என் மலர்
நீங்கள் தேடியது "Thirukanurpatti"
- திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான மின் கடத்தியை மாற்றும் பணி நடைபெற உள்ளது.
- நாளை மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி துணை மின் நிலையத்தில் பழுதான மின்னல் கடத்தியை மாற்றும் பணி நடைபெற உள்ளது.
எனவே நாளை(புதன்கிழமை) மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கானூர்பட்டி, சர்க்கரை ஆலை, குருங்குளம், நாகப்ப உடையான்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, தோழகிரிப்பட்டி, சுந்தராம்பட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் பால முருகன் தெரிவித்துள்ளார்.
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி சேர்ந்தவர் நடராஜன் (வயது 23). கடந்த சில மாதங்களாக நடராஜன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி இரவு நடராஜன் அவரது வீட்டின் அருகே எலி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்து கிடந்துள்ளார் .உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நடராஜன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






