search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை- புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை- புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு

    • திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
    • தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முடுக்கிவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பாதுகாப்பு மையங்களில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன் உடன் இருந்தனர்.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் புயல் மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் திருவள்ளூர், பேரம்பாக்கம், திருவூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை, பொன்னேரி ஆகிய 9 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் இன்று காலை திருவள்ளூர் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வு செய்தார். அப்போது தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்ட கயிறு, ரப்பர் படகு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    மேலும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    Next Story
    ×