் சர்க்கிள் திருப்பதி தேவஸ்தானம் ஆகிய இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது. பாதாள சாக்கடை நடந்து வரும் பகுதிகளில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன.

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள சம்பத் நகரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அகற்றினர்.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழையில் 22 வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளது. அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருவதால் மழை சேதம் குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் எனீஜினீயரிங் கல்லூரி அருகில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மரம் ஒன்று சாய்ந்து சாலையில் விழுந்தது. பலத்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. யாரும் பார்க்காததால் மரம் வெட்டி அகற்றப்படவில்லை.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது. சாலையில் மரம் சாய்ந்து கிடந்ததை அறியாததால் வேகமாக வந்த பஸ் மரத்தின் மீது மோதியது. இதில் பஸ் ஜன்னல் ஓரம் இருந்த பயணி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    இது பற்றி தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மூலம் மரம் வெட்டி அகற்றப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

    ஜமுனாமுத்தூர், கலசப்பாக்கம் ஆரணி பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ததது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் இருந்தும் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 7.26 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளன.

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வெம்பாக்கம் 2.38, செய்யார் 1.59, வந்தவாசி 82.7, கலசப்பாக்கம் 50, ஜமுனாமரத்தூர் 45.5, ஆரணி 34.2, கீழ்பென்னாத்தூர் 34, போளூர் 25, சேத்பட் 22.2, திருவண்ணாமலை 13.6, தண்டராம்பட்டு 12.4, செங்கம் 9.8 மழை பதிவாகியுள்ளன. வேலூர் 36.5, காட்பாடி 23, குடியாத்தம் 24, கே.வி.குப்பம் 20.8, பேர்ணாம்பட்டு 1, திருவலம் 36.26, பொன்னை 36.2.

    • சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயல் இரவு 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் எதிரொலியால், சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரம், மின் வயர்கள் அறுந்து விழுந்தன.

    இதற்கிடையே, புயலின் தாக்கத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மின் வயர் அறுந்து மின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், சேதம் அடைந்த மின்கம்பங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் ஆய்வு நடத்தி வருகிறது என்றும், இன்று மதியத்திற்குள் 100% முழுமையாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    சென்னையில் மட்டும் 1,100 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

    • சென்னையில் நேற்று நள்ளிரவில் சுமார் 75 கி.மீ வேக புயல் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
    • மரங்கள், மின்கம்பங்கள், சிக்னல்கள் விழுந்த நிலையில் மடிப்பாக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    மாண்டஸ் புயல் காரணமாக மின் வயர் அறுந்து விழுந்து சென்னையில் ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.

    மடிப்பாக்கம் ராம்நகர் பகுதி 7வது தெரு பகுதியில் லட்சுமி(45) என்பவரும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

    நேற்று நள்ளிரவில் சுமார் 75 கி.மீ வேக புயல் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மரங்கள், மின்கம்பங்கள், சிக்னல்கள் விழுந்த நிலையில் மடிப்பாக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    • வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி செய்யாறு பகுதிகளில் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    மாவட்டம் முழுவதும் மேகம் மந்தமாக காணப்படுகிறது. வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளுக்கு பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்தது. இதனால் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

    வேலூரில் இருந்து தினந்தோறும் சென்னைக்கு 10 குளிர்சாதன அரசு பஸ் இயக்கப்படுகிறது. இன்று சுமார் 3 பஸ்கள் மட்டுமே சென்னைக்கு இயக்கப்பட்டன. மேலும் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே சென்றனர்.

    பயணிகள் வருகைக்கு ஏற்ப சென்னைக்கு பஸ் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கண்காணிப்பு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி முழுவதும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புயல் கடக்கும் வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
    • தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முடுக்கிவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பாதுகாப்பு மையங்களில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன் உடன் இருந்தனர்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் திருவள்ளூர், பேரம்பாக்கம், திருவூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை, பொன்னேரி ஆகிய 9 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் இன்று காலை திருவள்ளூர் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்ட கயிறு, ரப்பர் படகு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    மேலும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    • பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.
    • திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

    சென்னை:

    மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் இன்று காலையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பகுதியை தாண்டி வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதேபோல திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    மாண்டஸ் புயலையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பொதுமக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாலம் சேதம்

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாலம் மாண்டஸ் புயலால் சேதம் அடைந்துள்ளது. ரூ.1½ கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் சில நாட்களிலேயே சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாண்டஸ் புயல் வலுவிழுந்து கரையை கடப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
    • வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் அதி கனமழை பெய்யும்.

    சென்னை:

    வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருந்தது.

    பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு "மாண்டஸ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர புயல் இன்று காலையில் புயலாக வலுவிழுந்து கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.

    அதன்படி தீவிர புயலாக இருந்த மாண்டஸ் இன்று காலையில் புயலாக வலுவிழுந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது 65 கி.மீ. வேகத்தில் இருந்து 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

    இன்று காலை நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும் இலங்கை திரிகோணமலைக்கு வடக்கு-வடகிழக்கே 240 கி.மீ. தூரத்திலும், காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்றும் அதே நேரத்தில் கடல் சீற்றம், கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் வலுவிழுந்து கரையை கடப்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் அதி கனமழை பெய்யும்.

    நாளை (10-ந்தேதி) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று காலை நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக இருந்து தற்போது வலுவிழக்கிறது. அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக் கூடும்.

    தற்போது 13 கி.மீ. வேகத்தில் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு முதல் அதிகாலை வரைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும்- புதுச்சேரிக்கும் இடையே மாமல்லபுரத்தையொட்டி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் இரவு முதல் மிக கனமழையும் பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடக்க இருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதி நாளை காலை வரையில் கொந்தளிப்புடன் காணப்படும். அதே போல மேற்கு மத்திய வங்க கடல் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் உள்ளது.

    தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கை கடல் பகுதியில் கடல் சீற்றம் நாளை வரை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புயல் கரையை கடக்கும் போது வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் கடல் அலை 2 அடி உயர வாய்ப்பு உள்ளது.

    மேலும் தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதே போல் இன்று மாலை முதல் நாளை காலை வரை மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதன் பின்னர் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநகர பேருந்து சேவையும் குறைக்கப்பட்டுள்ளது.
    • சாலைகளில் குறைந்த அளவிலேயே நடமாட்டம் இருந்தது.

    சென்னை:

    மாண்டஸ் புயலால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது.

    ஊட்டியில் இருப்பது போன்று வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் கம்பளி உடைகளை அணிந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாநகர பேருந்து சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் குறைந்த அளவிலேயே நடமாட்டம் இருந்தது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையோர டீ கடைகள் பல மூடிக்கிடந்ததை காண முடிந்தது. சில கடைகள் மட்டுமே திருந்திருந்தன. சாலையோரத்தில் காய்கறி, பூ வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களும், சிறு வியாபாரிகளும் கடைகளை திறக்காமல் வைத்திருந்தனர். இதனால் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    ×