search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் சாரல் மழை- கடுங்குளிரால் மக்கள் அவதி
    X

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் சாரல் மழை- கடுங்குளிரால் மக்கள் அவதி

    • கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • கொடுமுடி, பவானி, பு.புளியம்பட்டி, சென்னிமலை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, பர்கூர், பெருந்துறை, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சாரல்மழை பெய்து வருகிறது.

    ஈரோடு:

    மாண்டஸ் புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதே போல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் வீரர்கள் பேரிடர் மீட்பு கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசிவருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே போல் கொடுமுடி, பவானி, பு.புளியம்பட்டி, சென்னிமலை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, பர்கூர், பெருந்துறை, சிவகிரி உள்பட மாவட்டம் முழுவதும் சாரல்மழை பெய்து வருகிறது.

    மேலும் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் கடுங்குளிர் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், சுவட்டர் அணிந்த படி சென்றனர். தாளவாடி, பர்கூர் மலை பகுதிகளில் பலத்த காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-3, கோபி செட்டிபாளையம்-1.20, பவானி-1.40, கொடுமுடி-2, சென்னிமலை-2, மொடக்குறிச்சி-3.4, எலந்தகுட்டை மேடு-1.8, கொடிவேரி-3, மொத்தம் 17.80 மி.மீ.மழை பதிவாகி இருந்தது.

    Next Story
    ×